(Reading time: 9 - 17 minutes)

சம்பாதிக்கும் வியாபாரி!

    பிள்ளைகளின் மனைவிகளும், பெரிய வீட்டுப் பெண்கள்!

    பெரியவருக்கும் தன் வாரிசுகள் நால்வர்மீதும் நல்ல பாசம் உண்டு!

  ஆகவே, உயில் எப்படி எழுதப்பட்டாலும், அதனால் எந்தவித விரோதமும் ஏற்பட சந்தர்ப்பம் இல்லை!

நேரம் அதிகமாகவே, பெரியவருக்கும் வக்கீலுக்கும் சாப்பிட ஏதாவது தரலாமென, அறையின் கதவை தட்டினர்.

    வக்கீல்தான் கதவை திறந்தார்!

" சாப்பிட ஏதாவது....."   " உயில் எழுதியாகிவிட்டது. சாட்சி கையெழுத்து போட, ரெண்டுபேர் வேண்டும்....."   " யார் வேண்டுமானாலும் போடலாமா? உறவினர் அல்லாதவர்தான் போடணுமா?"    " பெரியவருக்கு தெரிந்த இரண்டு பேர் போடலாம்."

உடனே, பெரியவரின் தம்பி இருவரை, வரவழைத்து வக்கீலின் முன் நிறுத்தினர்.

" யார் இவங்க?"

" பெரியவரின் தம்பிகள்"

" இவர்கள் வேண்டாம், எதிர் வீடு, தெரிந்தவங்கன்னு ரெண்டுபேர் அழைத்துவாங்க!"

   அப்படியே செய்ததும், அவர்கள் கையொப்பமிட்ட பிறகு, பெரியவருக்கு ஒரு முறை வாசித்துக் காட்டப் பட்டது!  " ஓ.கே. நாளைக்கே பதிவு செய்து, உயிலை என்னிடமே வைத்துக் கொள்கிறேன். உங்க காலத்துக்குப்பின், எல்லோருக்கும் படித்துக் காட்டிவிட்டு மேற்கொண்டு சட்டரீதியா செய்துதரேன்."

  வக்கீல் போனபிறகு, எவரும் பெரியவரிடம் உயில் பற்றி எதுவும் கேட்கவில்லை, பெரியவரும் கூறவில்லை!

    ஒரு வாரம் கழிந்ததும், மூத்த மகனை, அவன் கடைசி தம்பி விசாரித்தான்.

" அண்ணா! சாட்சியா நம்ம சித்தப்பாக்கள் வந்ததும், வக்கீல் அவர்களை ஏன் வேண்டாமென சொன்னார்?"

" தெரியலியே!"

" எனக்கொரு சந்தேகம்! உயிலில் சம்பந்தப்பட்டவங்க எவரும் சாட்சி கையெழுத்து போடக்கூடாதுன்னு கேள்விப் பட்டிருக்கேன்......"

" ஓ! உன் சந்தேகம் இப்ப புரியுது, ஒருவேளை நம் அப்பா தன் தம்பிகளுக்கும் பங்கு கொடுத்திருப்பாரோனு நினைக்கிறியா?"

  " வேற காரணம் இல்லையே, சித்தப்பாக்களை வேண்டாம்னு ஒதுக்க....."

  " அப்படியே அவங்களுக்கும் பங்கு தரட்டுமே, அதனால் என்ன?"

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.