(Reading time: 11 - 21 minutes)

தடைகள் நீங்கி - அபி பாலா 

 Thadaigal Neengi

ழக்கத்திற்கு மாறாக இருந்தது இந்த காலை உதயம் ஸ்ருதிக்கு...

எப்பொழுதும் விடியலில் தவறாமல் எழுந்து புது நாள் பிறக்கும் அழகை ரசிப்பது ஸ்ருதியின் வழக்கம்.. ஆனால் , இன்றைக்கு ரசிக்க முடியவில்லை..

இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது தாமோதிரன் கொடுத்த கெடு முடிய . தாமோதிரன் சொன்ன நாள் நெருங்க நெருங்க பதற்றமும் குழப்பமும் அதிகரித்து கொண்டிருந்தது.

அன்றைக்கு அலுவலகம் கிளம்பும்போது ஸ்ருதியின் போன் சிணுங்கியது “உன்னாலே மெய் மறந்து நின்றேனே மைவிழியில் மைய்யழுடன் வந்தேனே...” என பாடிகொண்டே தினேஷின் எண்ணை காண்பித்தது.

“ஹலோ ஸ்ருதி ”...

“சொல்லுங்க தினு “

“நாம் இன்றைக்கு மீட் பண்ணலாம், மதியம் 12 மணிக்கு உன்னை உன் boutique ல் பிக் அப் பண்ணிக்குறேன் .. ரெடி அ இரு...” என்று பதிலுக்கு கூட காத்திராமல் போனை கட் செய்தான்.

என்னவாக இருக்கும் என்று யோசித்தவாரே கிளம்பினாள் ஸ்ருதி..

வழக்கத்திற்கு மாறாக அவன் அவளை ஸ்ருதி என்று அழைத்தது அவளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது ...

அவளை  சந்தித்து காதலை சொன்ன நாளில் இருந்து அவன் அவளை ஸ்ருதி என்று அழைத்தது இல்லை..

இன்று என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே என வருந்தினாள்.

எல்லாம் தாமோதிரனால் வந்த வினை.இன்று என்ன குண்டு போட்டாரோ என நினைத்து கொண்டே அவள் ரூமை பூட்டி விட்டு படி இறங்கி வந்தால் ஸ்ருதி.

ஸ்ருதி ‘ fasion boutique’ க்கு உரிமையாளர்..

அவள் அன்னை தந்தை ஒரு விபத்தில் இறந்து போய்விட்டனர் . பூர்விக சொத்து இருந்தும் அவள் ஒரு விடுதியில் தான் தங்க நேர்ந்தது . காரணம் அவள் சொந்தங்கள் அவளை ஏமாற்றிவிட்டனர். அவளிடம் இருந்த நகைகளை விற்று அந்த boutique ஐ உருவாக்கினாள். ஆரம்பத்தில் அவள் மட்டுமே பணி புரிந்தாள்.

இப்பொழுது மூன்று பேருக்கு சம்பளம் தரும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறாள்.

தினேஷ் தாமோதிரன்-சுமதி தம்பதியின் ஒரே புதல்வன்.. தாமோதிரன் ‘dinesh group of companys’ என்ற நிறுவனங்களின் நிறுவுனர், தினேஷ் அந்நிறுவனங்களின் எம்.டி..

ரு நாள் ஷாபிங் போனபோது ஸ்ருதியை சந்தித்து, காதல் வயப்பட்டு, காதலையும் அவளிடம் சொல்லி விட்டான். அவளுக்கும் அதே உணர்வுகள் என தெரிந்ததும் ஆனந்தம் தாளவில்லை அவனுக்கு.

அவர்கள் காதலுக்கு வயது 2. நிண்ட நாளாக திருமணம் செய்துகொள் என்று கெஞ்சி கொண்டு இருந்த தாய்க்கு தன் காதலியை அறிமுகம் செய்துவைத்தான் தினேஷ்.

திருமணம் செய்துகொள்ள மாட்டானா என ஏங்கி கொண்டிருந்த தாய்க்கு அவனின் காதல் விவகாரம் தெரிந்ததும் மிக சந்தோஷம்.

தாய்க்கு அறிமுகம் செய்த கையோடு தந்தையின்  காதிலும் விஷயத்தை போட்டான்.

தந்தைக்கும் அதே மனநிலை தான் .பேரன் , பேத்தி காண மாட்டோமா என்றிருந்தவருக்கு மகனின் காதல் விஷயம் தெரிந்ததும் சந்தோஷம் தாங்கமுடியவில்லை.

ஒரு நாள் தந்தையும் தாயும் திருமணம் குறித்து பேச ஸ்ருதியை  அழைத்து வர சொன்னார்கள்.

அவனும், அவளிடம் விஷயத்தை சொன்னான். அதிர்ந்தான். காரணம் அவள் முகத்தில் யோசனை ரேகைகள். அவள் தினு பெற்றோரிடம் இப்போது திருமணம் வேண்டாம் என்று கூறினாள். இப்போது அவனுடைய பெற்றோர்களும் குழம்பினார்கள். காரணம் புரியாமல் அவளிடமே கேட்டுவிடலாம் என எண்ணி அவளிடம் சென்றான்.

“ஏன் இப்போது திருமணம் வேண்டாம் என்று சொன்னாய் “..

“எனக்கு விருப்பமில்லை”

“திருமணத்தின் மீதா இல்லை என் மீதா” பொங்கினான் தினேஷ்.

“தினு” கண்கள் கலங்கியவாறு மறுத்தாள்..

“சொல்லு .. எனக்கு இப்போ பதில் வேணும் “ கோபமாக கேட்டான்.

