(Reading time: 9 - 17 minutes)

 இவர்கள் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த, மூத்த மகனின் மனைவி, " அதெப்படிங்க...பெற்றவங்க அடைய வேண்டிய சொத்தை மற்றவங்களுக்கு தருவது?" " ரோகிணி! அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தை, அவர் இஷ்டப்படி யாருக்கு வேண்டு மானாலும் தரலாம்! ......"

  " அதில்லைங்க...ரெண்டு தம்பிகளும் ஏற்கெனவே பணக்காரங்க, யாராவது ஏழைங்களுக்கு தந்தாலாவது போனால் போகுதுன்னு...."

" தம்பி சுதாகரா! ஏன்டா வீணா பிரச்னையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கிறே? போடா, உன் வேலையைப் பாருடா!......."

 சுதாகரும் ரோகிணியும் அவரவர் வழி போனபிறகும், மூத்தமகன் மனோகரின் மனம் சஞ்சலப்பட்டது!

   அப்பாவுடன் பிறந்த இரண்டு தம்பிகளையும் வளர்த்து ஆளாக்கியவர், தன் அப்பாதான்!

   அவர்களும் ஆளுக்கு ஒரு வியாபாரம் செய்து அந்த ஊரிலேயே செல்வந்தர்களாக உள்ளனர்.

   அவர்களும் தங்கள் அண்ணனின் சொத்தில் எந்த பங்கும் எதிர்பார்க்கவில்லை!

    அப்பா அவர்களுக்கும் பங்கு தந்திருப்பாரோ.......!

  சித்தப்பாக்கள்தான் நல்ல நிலையில் இருக்கிறார் களே, அவர்களுக்கு எதற்கு பங்கு என ரோகிணி கேட்பது நியாயமா? அப்படிப்பார்த்தா, பெற்றவங்க நாலு பேரும்தான் நல்ல நிலையிலே இருக்கா, தெருவிலே போற ஏழைக்கு எழுதிவைத்தால்கூட என்ன தவறு?

   இப்படி மூத்தவன் எண்ணும்போது, ரோகிணியும் தம்பி சுதாகரும், இரண்டாவது மகன் சங்கரை சந்தித்து, தங்கள் ஊகத்தை பங்கு போட்டுக் கொண்டனர். சங்கரின் மனைவி ரித்திகா தன் பங்குக்கு ரோகிணியுடன் அணிவகுத்தாள்.

   சங்கர் சொன்னான்: "நாம் இப்ப சந்தோஷமா இருக்கோம். நம்ம வருமானம் நம் தேவைக்கு அதிகமாகவே வருகிறது. யாருடைய பணம் யாருக்குப் போனால் நமக்கு என்ன? நிம்மதியாக........"

 " அதெப்படி அண்ணா! அவ்வளவு சுலபமா விடமுடியும்? தகப்பன் சொத்தில் பிள்ளைகளுக்கு பங்கு என்பது, ஒரு உரிமை! அதில் சமரசத்துக்கே இடம் இல்லை; ......."

   "சங்கர்! வாதம்னு வந்தா, எல்லாரும் அவங்க கருத்தை சொல்லலாம்... நான் கேட்கிறேன், சித்தப்பா ரெண்டு பேரும் அவங்க உயிலில் நமக்கு பங்கு எழுதி வைப்பாங்களா? நிச்சயமா மாட்டாங்க, ஏன்னா, அவங்க பிள்ளைங்களுக்கு பிடிக்காது, உண்மைதானே?"

  " அண்ணீ! நீங்க சொல் வதும் ஒருவிதமா பார்த்தா நியாயமா தோணுது, என்ன செய்யலாம்?"

  " உங்க தங்கை பிரேமா என்ன சொல்றான்னு தெரிய அவளை கூப்பிடுங்க!"

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.