பஸ்ஸில் இருந்து இறங்கி வீடு நோக்கி நடந்தாள் கண்மணி. வீடு பக்கத்தில் வர வர அவளின் இதயம் அவளின் கட்டுபாடுகளையும் மீறி படபடத்தது. வீட்டினுள் நுழையும் போதே,
“சீட்டிங் சீட்டிங்” என்று அலறிய அம்ருதாவின் மழலை குரலும் அவளுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்த அகிலனின் சிரிப்பும் அவள் காதுகளுக்கு இனிமையை கொடுத்தது.
செருப்பை கழற்றும் நொடிகளில் தன்னை தானே அமைதியாக்கி கொண்டவள், எப்போதும் போல சாதாரண புன்னகையுடன் உள்ளே நுழைந்தாள்.
அங்கே அகிலன் அமிர்தா மட்டுமல்லாமல் அவளுடைய அம்மா காமாட்சி, தம்பி கலைச்செல்வன் மற்றும் அவனின் மனைவி தாமரையும் இருந்தார்கள்.
“மம்மி....’ என்றபடி அம்ருதா அவளைப் பார்த்த உடனே அகிலனிடம் இருந்து ஓடி வந்துக் கட்டிக் கொண்டாள்.
“என்னக்கா இன்னைக்கு இவ்வளவு லேட்?” என தாமரை விசாரிக்கவும்,
“எப்போவும் வர பஸ் மிஸ் செய்துட்டேன் தாமரை” என தாமரைக்கு பதிலளித்த கண்மணி, முடிந்த அளவு அகிலன் பக்கம் பார்ப்பதை தவிர்த்தாள்.
“நீங்க வரதுக்காக தான் வெயிட் செய்துட்டு இருந்தேன். நான் கிளம்புறேன்” என்றபடி எழுந்து நின்றான் அகிலன்.
அப்போது தான் அவன் வெளியில் செல்ல கிளம்பி தயாராக இருப்பதை கவனித்தாள் கண்மணி.
எங்கே கிளம்புகிறான்? ஏன் கிளம்புகிறான் என பல நூறு கேள்விகள் கேட்க விருப்பம் இருந்தாலும் உதட்டைக் கடித்து கேள்விகள் வெளி வராமல் தடுத்து நிறுத்தினாள்.
“அகிலண்ணா வந்த வேலை முடிஞ்சிருச்சாம்க்கா. அதான் காஞ்சிப்புரம் கிளம்புறார்” என அவள்
Finishing touch was cute 😍😍😍Thank you!!