Page 39 of 66
”என்ன செய்ற”
”பார்த்தா தெரியலை”
”தெரியுது ஆனா புரியலையே”
”நான் ஒரு டாக்டர் உனக்கு வைத்தியம் செய்றேன்”
”ஓ இப்படியெல்லாம் கூட வைத்தியம் செய்யலாமா”
”ஆமாம் இது புது வைத்திய முறை, உன்னை வைச்சிதான் டெஸ்ட் பண்றேன் ரிசல்ட் ஓகேவானா மத்தவங்களுக்கு செய்வேன்” என சொல்ல சரவணனுக்கு திக்கென்றது சட்டென அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன்
”எது மத்தவங்களுக்கா, அதெல்லாம் தப்பு யாருக்கும் இப்படியெல்லாம் நீ வைத்தியம் செய்யக்கூடாது”
”அப்ப உனக்கு மட்டும் செய்யட்டுமா”
”எனக்கு செய் தப்பில்லை”
”அதென்ன உனக்கு செஞ்சா தப்பில்லை மத்தவங்களுக்கு செஞ்சா தப்பு”
”அது நான் ரொம்ப நல்ல பையன், வெரி டீசன்ட்”
”ம் அப்புறம்”
”ஒண்ணுமில்லை”
”சரி இப்ப எப்படியிருக்கு கைவலி”