(Reading time: 10 - 19 minutes)

சொல்லேன்!

 " குமரா! எப்படிடா  இருக்கே? ரொம்ப வருஷம்  ஆச்சு, பார்த்து...."

திரும்பிப் பார்த்தேன்,  என் பள்ளிக்கூட தோழன்சேகர்!

" என்னை விடுடா, உன்  பொழப்பு எப்படிடா ஓடுது?"

" குமரா! பொழப்புஉழப்புன்னு அசிங்கமால்லாம்  பேசாதே! என்ன தொழில்னு  அழகா கேள்!"

 " சரிடா, சேகர்! என்ன  தொழில்?"

" உடலுறுப்பு தானம்  ஏற்பாடு செய்துதரும் ஏஜண்ட்  ஆக இருக்கேன், லட்சக்  கணக்கிலே பணம் புரட்டறேன், பெரிய டாக்டர்போலீஸ் அதிகாரிங்க, அரசு  அதிகாரிங்க, ஆஸ்பத்திரி  ஓனருங்க எல்லாரும் தோஸ்த்!  வா! அப்படி உட்கார்ந்து  பேசுவோம்!"

 சேகர் தோற்றத்திலும்  வெள்ளையும் சொள்ளையுமா  இருந்தான். முகத்திலும் ஒரு  பணக்கார 'கெத்து' தெரிந்தது!

 பள்ளி நாட்களில் அவனுக்கு நான்தான் ஹீரோ!  விளையாட்டுக்களில், அவன்  என்னைவிட சற்று பின்தங்கிய  நிலையில் இருப்பான்.

 அவன் அப்பா, வாடகை  வீடு புரோக்கர்! வீட்டு ஓனர்வாடகை தருபவர் இருவரிடம்  இருந்தும் ஒரு மாத வாடகை  கமிஷனாகப் பெறுவார்!

  மத்தியதர வர்க்கத்தில்  சற்று முன்னேறிய குடும்பம்.  வீட்டிலிருந்து, ஏதாவது நல்ல  பொருள் எடுத்து வந்து என்  நட்பை வலுப்படுத்திக்கும்  அளவுக்கு என்னை மதிப்பான்.

 அவனே இப்போது என்  உதவிக்கு வந்திருப்பது, என்  கேள்விக்கு விடை கிடைத்து  விட்டது போலிருந்தது!

   என்னை லட்சாதிபதி  ஆக்கவே இறைவன், அன்று  நூறு பேரில் என்னை மட்டும்  காப்பாற்றி யிருக்கிறான்.

   உற்சாகமாக, அவன்  அருகில் அமர்ந்து தோளில்  கைபோட்டேன்!

" முதல்லே, கையை  எடு! யாராவது பார்த்தால், என் இமேஜ் கெட்டுப்போகும்!

அங்கே தெரியுது, பார்!  அதுதான் என் டூவீலர்! ரெண்டு லட்ச ரூவா, விலை!  இப்ப புரியுதா, நம்ம லெவல்!

இந்த லெவலுக்கு நீயும்  வரணும்னு ஆசைப்பட்டால்ஒழுங்கா நான் சொல்றதைக்  கேட்டு நடந்து நாலு காசுபார்க்கிற வழியைப் பார்!

என்ன சொல்றே?"  " சரி, தலைவா!"

" தப்பு, தப்பு! இந்த  'தலைவா' அது இது எல்லாம்  லோ கிளாஸ்! 'சார்!'னு என்னை இனிமே கூப்பிடுநாலுபேர் என்னுடன் இருக்கும்போது! தனியாஇருந்தால், சேகர்னு சொல்!"

   " சரி, சார்!"       "ஆங்...அது! இப்ப, விஷயத்துக்கு வரேன், ஆமாம், உன் கூடப்பிறந்த  வங்க

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.