(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

”உனக்கு எதுதான் பிடிச்சிருக்கு, பைத்தியம் பிடிச்சிருக்கு உனக்கு”

  

”டேய் என்னடா”

  

”உண்மையை சொன்னேன், இதப்பாரு இப்பவே உனக்கு வயசாயிடுச்சி, உனக்கே பேரன் வந்துட்டான் வந்தவனை கூட வைச்சிக்க, நாளைக்கு பின்னாடி உன் பேரன் உன்ன பார்த்துக்குவான், வீம்பு பிடிக்காத, பேரன் மேல இருக்கிற உன்னோட உரிமை போயிடும், நீதான்யா உன் புள்ளையும் பேரனையும் பிடிச்சி வைச்சிக்கனும், அவங்க ரெண்டு பேருமே உன் வாரிசுங்கதானே, அப்புறம் என்ன மதமாய்யா முக்கியம் மனுஷங்கதான் முக்கியம்” என சொல்ல கதிரேசனுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை ஆனாலும் அவரின் மனம் மாறுவதை முகம் காட்டிக் கொடுக்க அதைக் கண்ட ராபர்ட்டோ

  

”சரி போ நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம், நீ அநாதையாதான் போய் சேரனும்னு உன் தலையில எழுதியிருந்தா அதை யாரால மாத்த முடியும்”

  

”டேய் நான் இன்னும் 50 வருஷம் வாழ்வேன்”

  

”வாழு வாழு வாழ்ந்து என்ன பிரயோசனம், புள்ளையையும் பேரனையும் விரட்டிட்டு என்னத்த பெரிசா வாழந்துடப் போற, கமல்லம்மாவை பாரு 5 வருஷமா எதுக்கு வாழறோம்னு விட்டேத்தியா வாழுது, நீ மட்டும் என்னவாம் 5 வருஷமா சிரிக்காம இருக்க, இதுவாய்யா வாழ்க்கை ஏனோதானோன்னு வாழறது வாழ்க்கையில்லை, நம்ம புள்ளைங்களோட வாழறதுதான் வாழ்க்கை”

  

”பெரிய மனுஷன் கணக்கா பேசி வைக்கற“

  

”பெரியவங்களுக்கு சின்னப்புத்தியிருந்தா, சின்னவங்கதான் அது தப்புன்னு புரிய வைக்கனும்“

  

”டேய் நான் என்ன சின்னபுத்திக்காரனா, நாளைக்கு பிறகு இந்த ஊர் உலகம் என்னத்த சொல்லும்”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.