அங்கு டின்னர் தயாராக இருந்தது
”என்னப்பா டின்னர் ரெடியா” என கேட்க சரவணனும் வாடிய முகத்துடன் தலையாட்ட
”இப்ப என்ன நடந்துப் போச்சின்னு உன் முகம் வாடியிருக்கு”
”எனக்கு ஊசி வேணாம்மா”
”சரி சரி வேணாம் வேணாம், நானு அந்த மலர்கிட்ட சொல்லிடறேன் சரியா மலரோட அப்பா வீட்டுக்கு வந்திருக்காரு போ போய் அவங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வா”
”நான் போகலைம்மா நீயே போம்மா”
”இல்லைடா சரவணா நீ போ, அவங்க உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க சரியா போப்பா என் கண்ணுல்ல” என கொஞ்ச அவனும் அலுத்துக் கொண்டே சாப்பாடு பாக்ஸ்களை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பக்கத்துவீட்டு வாசலில் நின்று
”அக்கா அக்கா” என அழைத்தான் உள்ளிருந்து
”யாரு” என மலரின் தந்தை ரவியின் குரல் வர
”அக்கா இல்லைங்களா”
”யார்பா அது” என சொல்லிக் கொண்டே வெளியே வர அங்கிருந்த சரவணனை கண்டு
”யார்பா நீ”
”இந்தாங்க நைட் சாப்பாடு ரெடியாயிருக்கு சூடு ஆறதுக்குள்ள சாப்பிடுங்க” என சொல்ல அவரோ வியந்தார்
”அட இரு யார் நீ, இது என்ன, உன்னை நான் இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரியே