(Reading time: 10 - 19 minutes)

நல்லாருக்காங்களா?"        " எங்க, சார்!  ஆறு பேர்அப்பா, அம்மா எல்லாருமே  பட்டினிதான்!"

" கவலைப்படாதே! உன்  குடும்பமே இனி சந்தோஷமா  வாழப் போகுது, என் சொல்  கேட்டு நடந்தால்!

 அது ஒண்ணும் பெரிய  விஷயமில்லே, உங்கப்பாவும்  அம்மாவும் நிம்மதியா வீட்லே  இருக்கட்டும். நீங்க ஏழுபேர்  மட்டும் நான் சொல்றதைக்  கவனமா கேட்டு கரெக்ட்டா  செய்யுங்க, போதும்!

   இப்பவே உடல்  உறுப்பு தானத்துக்கு உன்னை  கூட்டிக்கிட்டுப் போய், லட்ச  ரூபாய் வாங்கித் தரேன், என்ன சொல்றே?"

" என்ன சார்! என் பசி  தெரிஞ்சு, கேட்கறீங்க? ரெடி  நான்! முதல்ல, பசிக்கு ஏதாவது........."

 " என் வீட்டுக்கு வா!  ஏதாவது சாப்பிடலாம்!"

 அவனுடைய டூவீலரில்  ஏறிக்கொண்டு, வீட்டுக்கு  அழைத்துச் சென்றான்.

  டூ பெட்ரூம் வீடு! இட்லி, வடை கொடுத்தான்.  பசி ஓடியே போனதும், அவன்  பேச்சைக் கேட்க தயார்  ஆனேன்.

 " குமரா! கடவுள் நம்ம  எல்லாருக்கும் உடம்பிலே  ரெண்டு கிட்னி வச்சிருக்கான்  ஒண்ணே போதும் நமக்கு!  அந்த ரெண்டாவது கிட்னியை  தானம் செய்தால், உனக்கு  ஒரு லட்ச ரூபாய் உடனடியா  கிடைக்கும்! எப்படின்னு கேள்

  நம்ம நாட்டிலே, பல  பேருக்கு ரெண்டு கிட்னியும்  கெட்டுப்போய் உயிருக்குப்  போராடறாங்க.....

ஒரு லட்சம் பேர், அப்படி காத்திருக்காங்க, மற்ற உறுப்புகளைவிட இந்த  உறுப்புக்குத்தான் டிமாண்ட்  அதிகம்.

   கிடைக்காம தினமும்  பத்து பன்னிரண்டு பேர் செத்துப் போயிடறாங்க!

  ஆனா, இதிலே ஒரு  சின்ன சிக்கல்! எல்லாருடைய கிட்னியும்  எல்லாருக்கும் பொருந்தாது  எது பொருந்தும்னு தெரியபிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட்  னு சில பரிசோதனை செய்து  எது, யாருக்கு பொருந்தும்னு  கண்டுபிடிப்பாங்க!

  உன்னுடைய கிட்னி  பொருந்துகிற நோயாளிக்கு  உடனே மாற்றிவைத்து அவனை காப்பாற்றுவாங்க!

  இது, அரசாங்கமே  அப்ரூவ் பண்ணி, முறையா  நடத்தற திட்டம்!

  குறைந்தது, நமக்கு  அந்த நோயாளி ரெண்டு லட்ச  ரூவா தருவாங்க, அதிலே ஒரு  லட்சம் உனக்கு!

  மீதியை, டாக்டர்நர்ஸ், ஆஸ்பத்திரி, நான்  எல்லாருமா பங்கு போட்டு  எடுத்துப்போம்.

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.