(Reading time: 8 - 16 minutes)

  இப்போது சொல்லுங்க! தாயன்பைவிட சிறந்தது வேறு எது உண்டு?"

  என்று காமினி முடித்த போது, அரங்கம் எழுந்து நின்று கையொலி எழுப்பி பாராட்டியது!

அந்த காமினிக்கு ஒரு தகுந்த மணாளன் தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்ட பிறகு, நீங்கள் சொல்லுங்கள்! அவள் ஆசை எதுவாக இருக்கும்?

  கரெக்ட்! தனக்கொரு சேய் வேண்டும்!

 கணவனுக்கும் அது தெரியும்! ஏனெனில், காமினி கல்லூரி பட்டிமன்றப் பேச்சை கேட்டு ரசித்து கைதட்டியவர் களில், அவனும் ஒருவன்!

   ஒவ்வொரு இரவும் அவர்களிடையே பேச்சு பிறக்கவிருக்கும் சேயைப் பற்றியே இருக்கும்!

 நாட்கள் மாதங்களாகி பின் வருடங்களாகியும் அவள் கரு தரிக்கவில்லை. ஏக்கம் அதிகரித்து, மெலிந்து கறுத்து களையிழந்து போனதும், அவளை கணவன் ஜைனகாலஜிஸ்ட் டாக்டரிடம் அழைத்துச் சென்றான்.

 காமினிக்கு எல்லாவித சோதனைகளும் நடத்திய பிறகு, ஒரு வாரம் கழித்து, ரிசல்ட் தெரிந்துகொள்ள வரச் சொன்னார், டாக்டர்!

அந்த நாள் நெருங்க நெருங்க, காமினிக்குத் தெரியாமல், அவள் கணவன் கவலையில் மூழ்கினான்.

 ஒருவேளை, ஃபர்டிலிடி டெஸ்டில், விபரீதமாக காமினிக்குப் பாதகமான முடிவு வந்திருந்தால், அதை அவள் தாங்குவாளா?

  நிச்சயம் அவளால் அதை ஏற்கமுடியாது!

 மாறுதலாக, சாதகமான ரிசல்ட் வந்து சில சிகிச்சை செய்ததும், அவள் தாயாக வாய்ப்பு உண்டு என தெரிய வாய்ப்புண்டு.

  இருவரும் வேண்டாத தெய்வமில்லை! விரதம், துதி, நோன்பு, வழிபாடு எல்லாம் செய்தார்கள்.

 " காமினி! தைரியமா இரு! கடவுள் உன்னை கைவிட மாட்டார்! நிச்சயம் நல்ல ரிசல்ட் வரும்!"

 என காமினியின் பெற்றோர் உற்சாகப்படுத்தி அவளை தேற்றினாலும், அவள் சிரிப்பில் உயிர் இல்லை!

அந்த நாளும் விடிந்தது வினாடி யுகமாக கழிந்தது!

  " காமினி! நான் போய் ரிசல்ட்டை வாங்கி வருகிறேன். நீ அலையாதே!" என கணவன் கூறும்போதே, காமினி உடைந்து போனாள்.

அவள் பெற்றோர் அவளை தாங்கிப் பிடித்து ஆசுவாசப் படுத்தினர்.

கணவன் ஜபித்தவாறே, டாக்டரின் அறைக்குள்ளே நுழைந்தபோது, டாக்டரின் முகத்தில்

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.