(Reading time: 11 - 21 minutes)

What shall we do now. If you agree we will sign the contract with them. orelse can you make a design better than this. we have confidence in your talent. since, we saw all the designs in your album. All designs were excellent. we are intrested to sign a contract with you. what do you say” என்றான் குழுவின் தலைவன்.

“I ll do another design. but, it will take time.. Is it ok?” என்றாள் ஸ்ருதி

“No problem ms.shruthi. we will wait” – குழு தலைவன்.

மீட்டிங் முடிந்து வெளியில் வந்தவளுக்கு பூமியே காலுக்கு கீல் நகர்வது போன்றிருந்தது. யாரையும் சந்தேகிக்க முடியாமல், என செய்வதென்றே புரியாமல் தவித்தாள்.

மதியம் தினு வந்தான். அவளின் சோர்ந்த முகத்தை கண்டு குழப்பமுற்றான்.

“என்ன ஸ்ருதி  என்ன ஆச்சு. ஏன் உன் முகம் சோர்ந்து இருக்கு. உடம்பு சரி இல்லையா.? “

அவள் நடந்ததை கூறினாள்.

“உன் திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தைரியமாய் இரு. உன்னால் அதை விட நல்ல டிசைன் உருவாக்க முடியும். கவலை படாமல் அதற்கான முயற்சியை எடு “ என்று தைரியம் சொன்னான் தினேஷ்.

“ஆனால் தினு நாளையோடு உங்கள் தந்தை கொடுத்த கெடு முடிகிறது. இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் காண்ட்ரக்ட் சைன் ஆகிருந்தால் என் நிலை கொஞ்சம் உயர்த்து இருக்கும். இப்போது இது இழுகிறதே...”அடங்க மாட்டாமல் கண்ணீர் விட்டாள்.

அவன் எவ்வளவோ ஆறுதல் கூறியும் அவள் சரியாகவில்லை. பின்பு எதோ தெளிவானவள் போல் அவளுடைய அலுவல் அறைக்கு சென்றாள். பணியளிடம் இரண்டு காபி கொண்டு வர சொன்னாள். சிறிது நேரம் பேசி விட்டு சென்றான் தினேஷ்.

பின்பு, பணிபுரிபவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்து விட்டு அவளுடைய அறைக்கு சென்றாள். பழைய டிசைனை எடுத்துக்கொண்டு ஹோஸ்டலுக்கு சென்றாள். மதிய உணவை அறைக்கு கொண்டு வர சொல்லிவிட்டு மாடி படி ஏறினாள்.

உணவை  முடித்துக்கொண்டு, வேளையில் இறங்கினாள். புது ஸ்கெட்ச் தயாரித்தாள்.அதில் என்னென்ன பாகம் என்னென்ன மாறி உருவாக்க வேண்டும் என முடிவுசெய்தாள். அதே போல் வடிவமைத்தாள்.புது யுத்திகளை புகுத்தினாள். முடிவில் ஒரு புது டிசைன் உருவானது. அதில் குறை இருக்கிறதா? என்று சரி பார்த்தாள். எந்த குறையும் படவில்லை.

அவள் அமைத்ததிலே இந்த டிசைன் தான் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

மணி பார்க்க போனை பார்த்தபோது தினு இருபது முறை கால் செய்திருப்பது தெரிந்தது.

“ஐ யம் சாரி தினு. இ வாஸ் காண்சென்ட்ரேடேட் இன் வொர்க். வெரி சாரி தினு. மீட் யு டுமாற்ரோ. குட் நைட்” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்..

மனநிறைவுடன் உறங்க சென்றபோது தான் தெரிந்தது மணி இரண்டை இருந்தது.

காலையில் கொஞ்சம் தாமதமாக எழுந்து அவசரமாக boutique கிளம்பினாள்.

போகும்வழியில் அந்த வெளிநாட்டு குழுவை வர சொன்னாள்.

அவர்கள் வந்து சேர்ந்ததும் மீட்டிங் ஆரம்பமானது. தன்னுடைய புது டிசைனை காண்பித்தாள். எல்லோரும் ஆச்சர்யத்தின் விளம்பிற்கே சென்று வந்தார்கள். எல்லோருக்கும் அந்த டிசைன் பிடித்து போக, அப்போதே காண்ட்ரேக்ட் சைன் ஆகிவிட்டது.

“people I like to keep this design secret for some days to avoid some confusion. what do you say?”- ஸ்ருதி

“we agree for this ms.shruthi. really amazing design. congrats ms.shruthi”- குழு தலைவன்.

“thank u.” என்று மீட்டிங்கை முடித்து விட்டு , நேராக தினுவை பார்க்க சென்றாள்.

அவளின் முகத்தில் சந்தோஷத்தை கண்டவன்போல் “ என்ன விஷயம். மேடம் ரொம்ப சந்தோஷமா இருக்கிங்க. இந்த அடியேன் கிட்ட சொன்ன அடியேனும் சந்தொஷபடுவேன்.”

“சொன்ன நம்பமடிங்க தினு. அந்த வெளிநாட்டு குழுவோட காண்ட்ரேக்ட் சைன் ஆகிடுச்சு. முன்பணம் மட்டும் ஐம்பது லட்சம் வந்திருக்கு.” என்று தன் புது டிசைனை காட்டினாள்.

