(Reading time: 10 - 19 minutes)

  அதை வைத்துக்  கொண்டு எப்படியோ அவரும்  எழுவரையும் வளர்த்தார்.

 பள்ளியிலே மதிய  உணவு, இனாமாக படிப்புகிடைத்ததால், எழுவரும்  ஓரளவு படித்து, கிடைத்த  வேலையில் ஒட்டிக்கொண்டு  காலம் தள்ளுகிறோம்!

சகோதரிகளுக்கு,  பாவம்!, ஆபீஸ் வேலை ஏதும்  கிடைக்காத நிலையில்வேறு வழியின்றி, வீட்டுவேலை  செய்து பிழைக்கின்றனர்.

எங்களில் எவருக்குமே  நிரந்தரப் பணியில்லை!

அதனால், இரண்டரை  மாத ஊரடங்கில், அரைவயிறு  நிரம்பவே மூச்சு முட்டியது!

அடிக்கடி, 'என்னை ஏன்  காப்பாற்றினாய், இறைவா?'  என புலம்புகிறேன், பதில் ஏனோ இன்னும் கிடைக்க  வில்லை!

 உங்களில் எவரேனும்  அறிந்தால், சொல்லுங்களேன்!

 நிச்சயமாக, ஏதோ ஒரு காரணம் இருக்கணுமே!

 'அம்மா உணவகத்தில்தள்ளித் தள்ளி கியூவில் கால்  கடுக்க நின்றுகொண்டேஇந்த யோசனை!

  சரி, அதை விடுங்க!  எனக்கு இப்போது தேவை ஒரு வேலை! எங்கு, கிடைக்க  வழி இருக்கு?

  ஓட்டல்கள், தொழிற்  சாலைகள், போக்குவரத்துகடைகள், சலூன்கள், எல்லா  இடங்களிலும் வழியில்லாமல்  மூடப்பட்டிருக்கின்றன!

 அரசு, ஏதோ நிதியுதவி  செய்வதாக கேள்விப்பட்டுஅங்கு ஓடி கால் கடுக்க கியூ  வரிசையில் நின்று இறுதியில்  கை நீட்டினால், ஆதார்கார்டு  ரேஷன்கார்டு எங்கே? எனக்  கேட்டு விரட்டிவிட்டார்கள்.

நீங்களே சொல்லுங்க!  குடும்பத்திற்கு ஒரு ரேஷன்  கார்டு! ஒன்பது பேருக்கு நிதி  உதவி தேவை!  ஒன்பது ஆதார் இருக்கு, ஒன்பது  ரேஷன் கார்டு இல்லையே!

  எத்தனையோ நல்ல  மனுஷங்க, ஆங்காங்கேஉணவுப் பொட்டலம் தருவதா  டி.வி.யிலே பார்த்துட்டு தேடினால் நான் அங்கே அடைவதற்கு முன்பே போய்  விடுகிறார்கள்!

  கோவில், சர்ச்மசூதி எல்லாம் மூடியிருக்கு!

 தனியார் வீடுகளில்  கதவு திறக்கப்பட்டால்தானே  பிச்சை கேட்க முடியும்?

  ஆனால், அவர்களே  பண நெருக்கடி, பொருள்  பற்றாக்குறையில் திண்டாடும்  போது, எப்படி பிறருக்கு உதவமுடியும்?

 இப்பவாவது, இறைவா!  என்னை காப்பாற்றிய காரணத்தைச் சொல்லித்  தொலையேன்?

சரி, நீ வாய் திறந்து  பேச மாட்டாய், வாய்திறந்தே  இருக்கிற மனுஷங்க மூலமா 

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.