(Reading time: 8 - 16 minutes)

வழிவான்.

  மாதங்கள் கூடக்கூட, சிசுவின் அசைவுகள் அதிகமா இருக்கும். திடுமென ஒருநாள் அந்த அசைவு குறையும், அது தாயை கவலை கொள்ளச் செய்யும்.

  கணவனும் மனைவியும் டாக்டரிடம் ஓடுவர். டாக்டர் பரிசோதித்துவிட்டு, கவலைப் பட வேண்டாம் என உறுதி அளித்தபிறகே, அமைதி அடைவார்கள்.

 அன்றிரவு, உதை மீண்டு வந்ததும், 'எங்கடா போனே நேற்று?' என செல்லமாக கோபிப்பாள், தாய்!

  " நீ தூங்கிறியா, விழித்திருக்கியான்னு டெஸ்ட் பண்றான், பய!" ன்னுகணவன் கிண்டல் செய்வான்.

பத்தாம் மாதம், பிரசவத்தின்போது, தாய் தன் உயிரை தந்து, நல்ல சுப முகூர்த்தத்தில், அந்தச் சிசுவை விடுதலை செய்வாள்.

ஆனால், அந்தச்சிசு, அழும்! ஏன் தெரியுமா?

இரும்புக் கோட்டை யில் கவலையின்றி தாயின் பாதுகாப்பில் இருந்துவிட்டு இப்போது ஆபத்து சூழ்ந்த உலகில் வாழவேண்டுமே என அஞ்சும்!

பிறந்த சிசுவை முதலில் பார்க்க விழைவாள், தாய்! அதன் முகம் பார்த்து, பிரசவ வேதனை எங்கோ மறைந்துவிடும்!

 அந்தச் சேய் தன் கண்களை திறக்காமலே, வாய் இதழை பிரிக்காமலே, மோகனச் சிரிப்பொன்றை கன்னம் குழிய, வெளியிட அதைப் பார்த்து தாயும் அவள் கணவனும் பெற்றோரும் சொர்க்கம் வேண்டாம் எமக்கு, என தள்ளிவிடுவார்கள்

இதை ஒரு சேய் கூறக் கேட்போமா? 'ஒப்புரைக்க முடியாத அன்னை என்னை, ஒருக்கணித்து மார்பணைத்து மேனியெல்லாம் கைப்புறத்தில் ஆம்படிக்குள் தழுவி என்றன், கண் மறைக்கும் சுருள்குழலை மேலொதுக்கி மைப்புருவ விழிமீது விழி அமைத்து மலர்வாயால் குளிர் வாயால் கண்ணே என்று செப்பி முத்தமிட்டாளே அன்புள்ளாரின் செந்தாமரை முகத்தை மறப்பேனோ நான்'

இப்படி கூறுமாம், சேய்! இதைச் சொன்னது, நானல்ல புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்!    ( அரங்கத்தின் கைதட்டல் விண்ணை முட்டியது)

 நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சேய் வளர்வதைக் கண்டு பூரித்துப் போவாள், தாய்!

  சேயை ஒரு வினாடி காணவில்லை என்றாலும், துடித்துப் போவாள்!

  பால பருவத்தில் அதன் மழலையையும் கைகால் அசைவுகளையும் அணுஅணு வாக ரசிப்பாள், தாய்!

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.