என சொல்ல அவரோ சோர்ந்துப் போனார்
”ரங்கோலி போடலைன்னா காபி கிடைக்காது போல இருக்கே” என மனதில் நினைத்தவர் சரவணனை பார்த்து
”ஏன்டா சரவணா” என அழைக்க அவனும் பார்த்துவிட்டு ஓடிவந்தான் அவரிடம்
”சொல்லுங்க மலரப்பா”
”இதப்பாரு உன் அக்காவுக்கு ரங்கோலி போடனும்னு ஆசையாம் அவளுக்கு கலர் எல்லாம் எடுத்துக் கொடு” என சொல்ல அவனும் சரியென்றான். அதே போல சந்தியாவுடன் இணைந்து ரங்கோலியும் போட்டு முடித்தான்.
சந்தியாவும் ரவியிடம்
”வாங்க காபி தரேன், புத்தாண்டாச்சே கோயிலுக்கு போகலாம்”
”மலரும் சரவணனும் வரட்டும் எல்லாரும் ஒண்ணா போலாம்” என ரவி சொல்லிவிட அவரும் சரியென்றார்
ரங்கோலி கோலம் அருமையாக இருந்தது, சரவணன் மலரையும் வைதேகியையும் அழைத்து காண்பித்தான். அவர்களும் அதைக்கண்டு ரசித்தார்கள் அடுத்து சரவணனோ ரவியிடம்
”மலரப்பா ஹாப்பி நியூ இயர்” என்றான் மகிழ்ச்சியாக அவரும் பதிலுக்கு
”ஹாப்பி நியூ இயர்” என்றார் நிறைவாக அடுத்து சந்தியாவை பார்த்து
”அக்கா ஹாப்பி நியூ இயர்” என்றான் குதூகலமாக அவரும்
”ஹாப்பி நியூ இயர்” என்றார் உற்சாகத்துடன்