"எப்படி?" என்று கேட்டார் குடியானவர்.
"என் தாய்க்கு மூத்த அண்ணன் மேல் பற்று அதிகமாயிருந்தது. என் தந்தைக்கு இரண்டாவது அண்ணன்மேல் பாசம் அதிகமாயிருந்தது. என் மூன்றாவது அண்ணனுக்கு யாருடைய அன்பும் கிடைக்கவில்லை. அந்த ஏக்கம் அவனை வாட்டிக் கொண்டிருந்தது. நான் பிறந்த பின், தாய் தந்தை இருவருமே கடைசிப் பிள்ளையான என்னிடம் மிகுந்த அன்பு செலுத்தினர்கள். அந்த நிலையில் என் மூன்றாவது அண்ணன் முற்றிலும் ஒதுக்கப்பட்டவணுகி விட்டான். அன்புக்காக ஏங்கி ஏங்கி அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.
"சென்ற ஆண்டு நான் என் தாயைப் பார்க்கப் போனபோது தங்கள் கருத்துப்படி அண்ணனை என்னுடன் அழைத்து வந்து வைத்துக் கொள்ளப் போவதாகச் சொன்னேன். "அவன் பைத்தியமாயிற்றே, வேண்டாம்" என்று முதலில் மறுத்தாள். பிறகு நான் ஒரே பிடிவாதமாயிருந்ததால் ஒப்புக் கொண்டாள். அவளும் எனக்குத் துணையாக வீட்டில் வந்திருந்து அண்ணனைக் கவனித்துக் கொள்ள முன் வந்தாள். நான் அண்ணனைப் பைத்தியக்காரனாகக் கருதாமல் அன்பும் மரியாதையும் காட்டி நடந்து கொண்டேன். இதைக் கண்டு என் தாயும் அவனிடம் அன்பாக நடந்து கொண்டாள். பிள்ளைப்பாசம் அப்போதுதான் அவளுக்கு ஏற்பட்டது. எங்கள் அன்பு கிடைக்கத் தொடங்கியபின், அண்ணனுடைய பைத்தியம் சிறிது சிறிதாகத் தெளிய ஆரம்பித்தது. இப்போது அவன் முற்றிலும் தெளிந்தவனாகி விட்டான். ராஜகிரியில் உள்ள ஒரு கோயில் மடப்பள்ளியில் அவன் வேலை பார்த்து வருகிறான்” என்று சொல்லி முடித்தான் இளைஞன்.
"சரி, அடுத்த சோதனையை நான் இப்போது சொல்லுகிறேன். நீயும் உன் மூன்றாவது அண்ணனும் இப்போது உங்கள் இரண்டாவது அண்ணனைப் போற்றி நடக்க வேண்டும். ஓராண்டுக்குப் பிறகு இதே சத்திரத்தில் சித்திரை மாதத்து முதல் வெள்ளிக்கிழமையன்று என்னை வந்து பார்" என்றார் குடியானவர்.
"சரி, அப்படியே செய்கிறேன்" என்றான் அந்த இளைஞன். அன்று பகல் அவன் சத்திரத்திலேயே மற்றவர்களோடு சாப்பிட்டான். தனிச் சாப்பாடு தேடிப் பிராமணர் வீட்டுக்குப் போகவில்லை. புத்த பெருமான் கொள்கைகளில் அவனுக்குப் பற்று ஏற்பட்டிருந்தது. மாலையில் திரும்பவும்