(Reading time: 10 - 19 minutes)

     நாட்கள் வளர்ந்த வேகத்தில் தொற்றும் வளரவே, ஊரடங்கு தொடர்ந்தது!

    சங்கரன்-ரம்பா விளையாட்டுகளும்கூட!

சங்கரனின் பலவீனமான நேரத்தில், அந்த ரகசியத்தை அவனிடமிருந்து தெரிந்து கொள்ள ரம்பா திட்டமிட்டாள்.

 ஆனால், வாணி மிகவும் கவனமாக இருந்ததால், ஏதும் செய்ய முடியவில்லை!

  என்னவாக இருக்கும்? என யோசித்தே, ரம்பாவுக்கு பைத்தியம் பிடித்தது!

   சங்கரனோ, வாயை திறந்து பேசவே மறுக்கிறான்.

  ஒருநாள், வாணி குளியலறையில் இருந்தபோது, ரம்பா ரகசியமாக சங்கரனிடம் கேட்டாள். " ஏன்யா! உங்க திட்டம் என்னன்னு சொல்றியா இல்லே, நமக்குள்ளே தகாத உறவு இருக்கிறதா, அம்மாவிடம் சொல்லிடவா?"

    " நம்பும்மா! இதிலே சூது ஏதுமில்லே, வாணிக்கு உடம்பு சரியில்லே, அவளாலே எனக்கு மனைவியா சுகம் தரமுடியலே, என்மீது உள்ள பரிவில், இந்த ஏற்பாட்டை அவள் செய்திருக்கிறாள். என்னை நம்பலேன்னா, நீ அவளையே கேள்!"

 " ஆமாம், ரம்பா! அவர் சொல்றது உண்மை! நான் அவரை உயிருக்குயிரா காதலித்து கல்யாணம் செய்துகிட்டேன், பிறகுதான் தெரிந்தது, நான் தாம்பத்ய சுகத்துக்கு லாயக்கில்லாதவள்னு!

 ஒரு வருஷமா, இரண்டா? பதினைந்து வருஷம்!

  வேற ஒருத்தியை கல்யாணம் செய்துக்க அவரை எவ்வளவோ கெஞ்சினேன்!

    அவர் மறுத்துட்டார்! ஏன்னா, வருபவள் என்னை விரட்டிடுவாளோங்கிற பயம்!

    அதனாலேதான் இந்த ஏற்பாடு!

  உனக்கு சம்மதம்னா, நீயே அவரை கல்யாணம் செய்துகொள்! ஒரே ஒரு நிபந்தனை!

   எனக்கு இந்த மனவேதனையினாலேயே, உடம்பும் கெட்டுப்போச்சு!

  உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன், என்னை ஒரு அனாதை இல்லத்திலே சேர்த்துவிடு! அது போதும்!

ரம்பா! இந்தா! இந்த வீட்டுச் சாவி! இனி நான் இங்கே இருப்பது, உன்கையில்!"

   ரம்பா நம்பமுடியாமல் திகைத்து நின்றாள்.

 சிறிதுநேரம் கழித்து, சுயநினைவு வந்து, பேசினாள்.     " அம்மா! ஒரு சின்ன தப்பு பண்ணிட்டீங்க, இந்த உண்மையை முதலிலேயே சொல்லியிருக்கக் கூடாதா? கையிலே வெண்ணையை வைத்துக்கொண்டு, நெய்க்கு அலைந்தாற்போல, தப்பு பண்ணிட்டீங்களே!

   நல்லவேளை! இப்போதாவது சொன்னீங்களே!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.