(Reading time: 6 - 12 minutes)

சிறுகதை - விண்கல் - ஷிரின்

வள் தன் சிறு வயதில் ஓர் இரவில் தன் தந்தையுடன் சென்று கொண்டிருந்தாள்.விளையாடிக் கொண்டே சென்றவள் எதார்த்தமாக மேலே பார்த்தாள்..ஒரு நட்சத்திரம் கீழே விழுந்தது.

'அப்பா.. நட்சத்திரம் கீழே விழுது!!'

'அது நட்சத்திரம் இல்லம்மா..எரிகல்'.

'எரி கல்லுன்னா..?'

'வானத்துல நிறைய விண்கற்கள் இருக்கும்..ரெண்டு கல்லு ஒன்னா மோதும்போது உராய்வு ஏற்பட்டு தீ புடிச்சு கல்லு எரிஞ்சு விழும்..'

'எங்கே விழும் ?'

'அது பூமிக்கு வர்றதுக்குள்ள எரிஞ்சு முடிஞ்சு சாம்பலாகிப் போயிறும்.'

அன்று இரவு தூங்கும் வரை அந்த எரி கல்லைப் பற்றித் தான் சிந்தித்துக்கொண்டு இருந்தாள்.அப்படியே தூங்கிப் போனாள்.அதன் பிறகு இரவு நேரங்களில் அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொள்வாள்..எரிகல் ஏதேனும் விழுகிறதா என்று.

 மறுநாள் இரவு வீட்டில் மின்சாரம் தடைபட்டது..காற்று வாங்க வாசலில் வந்து அமர்ந்த தந்தையுடன் தானும் வந்து அமர்ந்தாள்.அந்த இருளில் நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாக ஜொலித்தது.

'நட்சத்திரத்திற்கு போக முடியுமா அப்பா ?'

'முடியாதுமா என்றார்.'

'ஏன் ?'

'அது நாம போக முடியாத அளவு தூரத்துல இருக்கு..அது மட்டும் இல்ல நட்சத்திரங்கிறது நம்ம சூரியன் மாதிரி..எரிஞ்சுக்கிட்டு இருக்கு..அதனாலதான் நம்ம கண்ணுக்கு வெளிச்சமா தெரியுது என்றார்.'

 தன் தந்தைக்கு எல்லாமே தெரிகிறது என வியந்தாள்..அதே வியப்புடன் வானத்தையும் பார்த்துக்கொண்டாள்..அவளுக்கு அந்த நட்சத்திரங்களை மிகவும் பிடித்தது.இரவு நேரங்களில் வானத்தை வேடிக்கை பார்ப்பது அவளுக்கு விருப்பமான ஒன்றாகியது.

 வள் தன் இளமைப்பருவத்தில் காதல்வயப்பட்டாள்..அவன் மிகவும் கண்ணியமாணவன்,அவன் அவளுக்கு அவளையே நேசிக்கக் கற்றுக்கொடுத்தான்,அனைவரையும் நேசிக்க கற்றுக்கொடுத்தான், நேர்மறை எண்ணங்களை விதைத்தான், அனைத்து இன்பங்களிலும் துன்பங்களிலும் உடனிருந்தான்.அலைபேசியில் மட்டுமே அவர்கள் பேசிக்கொள்வார்கள் என்றாலும் அப்படியும் உடனிருக்கலாம் என்பதை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.