அப்படியே சொன்னார்
”அதென்னங்க மரம் அம்புட்டு விலையா விக்கறாங்க, ஏன் சாதாரண மரத்தில எல்லாம் செய்ய மாட்டாங்களா”
”அது சான்டாக்கு பிடிக்குமா“
”அவர் யார்ங்க”
”ஐய்யனார் போலடி நாம கேட்காமலே நமக்கு பரிசு எல்லாம் தருவாரு”
”ஓஹோ ஆமா இப்ப எதுக்கு இதையெல்லாம் சொல்றீங்க” என குழப்பமாக கேட்க அதற்கு கதிரேசனோ
”இல்லைடி கமலா சாதாரணமா நம்ம வீட்ல பண்டிகைன்னா என்ன செய்வோம்”
”என்ன செய்வோம் வீட்டை கழுவி மெழுகி தோரணம் எல்லாம் கட்டி படையல் போட்டு சாமி கும்பிடுவோம்”
”அதே போல கிறிஸ்துமஸ்க்கு செஞ்சா எப்படியிருக்கும்”
”எதுக்கு இப்ப இது”“
”புள்ளையோட சந்தோஷத்துக்காகதான் எப்படியும், அவன் புள்ளையை நம்ம பக்கம் மாதிரியா வளர்த்திருக்கும் அவன் அம்மா சொல்லு”
”இருக்கும்ங்க”
”புள்ளைதான் கையை விட்டு போயிட்டான், பேரனாவது நம்மகிட்ட இருந்தா நல்லாயிருக்கும்ல, அவனுக்கு பிடிச்சதை செய்யனும்டி”