”நீ எதுக்கு செய்ற, அதுக்குதான் மலர் இருக்காள்ல”
”மலர்தான் காபி குடிக்கறாளே”
”இதெல்லாம் பொம்பளைங்க செய்ற வேலை”
”அப்படி வகுத்ததே ஆம்பளைங்கதானே மலரப்பா”
”நீ மாறமாட்டியா ஆம்பளையா லட்சணமா இரு“
”எதை சொல்றீங்க மலரப்பா, கட்டின பொண்டாட்டியை அடக்கி ஆளறதுதான் ஆம்பளை லட்சணம்னா அது எனக்கு வேணாம், நான் இப்படியே இருந்துக்கறேன்” என சொல்ல சந்தியா தன் வீட்டில் இருந்தபடியே கைதட்டினார் மகிழ்ச்சியாக அதை பார்த்த ரவியோ நொந்துப் போனார்
”மலருக்கும் உனக்கும் கல்யாணம் ஆச்சோ இல்லையோ எப்ப பாரு உங்களை பத்தின பேச்சே என் வீட்டிற்குள் ஓடுது உன்னைப் போலவே என்னையும் இருங்கறா என் பொண்டாட்டி என்னால முடியுமா”
”முடியும்னு நினைச்சா முடியும் மலரப்பா, யாராவது பார்ப்பாங்களான்னு நினைச்சி பயந்து பயந்து அன்பை வீட்டுக்குள் கொட்டறதை விட பார்த்தா பார்க்கட்டும் இவள் என் பொண்டாட்டின்னு துணிஞ்சி பாசம் கொட்டினீங்கன்னா அக்கா உங்களை தலையில தூக்கி வைச்சி கொண்டாடுவாங்க”
”ம்க்கும் நீ சொல்லிட்ட நம்மால முடியாது ஆமா மலரை நல்லபடியா பார்த்துக்கறியா“
”நான் நல்லா பார்த்துக்கிறேன் அவள்தான் அடிக்கடி என்னை திட்டறா அடிக்கறா”
”நீ சின்ன குழந்தை போல ஏதாவது சேட்டை செஞ்சிருப்ப அதான் அடிக்கறா இதப்பாரு, சரவணா அவள் கண்ல கண்ணீரே வரக்கூடாது சரியா”