.அங்கு படுக்கையறையில் வைதேகி கவலையுடன் சரவணன் ஊசி போட்ட இடத்தில் ஒத்தடம் வைக்க அவனோ
”சின்ன புள்ளைன்னு கூட பார்க்காம என்னை ஏமாத்தி இப்படியொரு வேலையை செய்துட்டாங்கம்மா, நான் எவ்ளோ பயந்தேன் தெரியுமா, எவ்ளோ ஓடினேன் தெரியுமா என்னை விரட்டி விரட்டி பிடிச்சாங்கம்மா, எனக்கு வலிக்க வலிக்க அந்த மலரப்பா ஊசியை நறுக்குன்னு குத்திட்டாரும்மா, குத்தினப்ப எனக்கு எவ்ளோ வலிச்சது தெரியுமா நான் அழுதுட்டேன்மா” என சொல்லி வருந்த அதைக் கேட்டபடியே வந்த மலரோ வைதேகியை பார்க்க அவரின் கண்கள் கலங்கியிருந்து அதைக்கண்டு மலரின் முகம் வாடியது
”சே ஆன்ட்டி ரொம்ப கஷ்டப்படறாங்களே பாவம்” என நினைத்தவள் சத்தம் எழுப்பாமல் வைதேகியிடம் வந்தாள். மலரை கண்டதும் ஏதோ பேச வந்த வைதேகியை நிப்பாட்டினாள் மலர், அவரோ கண்களாலேயே சரவணனை காட்டி பாவம் என சொல்ல அவளும் புரிந்துக் கொண்டு அவரை செல்லுமாறு சைகை செய்ய அவரும் வந்தவளுக்கு காபி தர எண்ணி கிச்சனுக்குச் சென்றார். அவர் இல்லாததை கூட அறியாத சரவணனோ
”அம்மா அம்மா இருக்கியா ஏன் ஒத்தடம் வைக்கலை வைம்மா அப்புறம் வீங்கிட போகுது, இப்பவே கையை அசைக்க முடியலை” என சொல்ல மலரும் அவனுக்கு ஊசி போட்ட இடத்தை மெதுவாக தடவிப் பார்த்துவிட்டு ஒத்தடம் வைக்கலானாள்
”ஆனாலும் மலரப்பா இப்படி எனக்கு துரோகம் செய்திருக்க கூடாது ஆனா, அவர் நல்லவர்தான்மா, எனக்கென்னவோ இதுக்கு பின்னாடி அந்த மலர்தான் இருக்கனும், அவள் நினைச்சதை சாதிச்சிட்டா சே அவளைப் போய் நான் நல்லா பாடினீங்கன்னு பாராட்டினேன் பாரு என்னை சொல்லனும்மா” என ஆதங்கப்பட மலரோ மென்மையாக சிரித்துவிட்டு பாடினாள்
ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்
ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்
ஹ்ம்ம் ம்ம் பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்