(Reading time: 9 - 17 minutes)

    தங்கை பிரேமா தன் கணவனுடன் உடனே வந்து கலந்து கொண்டாள்.

    அவளுக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

" பிரேமா! இங்க இருக்கிற நாங்க எல்லாரும் சொல்றது, அப்பா சொத்திலே சித்தப்பா ரெண்டு பேருக்கும் பங்கு தர நியாயமில்லே, அப்பாவிடம் பேசி உயிலை மாற்றி எழுதச் சொல்லணும்னு சொல்றோம்.

  இதற்கு பெரியண்ணன் மட்டும் ஒத்துக்கலே....."

" அவர் என்ன சொல்றார்?"   " அப்பா, சுயமா சம்பாதித்த சொத்தை யாருக்கெல்லாம் தரணுங்கறதை அவர்மட்டுமே தீர்மானிக்கலாம், நமக்கு அதில் தலையிட எந்த உரிமையும் இல்லேன்னு....."

 " ஓ! அப்படியா! ஏங்க, நீங்க என்ன சொல்றீங்க?" என பிரேமா தன் கணவனை கேட்டாள்.

  " உங்கப்பா தனது சொத்தை யாருக்கு தரலாம்னு சொல்ல, அவர் பெற்ற வாரிசுகள் நால்வருக்கும் உரிமையுண்டு, ஆனா, மருமகன், மருமகள் இவங்க தலையிடக்கூடாது என்பது என் அபிப்பிராயம். ஏன்னா, அப்பாவின், கூடப் பிறந்த தம்பிகளுக்கே சொத்தில் பங்கு தரக்கூடாது என சொல்லும்போது, வேறு குடும்பத்தைச் சேர்ந்தவங்க எங்களுக்கும் எந்த உரிமை யும் கிடையாது......."

 " மாப்பிள்ளை! உங்க அபிப்பிராயம் அதுவா இருக்க எங்க மூணு மருமகளுக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை, ஆனா எங்களுக்கு உரிமை உண்டு; ஏன்னா, நாங்க எங்களை பெற்றவங்களை மறந்துட்டு இந்த வீட்டிலே ஐக்கியம் ஆயிட்டோம், எப்படி பிரேமா உங்க குடும்பத்திலே ஐக்கியம் ஆயிட்டாளோ, அதுபோல!"

    அப்போது மூத்தவர் மனோகர் அங்கு வந்தார்.    " வாங்க மாப்ளே, வா பிரேமா! இங்கே என்ன பெரிய மாநாடே நடக்குது?"

  " ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்காதீங்க! நாங்க சொல்றதை இப்ப நீங்க காது கொடுத்து கேளுங்க!

 இப்பவே நாம் அப்பாவை கேட்டு உண்மையை தெரிந்து கொள்ளணும்! வாங்க!"

  மனோகர் மனமார சிரித்துவிட்டு சொன்னார்:

" கடவுள் நமக்கு நிறைய செல்வங்கள் தந்தும், இப்படி பிறர் சொத்துக்கு ஆசைப் படுவது, நியாயமா?"

  " அப்பா, என்ன வேற்று மனிதரா?"

  " நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி உடல், தனி உயிர் இருப்பதுபோல, தனி மனமும் உண்டு. அந்த மனம் என்ன சொல்கிறதோ, அதைத்தான் நாம் கேட்போம். நமக்கு அந்த

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.