(Reading time: 9 - 17 minutes)

சிறுகதை - பங்குப் பிரச்னை - ரவை

ரொம்ப நாளாக, பெரியவர் புலம்புகிறார்: " டேய்! நான் சொல்றதைக் கேளுங்கடா! எனக்கோ வயசு ஆயிடுத்து, எந்த நேரமும் என்னை பகவான் கூப்பிடுவார் நான் போயே ஆகணும்!

  இருக்கிற சொத்து எல்லாம் என் பெயரிலே இருக்கு, உயில் எழுதாம, போய்ட்டா, உங்களுக்குள்ளே சண்டை வந்துடும், வக்கீலை கூப்பிடறா!"

   கொரோனா தொற்று நோய் பரவியபிறகு, அந்தப் புலம்பல் தொணதொணப்பாக மாறியது!

  பிள்ளைகளுக்கும், சற்று பயம் வந்தது!

 ஏதாவது, திடீர்னு ஆகி விட்டால், பின் வருந்திப் பயன் இல்லே என்று ஏகமனதாக முடிவு எடுத்து, வக்கீலை உடனே வரவழைத்து, "அப்பா! இவர்தான் வக்கீல்! இவரிடம் உன் உயில்பற்றி சொல்லு! அவர் விவரமாக எழுதித் தந்து உனக்கு படித்து காட்டி உன் கையெழுத்தை வாங்கிப் பார்!

 அப்பா! உன் மனசிலே என்ன தோன்றுகிறதோ, அதை தைரியமா சொல்லு! எங்களுக்காக உன் முடிவை மாற்றிக்காதே!

  உன் முடிவு எதுவாக இருந்தாலும், நாங்க அதை மனதார ஏத்துக்கிறோம்!"

 வக்கீலையும் அப்பாவை யும் தனி அறையில் விட்டு விட்டு, கதவை உட்புறத்தில் தாளிட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு, பிள்ளைகள் வெளியேறினர்.

 பெரியவருக்கு மூன்று மகன், ஒரே ஒரு மகள்!

 மகள் தன் கணவனுடன் அருகிலே வேறு வீட்டில் வசிக்கிறாள்.

  பிள்ளைகள் மூவரும், தந்தையுடன் அந்த பெரிய வீட்டிலே, தங்கள் குடும்பத்துடன் வாழ்கிறார்கள்

  பெரியவர் தன் முயற்சி யால், சேர்த்த சொத்துக்கள் அவை!

   ஆகவே, அவற்றை அவர் விருப்பம்போல எவர் பெயருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம்.

    நான்கு வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுப்பதில் சிக்கல் எதுவும் ஏற்பட எந்த அவசியமும் இல்லை!

   ஏனெனில், அசையா சொத்துக்கள் தலைக்கு ஒன்றாக தர வசதியாக, நாலு வீடுகள் உள்ளன!

   பரப்பளவில், ஏறக்குறைய, எல்லாமே ஒன்றுதான்! எல்லாமே அதே தெருவில்தான் உள்ளன!

    அசையும் சொத்தோ பல கோடிகள்! சம அளவில் பிரித்துக் கொடுத்துவிடலாம்!

  தவிர, மூன்று பிள்ளை களுமே நன்கு படித்து பெரிய பதவியில் அமர்ந்து நிறைய சம்பாதிக்கிறார்கள்.

   மகளின் கணவனும், அதே போல, பெரிய இடத்துப் பிள்ளை என்பதோடு, நிறைய

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.