”அம்மா எடுப்பாங்களா ஏன் நீ எடுக்க மாட்டியா வா இப்படி” என அவனை கையோடு அழைத்துக் கொண்டு சென்றார்.
ஜென்ஸ் செக்ஷ்னில் சரவணனை நிப்பாட்டி அவனுக்கு எற்ற சட்டைகளை தேர்வு செய்துக் கொண்டிருந்தார்
”இது எப்படிடா இருக்கு“
”நல்லாயிருக்கு”
”அப்ப இது”
”இதுவும் நல்லாதான் இருக்கு”
”ஏதாவது ஒண்ணு சொல்லு”
”உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அது எனக்கும் பிடிக்கும்” என சொல்ல கடைக்காரனோ அசந்துவிட்டான்
”இந்த காலத்தில அப்பனும் புள்ளையும் இவ்ளோ ஒற்றுமையா இருக்கறதை நான் இப்பதான் பார்க்கிறேன்” என சொல்ல ஒரு நொடி ரவி கண்கள் கலங்கிவிட்டார். ஏனோ தெரியவில்லை தானாக அவரின் கண்கள் கலங்கியது அதை சரவணன் பார்த்துவிடக் கூடாதென மறைத்தவர் அவனுக்காக துணிகளை எடுத்துக் கொண்டு வந்தார். சரவணனோ இப்போது தாயின் பின்னால் செல்ல மலரிடம் வந்தார் ரவி
”இந்தாம்மா துணி சரவணனுக்கு எடுத்தேன், நாளைக்கு உடுத்திக்கச் சொல்லு”
”சரிப்பா”
”அவனை கொஞ்சம் மாத்தும்மா இன்னும் குழந்தை போல இருக்கான், அங்க பாரு என்ன