(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

  

”என்ன நானா ஓஹோ புரியுது புரியுது, இதப்பாரு மதத்தை பார்க்காம மனுஷனை மதிச்சி வந்தா வா இல்லைன்னா அப்படியே போ” என சொல்லிவிட்டு ராபர்ட் வீட்டிற்குள் செல்ல கதிரேசனோ உடனே அங்கிருந்து செல்லாமல் தயக்கத்துடனே நின்றார்.

  

அவர் சென்றுவிட்டாரா என ஜன்னல் வழியாக பார்த்த ராபர்ட்டுக்கு ஆச்சர்யமே

  

”பெரிசு ஒரு முடிவோடதான் வந்திருக்கு போல ம் வரட்டும் வரட்டும்” என செல்லிக் கொண்டே பலகாரத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

  

கதிரேசனும் சில நிமிடங்கள் பலமாக யோசித்துவிட்டு பின் என்ன நினைத்தாரோ விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்தார், அவர் வரவும் பேச்சே எழவில்லை ராபர்ட்டுக்கு, ராபர்ட்டின் அப்பா கதிரேசனை கண்டதும் வியந்தார்

  

”அடடே கதிரேசனா வாங்க வாங்க உட்காருங்க” என சொல்ல கதிரேசனும்

  

”நான் அப்படியே போனேன் ராபர்ட் இருந்தான் அவனுக்கு பலகாரம் கொடுத்துட்டு கிளம்பலாம்னு” என இழுக்க அவரோ

  

”ராபர்ட்டை பார்க்கனும் அதானே அங்கதான் நிக்கறான், எலேய் இங்க வாடா பெரியவரே  உன்னை தேடி வந்திருக்காரு வா வா” என அழைக்க ராபர்ட்டும் வந்தான் பலகாரத்தை சாப்பிட்டபடியே

  

”ஏதுடா இது” என அவனின் தந்தை கேட்க அதற்கு ராபர்ட்

  

”பெரிசு கொடுத்தாரு”

  

”ஓஹோ சரி சரி உன்னைத்தான் பார்க்க வந்திருக்காரு, ஒழுங்கா பேசனும் சரியா” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட ராபர்ட்டும் கதிரேசனிடம் பேச வந்தான்

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.