அவன் வியந்து பாராட்டினான் ”எப்படி ரதி, ஒரே இரவில் புது டிசைன் உருவாக்கினாய் !!. அருமையாய் உள்ளது... எனக்கு மிகவும் பிடித்திருக்கு”

“எல்லாம் உங்களால் தான் தினு”

“என்ன என்னாலா?”

“ஆமா தினு, இந்த காதலன் , காதல் கணவனாக வரணும்னா என் நிலை உயரனும். எல்லாம் கூடிவர்ற நேரத்தில் நான் ஏமாந்துட்டன் இல்ல இல்ல ஏமாற்றபட்டுடேன். உங்களுக்கு தெரியுமா தினு அந்த நேரத்தில் எவ்ளோ துன்பப்பட்டேன்னு.(அடி பாவி நீ கலங்கி இருந்தப்ப என்னலாம் சொல்லி ஆறுதல் சொன்னாரு நம்ம ஹீரோ, அதுக்குள்ள மறந்துட்டு உங்களுக்கு தெரிமான்னா கேக்குற. எல்லாம் நேரம்).  மாமா (‘உங்கள் அப்பா’ இப்போது மாமாவாகி விட்டாரு. நடத்துங்க ) கொடுத்த கெடு வேற முடியபோகுது. எனக்கு என்ன பண்றதுனே தெரியல(உனக்கு மட்டுமா தெரியல, நம்ம ஹீரோக்கும் தான் தெரியல).”

“அப்புறம்”-தினு

“அப்புறம் என்ன எல்லாருக்கும் இரண்டு நாள் விடுமுறை கொடுத்துட்டு புது டிசைன் உருவாக்கினேன். அப்றோம் நடந்தது உங்களுக்கு தெரியும்.”

“ம்ம்.. “-தினு

“என்ன ம்ம் ... எத்தனை நாள் ஆச்சு தெரியுமா நீங்க என்னை ரதின்னு கூப்பிட்டு” என்று வருத்தப்பட்டாள்.

“சாரி ரதி.. எதோ டென்ஷன்”-தினு

“ம்ம் . இருக்கட்டும். சரி மாமா கிட்ட சொல்லிடலாமா?”-ஸ்ருதி

“ஓ அதுக்கென்ன சொல்லிடலாம். ஆனால், கொஞ்சம் முக்கியமான வேளை இருக்கு . கொஞ்சம் வெயிட் பண்ணு வந்துடுறேன் “-தினு

“சரி.. நான் வெளியில் இருக்கேன். “ –ஸ்ருதி.

தாமோதிரன்-சுமதி தம்பதி  திருமண தேதியை குறித்தனர்.

இருவருக்குமே சிறகு முளைத்து வானில் சிறகடிப்பது போல் ஓர் உணர்வு.

சரியாக ஒரு வாரம் கழித்து ஒரு தபால் ஸ்ருதியின் பெயருக்கு வந்தது. பிரித்து படித்தவளுக்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை.

இந்திய கலைத்துறையில் இருந்து வந்து இருந்தது.”சிறந்த வடிவமைப்பாளர் “ என்ற விருதை அவளுக்கு வழங்க போவதாக அறிவித்திருந்தது. கூடவே அவள் புது டிசைனின் பிரதி இருந்தது.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.அந்த டிசைன் யார் அவர்களுக்கு அனுப்பியது.

குழப்பத்துடன் தினு வீட்டிற்கு சென்றாள்.

அவனிடம் விஷயத்தை சொல்லி ஆச்சர்யப்பட்டாள்.

அவனின் முகத்தில் ஆச்சர்யத்திற்கு பதிலாக குறும்பு மின்னியது. கண்டுகொண்டாள் ஸ்ருதி “தினு இது உங்கள் வேலை தானா!!!”

“அமாம் மேடம். உங்ககிட்ட சொல்லாம செய்துட்டனு ஒன்னும் செய்துடாதிங்க “என்றான் பயந்தது போல்.

அவன் சொன்ன விதத்தை கேட்டு வாய்விட்டு சிரித்தாள்.

“ஆமாம் தினு இதெலாம் எப்படி நடந்தது. “

“நீ அன்றைக்கு அலுவல் வந்து உன் சந்தோஷத்தை பகிர்த்து இந்த டிசைனை காட்டினாய் அல்லவா. அப்போது தான் உனக்கு தெரியாமல் எடுத்தேன்.’”

“முக்கியமான  வேலை உள்ளதாய் சொன்னிங்களே ....” – ஸ்ருதி

“அது அப்போது தான் இந்திய கலைத்துறைக்கு அனுப்பினேன்”- தினு

“ம்ம்...சரியான திருட்டு புள்ள தினு நீங்க”- ஸ்ருதி.

ரு சுபநாளில் தினு ஸ்ருதியின் கழுத்தில் மங்கள மஞ்சள் தாலியை கட்டி அக்னியை வலம் வந்து மனைவியாக்கி கொண்டான்.

வெகு பிரமாதமாய் திருமணத்தை நடத்தி வைத்தனர் தாமோதிரன் – சுமதி தம்பதியனர்.

தன் காதலன், காதல் கணவனாக ஆகிவிட்ட சந்தோஷத்தில் ஸ்ருதியும்,

தான் ஆசைப்பட்ட பெண்ணே தன் மனைவியாக பெற்ற பெருமை முகத்தில் தெரிய வரவேற்பில் நின்றிருந்தார்கள் தினேஷ்-ஸ்ருதி தம்பதி.. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.