(Reading time: 10 - 19 minutes)

" முதலாளிக்கும் அவர் சம்சாரத்துக்கும் என்னிடம் பிரியம் உண்டு, ஊர்க்காரங்க! அவங்களோட நெருங்கிப் பழகுவேன், அதனாலே என்னிடம் ரகசியமா சொல்வாங்க!"

  " நீ பேசாம, அவங்க வீட்டிலேயே தங்கிடறதானே?"

 ரம்பா தலையை குனிந்துகொண்டாள்.

 " என்னாச்சு?"

 " முதலாளியை அவங்க சம்சாரம் நம்பமாட்டாங்க, ஏன்னா, அவருக்கு சபலபுத்தி! அதனால, அந்தம்மாதான், என்னை எங்கேயாவது வெளியிலே தங்கிக்கச் சொல்லி விரட்டிவிட்டுட்டாங்க!"

  " ஓ! அந்தப் பிரச்னையா?"

 " நீங்க, நல்லவங்க, உங்க வீட்டு ஐயாவை அப்படி கீழ்த்தரமா சந்தேகப்பட மாட்டீங்கன்னு தெரியுது, ஏன்னா, என்னை உங்களோட தங்கச் சொல்லிட்டீங்களே.."

   சங்கரன் பெருமிதம் பிடிபடாமல், தலை நிமிர்த்தி சிரித்தான்.        " உம்...அவ பாராட்டினது என்னை, உங்களை இல்லே"        " ஓ.கே. ஓ.கே."       " மன்னிச்சுக்குங்க, ஏதோ தெரியாம பேசிட்டேன்........."        " நாங்களும் அதே காரணத்துக்காகத்தான், உன்னை எங்களோடு தங்க வைச்சுக்கிறோம், ஏன்னா, வெளியிலே லோலோன்னு நாக்கை தொங்கப்போட்டு அலைகிற ஆம்பளைங்க, அதிகம்! உன்னை உருத் தெரியாம, குலைச்சிடுவாங்க! நீ தனியா வெளியிலே எந்தக் காரணத்துக்காகவும் போகாதே, புரியுதா?"

" நான் இப்பவே போய், என் பெட்டி, படுக்கையை எடுத்துண்டு வந்துடறேன்.."

" தனியா போகாதே! நம்ம ஐயா உன்னுடன் வருவாரு, ரெண்டு பேருமா போய்ட்டுவாங்க........!"

  " சரிம்மா!"      " போங்க, ரம்பாவுடன்! சீக்கிரம் வந்திருங்க, ஏகப்பட்ட வேலையிருக்கு.."        சங்கரன், ரம்பாவுடன் கிளம்பினான்.

 வெளியே சாலைக்கு வந்ததும், ரம்பா சிரித்தவாறே, சங்கரனை நெருங்கி வந்து, சொன்னாள். " அம்மா உங்களை ஏன் என்னுடன் அனுப்பினாங்கன்னு எனக்கு தெரியும்.....!" சங்கரன் அவளை கேள்விக்குறியுடன் பார்த்தான். " ஐயா! என்னை, அம்மா இன்னும் நம்பலே...உங்களை நம்பறாங்க, என்னை மட்டும் ஏன் நம்பமாட்டேங்கறாங்க?" என்றவாறே, சங்கரனின் கையுடன் தன் கையை கோர்த்துக் கொண்டாள்.

   சங்கரனின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது. அதை ரசித்து ஆனந்தத்தில் மிதந்தான்.

 ரம்பாவின் முகத்தில் வெற்றிக்களிப்பு! " என்னை பிடிச்சிருக்கா?" சங்கரனுக்கு என்ன பதில் சொல்வதெனப் புரியவில்லை.

   ரம்பா, இதுதான், அவனை வசப்படுத்த சரியான சமயம் என உணர்ந்து, அவன் இடுப்பை தன் கையால் சுற்றி இறுக்கினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.