Page 21 of 40
”ஆமா இதையெல்லாம் நீ ஏன் கேட்கற” என சந்தேகமாக ராபர்ட் கேட்க அதற்கு கதிரேசனோ
”நீதானே சொன்ன பொதுஅறிவுக்காக தெரிஞ்சி வைச்சிக்கன்னு அதுக்குத்தான்”
”சரி சரி அப்புறம் என்ன”
”ஆமா அது என்ன பொம்மையா” என கேட்க அவனும் பார்த்தான், சான்டாக்ளாஸ் பொம்மை இருக்கவே அதை எடுத்து அவரிடம் தந்து
”இது சான்டா க்ளாஸ்”
”என்ன க்ளாசு”
“ஆமா கண்ணாடி க்ளாசு யோவ் சான்டா க்ளாஸ்யா”
”பப்பூன் போல இருக்காப்ல“
“நக்கல்தான்யா உனக்கு“
”ஆமா இதை எதுக்கு வைச்சிருக்க”
”கிறிஸ்துமஸ் அன்னிக்கு சான்டாக்ளாஸ் வந்து பரிசு தருவாரு”
”அப்படியா”
”அப்படித்தான் எனக்குச் சொன்னாங்க”
“நீ அவரை பார்த்திருக்கியா”
“இல்லை”