என பாடவும் அவனுக்கு திக்கென்றது சட்டென எழுந்து அமர்ந்து அவளைப் பார்த்து அதிர்ந்தான்
”என்ன ரொம்ப ஓவரா திட்டற கொழுப்பா உனக்கு”
”நான் ஒண்ணும் திட்டலை, உங்கப்பா என்ன காரியம் செய்தார் தெரியுமா”
”என்ன செஞ்சாரு உன் உசுருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னு தடுப்பூசி போட்டாரு அது தப்பா”
”எனக்கு எப்படி வலிச்சது தெரியுமா”
”அது சிலருக்கு அப்படித்தான் வலிக்கும், நாளைக்கு சரியாயிடும் ஆமா காய்ச்சல் வந்தா மாத்திரை போடனும்னு சொல்லி மாத்திரை கொடுத்திருப்பாங்களே எங்க அது”
”வந்த உடனே சாப்பிட்டேன்”
”அது காய்ச்சல் வந்தாதான் போடனும்”
”எனக்கு வந்துடுச்சி அதான் போட்டேன்” என சொல்ல அவளோ அவனின் நெற்றியில் கைவைத்துப் பார்த்து
”இல்லை காய்ச்சல் வரலையே”
”இல்லை இருந்தது நான் மாத்திரை போட்டதும் போயிடுச்சி போல”
”முந்திரிக்கொட்டை எல்லாத்திலயும் அவசரம் உனக்கு, காய்ச்சல் வர்றதுக்குள்ள பயத்திலயே மாத்திரை போட்டாச்சா உன்னை என்ன சொல்றதுன்னு தெரியலை சரி சரி ரெஸ்ட் எடு ஆமா அடுத்த டோஸ் எப்ப போடனும்னு தெரியுமா”