(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

”அய்யய்யே உலகத்துக்கும் உனக்கும் சம்மந்தமேயில்லை, இப்ப எதுக்கு உலகத்தை இழுக்கற, அதைவிடு பாவம் ஆமா ஊர் பத்தி பேசறியே, இந்த ஊர் உனக்கு என்ன செய்துச்சி, நீ கஷ்டப்படறப்ப கைகொட்டி சிரிச்சது, நீ சந்தோஷப்படறப்ப பொறாமைபட்டு உன்னை ஏச்சது, இந்த ஊருக்காகவா நீ உன் புள்ளையை விலக்கி வைக்கற, பாவம்யா, நீ செய்றது மகாபாவம்”

  

”எவனாவது ஏதாவது சொல்லிட்டா அப்புறம் என் மானம் என்னாகிறது“

  

”ஆமா அவனவனுக்கு வேற வேலையில்லை பாரு, உன் வீட்டு கஞ்சியை குடிச்சிதான் எல்லாரும் வாழறாங்களா, சும்மா நீயா எதையாவது சொல்லாதய்யா, இதப்பாரு உன்னை நம்பி ஊரும் இல்லை, ஊரை நம்பி நீயும் இல்லை ஆனா, உன்னை நம்பி ஒருத்தன் இருக்கான்யா உன் புள்ளை அவனுக்கு நீ வேணும், அதை பார்ப்பியா சும்மா பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்வான், எதிர் வீட்டுக்காரன் என்ன நினைப்பான்னு நீயும் வாழாம அடுத்தவங்களையும் சந்தோஷமா வாழவிடாம செய்றியே இதெல்லாம் பாவம்யா” என சொல்ல

  

”ராபர்ட்டு அதிகமா பேசற”

  

”சொல்றதை சொல்லிட்டேன் என் வீடு வந்தாச்சி, நான் போய்க்கிறேன் நீ போய் உன் வீடு பார்த்து சேரு, இந்தா லெட்டர் கமலாம்மாகிட்ட கொடுத்துடு, போறவழியில கிழிச்சி எறிஞ்சிடாதய்யா அதுல முக்கியமான சில விசயங்கள் இருக்கு”

  

”என்ன விசயம் சொல்லு”

  

”உனக்குதான் அது தேவையில்லாததாச்சே அதை தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன செய்யப் போற”

  

”டேய் இருடா ராபர்ட்டு சொல்லிட்டுப் போடா, இல்லைன்னா உன்னை விடமாட்டேன்” என ராபர்ட்டின் சட்டை காலரை பிடிக்க அவனோ அரண்டான்

  

”யோவ் என்னய்யா செய்ற ரோட்ல சட்டையை பிடிக்கற, எடுய்யா கையை என் மானம் போகுது”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.