“தினு உங்கள் மீது உயிரையே வைத்து இருகிறேன். நீங்களில்லாமல் நானில்லை. ஆனால் திருமணம் இப்போது வேண்டாம்.ப்ளீஸ்...” அழுது விட்டாள் அவள்.

“ஏன்....” கோபம் தணிந்து குழப்பமாக கேட்டான் .

“ஏனென்றால் நீங்கள் பெரிய நிறுவனத்தின் உரிமையாளர். ஆனால் நான் ஒரு சிறிய கடையின் உரிமையாளர்...அதனால்..........”

“அதனால்......”

“உங்களுக்கும் எனக்கும் அந்தஸ்து வித்தியாசம் என கழற்றிவிட பார்கிறாயா”- தினு.

“அய்யோ,. இல்லவே இல்லை “-ஸ்ருதி.

அவளை அழைத்து அருகில் அமர்த்தி மெதுவாக கேட்டான் “பின்பு ஏன் வேண்டாம் என்கிறாய் “..

“ கொஞ்ச நாள் போகட்டும் தினு.. இப்போது தான் கடை ஓரளவுக்கு பிரபலம் ஆக தொடங்கியிருக்கு. உங்கள் அளவு இல்லை என்றாலும் ஒரு நல்ல நிலைமைக்கு வந்தபின் திருமணம் பத்தி பேசலாம்” என்று முடித்தாள்

“புரியாமல் பேசுகிறாயா!!! எண்ணை மணந்தால் தானாய் நிலை உயர்ந்து விடாதா . “

“இல்லை தினு ... எனக்கு அப்படி உங்களை மணக்க இஷ்டம் இல்லை, நான் உங்களை உங்களுக்காக மட்டுமே நேசிக்குறேன்.........”

நெகிழ்ந்தான் தினு.

“ஆயிரம் இருந்தாலும் உலகம் என்று ஒன்று இருகிறது தினு. நான் இப்போது உங்களை மணந்து கொள்ள சம்மதித்தாலும், அவர்கள் வாழ்த்தலாம். ஆனால் முதுகிற்கு பின்னால் ‘என்ன வலை விசினாளோ’ என்று சொல்லுவார்கள் தினு. அதனால், என்னுடைய நிலை கொஞ்சம் உயர்ந்த பின்னால் திருமணம் வைத்துகொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், எனக்கென்று கனவுகளும் இலட்சியமும் இருக்கிறது தினு. நம்முடைய boutiqueஐ நல்ல நிலைமைக்கு கொண்டு வர வரைக்கும் திருமணம் குறித்து பேசவேண்டாம். அது போக உங்கள் தொழில் வட்டத்தை உபயோகித்து எனக்கு வாய்ப்புகள் குடுக்க வேண்டாம்” என்று முடித்தாள்.

குழப்பமாக வீடு வந்து சேர்ந்தவன், பெற்றோரிடம் தெரிவித்தான்.

“அப்பா, நான் அவள் விருப்பத்தை மதிக்கிறேன்.  அவளுக்கு காத்திருப்பேன்“ என்று அவன் அறைக்கு சென்றான்.

ஆனால் அவனது பெற்றோர்கள் இதை ஏற்கவில்லை.

தாமோதிரன் ஸ்ருதியிடம் “உன் விருப்பதை தினேஷ் கூறினான்.சொந்த காலில் நிற்க அசை படுகிறாய் எனும்போது சந்தோஷமே. ஆனால், உங்கள் இருவருக்குமே வயது என்று ஒன்று இருகிறது . அதனால், உனக்கு சில அவகாசம் தருகிறேன். அதற்குள் உன் இலட்சியத்தை நிறைவேற்றி விடம்மா. அந்த அவகாச காலம் இரண்டு ஆண்டுகள். அதன் பிறகு நீ தினேஷை மணக்க வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லைமா.” என்று கூறி சென்றார்.

நாளை அந்த அவகாசம் முடிகிறது. பதற்றத்தை வெளியில் காட்டாமல் வேளையில் ஈடுபட முடியவில்லை .

ன்று அவளுக்கு ஒரு முக்கியமான மீட்டிங். அவள் நீண்ட நாட்களாக உழைத்து உருவாக்கிய டிசைன் அந்த வெளிநாட்டு குழுவுக்கு பிடித்து போக அவர்கள் அதை வங்கி கொள்ள முடிவெடுத்தார்கள். அதன் விலை நிர்ணயம் குறித்து பேசவே இந்த மீட்டிங். அவர்கள் பல நாடுகளின் கலை மற்றும் சிறப்புகளை ஆராய்ச்சி செய்யும் குழு. அவர்கள் இதை வாங்கினால், அதன் மூலம் நிறைய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் பல நாடுகளில் ஸ்ருதியின் டிசைன் பிரபலம் ஆகும். அவள் boutique இன் புகழ் மேலும் உயரும்.

சரியாக காலை 9.30 மணிக்கு மீட்டிங் தொடங்கியது.

“Ms. shruthi your design is very nice. but, here we go with a design which is good compared to yours design. “ என்று அவர்கள் அந்த டிசைனை காட்ட அதிர்ந்தாள் அவள்.

அவளின் டிசைனிற்கும் அவர்கள் கொடுத்த டிசைனிற்கும் சில வேறுபாடுகளே.

அப்படி என்றால்  அவளின் டிசைன் களவாடப்பட்டுள்ளது. யார் இதை செய்திருப்பார்கள்.

‘ஐயோ, நிலைமை உயரபோகிறது என்று எண்ணினேனே. இப்படி மோசம் போய்விட்டேனே ‘ மனதினுள் வருந்தினாள் அவள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.