Page 34 of 66
”எனக்கு தெரியாது நான் எல்லாம் அடுத்த முறை போட்டுக்க மாட்டேன்”
”ஓ அப்படியா சரி நானே நாள் குறிச்சி வைச்சிக்கிறேன், அப்பாட்டயும் சொல்லி வைக்கிறேன்”
”நீயெல்லாம் ஒரு டாக்டரா”
”ஏய்“
”பின்ன பிடிக்காத ஒருத்தனை கட்டாயப்படுத்தறது தப்பில்லையா”
”ஓ அப்படியா சாரி”
”போ உன் சாரி எனக்கு வேணாம்”
”அப்ப வேற என்ன வேணும் உனக்கு சொல்லு” என மென்மையான குரலில் பேச அவனுக்கு திக்கென்றது
”இப்ப எதுக்கு ஒரு மாதிரியா பேசி வைக்கற, அம்மா வேற இல்லை, நீ என் பெட்ரூம்ல வேற இருக்க முதல்ல கிளம்பு எனக்கு பயமாயிருக்கு”
”லூசு எதுக்கெடுத்தாலும் பயப்படுவியா”
”கிளம்பு”
”காபி வரட்டும் குடிச்சிட்டு கிளம்பறேன்” என சொல்ல அவனும்
”அம்மா அம்மா சீக்கிரமா காபியோட வாம்மா டாக்டரம்மா கிளம்பனுமாம்” என சொல்ல வைதேகியும்