”என்ன நடக்குது தினமும் நடக்கறதுதான் நடக்குது“
”ம்க்கும் உங்களுக்கு புரியலைங்க சரவணன் தம்பி எப்படியெல்லாம் மலரை தாங்கறான்னு பாருங்களேன்”
”அதுக்கென்ன இப்ப காதலிச்சி கட்டிக்கிட்டான், தாங்கறான் அவனுக்கு இது ஒண்ணும் புதுசில்லையே, கல்யாணத்துக்கு முன்னாடி அம்மாவுக்காக இப்படி நடந்துக்கிட்டான், இப்ப மலர் வந்திருக்கா அவன் மாறவேயில்லை அவன் அப்படியேத்தான் இருக்கான்”
என சொல்ல சந்தியா நீண்ட பெருமூச்சுவிட ரவியோ
”இப்ப நீ ஏன் பெருமூச்சு விடற, உன்னையும் நான் நல்லாதானே தாங்கறேன் அப்புறம் என்ன கேடு”
“என்ன இருந்தாலும் மலர் போல வராதே”
”பொண்ணு கூட போட்டி போடாத சரியா, விட்டா என்னை கோலம் போடுன்னு சொல்வ பாரு, இதுக்கெல்லாம் காரணம் யாரு அவன்தானே இரு வரேன்”
”ஏங்க அவன் நம்ம மாப்பிள்ளைங்க”
”எல்லாம் தெரியும் நீ கோலம் போடு” என சொல்லிவிட்டு நேராக சரவணனிடம் வர அதற்குள் அவன் அழகாக கோலமிட்டுவிட்டு எழுந்தான் ரவி வரவும்
”மலரப்பா வாங்க வாங்க குட்மார்னிங்“
”என்னடா செய்ற இங்க”
”கோலம் போடறேன்”