(Reading time: 3 - 6 minutes)

இன்ஸ்பெக்டரும் அந்த வேனில் ஏறிக்கொண்டார்!

வேன் டிரைவரிடம் வேனை, 'அம்மா உணவகம்' போகச் சொன்னார்!

" முனியா! கோவில் கொஞ்ச நாளுக்கு மூடியிருக்கும், அதுவரையில் நீ 'அம்மா உணவக'த்தில் சாப்பிடு, இனாமா போடுவாங்க! ஆமா, என் வீடு கோவில் பக்கத்திலேதானே இருக்கு, உனக்குத்தான் என்னை தெரியுமே, என் வீடு வந்திருக்க வேண்டியதுதானே!"

வேன் நின்றது, முடவன் இறக்கிவிடப்பட்டான்.

'அம்மா உணவக'த்தில் சிப்பந்திகளிடம், இன்ஸ்பெக்டர் பேசினார்.  " இத பாருங்க! இந்த முடவனுக்கு ஊரடங்கு முடியும் வரையிலும், சாப்பிட ஏதாவது கொடுங்க! இவன் இங்கேயே ஒரு ஓரமா கிடப்பான், விரட்டாதீங்க! சரியா?"  " முனியா! நான் தினமும் வந்து பார்த்துக்கிறேன் உன்னை! கவலைப்படாதே!"

இன்ஸ்பெக்டர் போய் விட்டார்!

முடவன் தீவிரமாக யோசித்தான், " இவரை நான் இதுவரை பார்த்ததேயில்லை, இந்த அளவுக்கு என்மீது அன்பு காட்டுகிறாரே, எனக்கு புரிந்துவிட்டது, மீனாட்சி அம்மாவை அழைத்தேன், அந்த அம்மாதான் இந்த உருவத்திலே வந்து, 'அம்மா' உணவகத்திலே என் பசி தீர வழி செய்திருக்கிறாள்!, அம்மா! நீதானே உலகத்தின் தாய்! அதுதான் உன் குழந்தையின் பசி தீர்க்க ஓடி வந்துவிட்டாய்!

இந்த நினைவு உள்ளவரையில், எனக்குப் பசி எடுக்காது, அம்மா!"

முடவனின் கையில் விழுந்த உணவுப் பொட்டலம் முனியனின் கண்ணீர் பட்டு நனைந்தது!

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.