(Reading time: 10 - 19 minutes)

" இவனோட கிட்னிஅந்த துபாய்க்காரனுக்குப்  பொருந்தும். நீ நிறைய  பணம் கறந்து என்னையும்  கவனிச்சிக்க, சரியா?"

சேகர் தலையாட்டி  சம்மதம் தெரிவித்துவிட்டுகுமரனை அங்கேயே இருக்க  சொல்லிவிட்டு, எங்கோ  போனான்.

 அவனுக்குத் தெரியாதுகுமரன் அவனை தொடர்வது!

" ஷேக்! யு ஆர் லக்கி!  ஆள் கிடைச்சிட்டான். நீ  பிழைச்சுக்குவே, இன்னும் ஒரு நாற்பது, ஐம்பது வருஷம்  வாழப்போறே!

ஆனா, எதிர்பார்த்ததை  விட, செலவு அதிகமாகுமேபரவாயில்லையா?"

" பணத்தைப் பற்றி  கவலைப்படாதே! எவ்வளவு  ஆனாலும், தரேன் இப்பவே!  ஆளை விட்டுடாதே!"

 " பத்து லட்சம் ரூவா  ஆகுமே, தரியா?"

ஷேக் அருகிலிருந்த  உறவினரிடமிருந்து பணத்தை  வாங்கிக் கொடுத்தான்.

அதை சேகர் எண்ணிப்  பார்த்து, தன் பையில் போட்ட  பிறகு, திரும்பிப் பார்த்தான்!

 குமரன்!  வசமாக மாட்டிக்கொண்டது  உணர்ந்ததும், குமரனை  ஷேக்கிடம் அறிமுகம் செய்து  வைத்தான்.

குமரனை ஷேக் கை  எடுத்து கும்பிட்டான்.

" ஏதாவது உனக்கு நான் செய்யணுமே, சொல்!"

" என் குடும்பம் ரொம்ப  கஷ்டப்படுது, ......."

ஷேக், தன் உறவினரை  உடனே, குமரனின் வீட்டுக்கு  சென்று தேவையானவைகள்  அனைத்தையும் செய்துதர  பணித்தான்.

  குமரன் உடனே தன்  வீட்டுக்கு அவருடன் சென்று  நிறைய பணம் வாங்கித்  தந்துவிட்டு, ஆஸ்பத்திரி வந்து, அறுவை சிகிச்சைக்கு  தயாரானான்.

சேகருக்கும் மகிழ்ச்சி!  எக்கச்சக்க வருமானம் வந்து  உள்ளதே!

எல்லாம் நல்லபடியாக  முடிந்து, ஷேக் துபாய் திரும்ப  தயாராகி, குமரனை தன்னுடன் துபாய் வரும்படி  அழைத்தான்!

குமரன் இப்போதுதான்  முழுமையாக உணர்ந்தான்தன் வாழ்வில் மிகப் பெரிய  திருப்பம் ஏற்படுத்தவே, ஈசன்  அன்று விமான விபத்தில்  நூற்றில் ஒருவனாக தன்னை காத்து அதிசயம் புரிந்ததின்  காரணத்தை!

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.