பாதுகாப்பு சோதனையறையை கண்டதும் ப்ரியாவிற்கு சற்றே ஆச்சர்யமாய் இருந்தது. அங்கு ஆண்கள் பெண்கள் என்று இருபாலர்க்கும் தனிதனி சோதனை அறைகள் இருந்தன. அவ்விறு அறைகள் முன்பும் நீண்ட வரிசையில் ஆட்கள் காணப்பட்டனர். ப்ரியா சோதனையறையை நெருங்கும் முன்னரே அங்கிருந்த பாதுகாவலர் அவளின் கைபேசி மற்றும் கைபையை அருகிலிருக்கும் ஒரு டப்பாவில் வைக்கச் சொன்னார். பயணிகள் கொண்டு வரும் பெரிய பெட்டிகளுக்கு நுழைவு வாயிலில் சோதனை செய்கின்றனர், சிறிய பைகள், கைபேசி மற்றும் மடிக்கணினி போன்ற மின்னணு பொருள்ககளை இங்கு சோதனையறையில் பரிசோதனை செய்யப்படுகிறது. இத்துணை பாதுகாப்பையும் மீறி தங்கம், வெள்ளி போன்ற கடத்தல்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்று யோசனை செய்து கொண்டிருந்தாள்.
அதற்குள் வரிசை கொஞ்சம் நகரவே அவளும் முன்னோக்கி நகர்ந்து சென்றாள். சோதனையறை அருகில் வெளிநாட்டு பயணிகள் சிலர் இருந்தார்கள். அவர்கள் இங்கு என்ன வேலையாய் வந்திருப்பார்கள் என்று எண்ணி கொண்டே வலது புறம் திரும்பினாள். அங்கு சிலர் குடும்பமாய் தங்கள் குழந்தைகளுடன் ஆங்காங்கே அமர்ந்து இருந்தனர். ப்ரியா மனதிற்குள் இந்த குழந்தைகள் எல்லாம் எவ்வளவு அதிஷ்டம் செய்தவர்களாய் இருப்பார்கள். இந்த சிறு வயதிலேயே விமானத்தில், அதுவும் அவர்கள் குடும்பத்துடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்திருகிறது. நமக்கு அச்சிறுவயதில் இரயிலில் பயணம் செய்யக்கூட முடியாத வறுமை சூழ்நிலையில் இருந்தோம் என்று சில நொடிகள் அவளின் குழந்தை பருவ ஏழ்மை நிலையை நினைத்து வருந்தினாள்.
சோதனையறையில் ப்ரியாவை பரிசோதிக்கும் முறை வந்தது. உலோகம் கண்டுபிடிக்கும் கருவியை வைத்து அவளின் தலை முதல் கால் வரை பரிசோதனை செய்த பின்னர் அவளது டிக்கெட்டில் எல்லாம் சரி பார்க்கப்பட்டது என்ற முத்திரையும் வைத்து இனி நீங்கள் விமானம் இருக்கும் இடம் செல்லலாம் என்றார் அவளை பரிசோதித்த பெண் பாதுகாவலர். சோதனையறையில் இருந்து வெளியில் வந்தவுடன் அவள் முதல் வேலையாய் தன் கைப்பை மற்றும் கைபேசியை தேடினாள். அது பத்திரமாய் அவள் போட்டு வைத்திருந்த சிவப்பு டாப்பாவில் அப்படியே இருந்தது. அதை எடுத்துக்கொண்டு அப்பாடா இப்போதாவது விமானம் இருக்கும் இடத்திற்கு செல்ல அனுமதித்தார்களே என்று நினைத்துக் கொண்டு அவ்விடம் நோக்கி ஆர்வமுடன் வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.
ஒருவழியாய் ப்ரியா எல்லா சோதனை விதிகளையும் முடித்த பின்னர் விமானம் இருக்கும் இடத்தை அடைந்திருந்தாள். முதல் முறையாய் விமானத்தை மிக அருகில் பார்க்கிறாள். சிறு வயதில் விமானம் பறப்பதை பக்கத்துக்கு வீட்டு நண்பர்களுடன் மொட்டை மாடியில்