“நீங்களும் வாங்களேன்”
“நான் எதுக்கு”
”புது வருஷம் தொடங்கப்போகுது புதுசா துணிமணி எடுத்து மாப்பிள்ளைக்கு தரனும்ல”
”சரி சரி ஈவ்னிங் ரெடியாயிடு வரேன்” என சொல்லியவர் நேராக சரவணனிடம் செல்ல சரவணனும் அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு வைதேகியை பார்த்து
”அம்மா மலரோட ஸ்கூட்டியிலயே நீ ஸ்கூலுக்கு போம்மா, பத்திரமா போம்மா, வண்டியில கம்பியிருக்கும் அதை கெட்டியா பிடிச்சிக்கம்மா சரியா” என சொல்லியவன் மலரை பார்த்து
”மலரு பத்திரமா வண்டியை ஓட்டு ரொம்ப வேகமாலாம் வேணாம் நிதானமாவே ஓட்டு சரியா” என சொல்ல அவளும் சரியென தலையாட்ட
”டாட்டா டாட்டா” என இரு பெண்களுக்கும் டாட்டா காட்ட ரவியோ
”டேய் போதும்டா வண்டியை எடுடா தினமும் இதே வசனத்தை பேசிக்கிட்டு எடுடா வண்டியை” என திட்ட அவனும்
”இருங்க இருங்க” என சொல்லியவன் சந்தியாவை பார்த்து
”அக்கா நாங்க கிளம்பறோம் டாட்டா” என சொல்ல சந்தியாவும்
”டாட்டா“ என காட்ட ரவியோ தலையில் அடித்துக் கொண்டார்
”பையன் இல்லாத குறையை உன்னை வைச்சி அவள் போக்கிக்கறா நீயும் ஓவராதான் நடந்துக்கற, இந்த தெருவே உன்னோட அலம்பலை பார்த்திடுச்சி வண்டியை எடுடா நேரமாகுது” என அதட்ட சரவணனும் வண்டியை ஓட்டினான்.