”இல்லை நீ எப்படி இங்க ஆமா அம்மா எங்க” சிறு குழந்தைபோல பேச
”டேய் அடிவாங்குவ என்னை சைட் அடிக்கதானே இங்க வந்த”
”இல்லை நான் அம்மாவோட மளிகை வாங்க வந்தேன் ஆமா நீ எதுக்கு அம்மா கட்டியிருக்கற புடவை போலவே அதே நிறத்தில கட்டியிருக்க”
”ஏன்டா உன் அம்மா பின்னாடியே அலைவியா, அதுவும் இப்படியா என்னத்த உங்கம்மா உன்னை வளர்த்தாங்களோ உன்னை, நீ இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கியே” என சொல்ல அவனோ அக்கம் பக்கம் பார்த்து அவனது தாயை கண்டுபிடித்துவிட்டான்
”ஐஐ நான் கண்டுபிடிச்சிட்டேன்”
”என்ன நீ சின்னபுள்ளைன்னா”
”சே அதுஇல்லை நான் அம்மாவை கண்டுபிடிச்சிட்டேன், அதோ அங்க இருக்காங்க பாரு” என சொல்ல அவளோ
”அவங்களை நான் அப்பவே பார்த்துட்டேன் ஆமா நீ எப்பதான் ஆம்பளை போல நடந்துக்குவ”
”சத்தமா பேசி வைக்காத யாராவது கேட்டா தப்பா நினைப்பாங்க, நானும் ஆம்பளைதான் நான் எப்பவோ வயசுக்கு வந்துட்டேன் தெரிஞ்சிக்க”
”எது வயசுக்கு வந்தியா” என சொல்லி கலகலவென சிரிக்க அவனோ அவளின் வாயை தனது கையால் பொத்திவிட அவளோ அவனின் உள்ளங்கையில் முத்தம் தர அவன் சட்டென விலகி நின்றான் ஆனாலும் அவன் முகத்தில் பரவசம் தெரிந்தது
”ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கற”
”என்ன”