(Reading time: 16 - 32 minutes)

 

ட சொல்லுக்கா”

"என் மாமா ஏன் இப்படி பண்னறாரு, உங்க மாமா நடிக்கறாரு, உலகத்தை படைத்த கடவுள் நான் ஒரு சிலருக்கு தான் அருள் கொடுப்பேன் என்று சொல்லுமா ?? இந்த கிணத்து தண்ணி பக்கத்துக்கு கிழனிக்கு போக கூடாதாம் அதுக்கு வேற வேலை இல்லையா என்ன ?? பாலிடிக்ஸ் பண்ணுது கடவுள்???"

சின்னபாப்பா "பெரியவங்க விவகாரம் நமக்கெதுக்கு அக்கா "

"அப்படியெல்லாம் என்னால் இருக்க முடியாது, இன்பாக்ட் நான் பெரிய பொண்ணு தான், நீ தான் சின்ன பொண்ணு "

சின்னபாப்பா சிரித்தாள். வசீகரமாக இருந்தது.

"நீ ஏன் இங்க வந்த சொல்லு??? "

"நிம்மதியை தேடி "

"உங்க மாமா எதுக்கு வந்தார் "

"கோவில் கட்ட "

"எதுக்காக "

"நிம்மதிக்காக , திருப்திக்காக "

"அதற்காக தானே, அப்போ ஏன் மற்றதை பார்க்கிற " சின்னபாப்பா

"என்னால கடவுளை புரிஞ்சிக்கவே முடியலை "

"அக்கா.. கட கூட்டல் உள் அதாவது உள்ளத்தை கடந்து அதாவது ஆராய்ந்து பார்க்க வேண்டும் "

"என் மனசு முழுக்க தோற்று போன வலியும், கோபமும் தான் இருக்கு "

"எதையும் சமமாக பார்க்க வேண்டும் அக்கா "

"இதெல்லாம் எங்கிருந்து கத்துகிட்ட, உன்னை போய் சின்ன பொண்ணுனு சொல்லிட்டேன்!! "

"அப்படியே பெரியவங்க பேசுறது கேட்கறது தான் "

"ஒன்னும் புரியல போ "

பி அடுத்து வந்த நாட்களில் அவள் மாமாவிடம் பேசுவதை தவிர்த்தாள். சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கும் அதன் உச்சரிப்புகளுக்கும் உள்ள அதிர்வுகள் எல்லா இடத்திலும் நன்மை பயக்கும். அபி மனதில் இருந்த தேடல் தவிர காயங்கள் மறந்திருந்தது.

ஒரு நாள் சின்ன பாப்பா "அக்கா பக்கத்துக்கு நிலத்தில் முள்ளங்கி போட்டாங்க தானே, விளைச்சலே இல்லை, கோஸ் விளைய மருந்து நிறைய போட்டதால அந்த நிலத்தில் கொஞ்ச நாள் ஏதும் போட வேண்டாம் என்று சொல்லிருக்காங்க அக்கா "

அப்போ கடவுள் இருக்கா என்ன ?? அபியின் கேள்விக்கு சின்னபாப்பா முழித்தால்.

"மாதவா...." என்று உறுமி கொண்டிருந்தான் கண்ணையன்.

பார்க்க அபிக்கு பயமாக இருந்தது. அவன் கண் சிவப்பாக இருந்தது.அவன் மனைவி "அம்மா, என்னம்மா வேணும் ஒனக்கு "

"பெண்ணுக்கு பொடவை வெட்சி குடு " என்றது.

"இன்னைக்கு செவ்வாய்கிழமை, சுமங்கலிக்கு,கல்யாணம் ஆகாத பெண்ணுக்கு ஒரு புடவை  தானம் கொடு ”

மட மடவென வீட்டிற்குள் ஓடியவர் இரண்டு புடவையுடன் வந்தார். அபிநயாவை அழைத்தவர் அவளை உட்கார்த்தி வைத்து கொடுத்து முடித்ததும், கண்ணையன் மனைவியை அழைத்து அவளுக்கு கொடுக்க சந்தேகம் வலுக்க தொடங்கியது அபிக்கு.

அதை சின்னபாப்பா சிரித்தபடி பார்த்துக்கொண்டிருக்க அபி அவளிடம் சென்று "இது என் அம்மா வாங்கிட்டு வந்த புடவை தான் நீ வெச்சிக்கோ " என்று கொடுத்தாள்.

சின்னபாப்பா ஆசையாக வாங்கிக்கொண்டாள். கண்ணையன் கண்களையே பார்த்தாள் அவன் முகம் சிரிப்பது போல் தெரிந்தது அவளிற்கு.

கண்ணையனை கவனித்து பார்த்ததில் மது, மாமிசம் பழக்கம் இல்லாதவனாக இருந்தான். ஆனாலும் ஏனோ அவளிற்கு அவனிடம் கள்ளத்தனம் தெரிந்தது.

"ஏதோ உம் புண்ணியத்துல ரெண்டு புடவை கெடச்சது " என்றாள் சலிப்பாக கண்ணயனின் மனைவி.

"கெடைக்கிற வரையில் லாபம் தான் "

"யொவ் அந்த முருகன் பொண்ணை கேட்டுட்டு வாயா "

"பாக்கலாம் பொறு "

சின்னபாப்பா முகத்தை பார்த்து அபி "என்னா பாப்ஸ் வாடி போயிருக்க "

"சங்கர் மாமாவிற்கு பொண்ணு பார்க்க போறாங்க "

"அதனால் உனக்கென்ன "

"என் கூரைக்கு எங்க போக " என்றாள் கண்களில் நீருடன்.

"அப்படியெல்லாம் உன்னை யாரும் விட்டுட மாட்டாங்க, நீயே சங்கருக்கு முறை பொண்ணு தானே "

"ஆமாம், உங்க ஆளுங்க சொத்த பிரிச்சிக்கிட்டு எங்களை வெளில அனுப்பிட்டா எங்க போக? அதே வர்றவ சொத்தோட வந்தா அங்க போயிடலாம் இல்லை, அப்படி இருக்க என்னை எப்படி கட்டுவாங்கலாம் ??"

"நல்லா வெவரமா தான் இருக்காங்க .." அபி

அபிநயாவிர்க்கு சட்டென்று ஐடியா தோன்றியது. அப்படி செய்தால் இந்த சின்ன பாப்பா பிரச்சனை, அவள் அம்மாவின் பயம், இந்த கண்ணையனின் சுயநலம், மற்ற பிரச்சனைக்கெல்லாம் முடிவு கட்டலாம்.

தன்னால் முடிந்த அளவு கத்தி பார்த்தாள். அவள் அத்தை "என்ன அபி பண்ற "

"ஹி ஹீ ஒன்னுமில்லை அத்தை "

தொண்டை வலி தான் மிச்சம்.  ஒருப்பக்கம் பயமாக இருந்தாலும் முயற்சியை தொடங்கினாள்.

கண்ணயனுக்கு சாமி வரும்போதெல்லாம் கவனமாக பார்ததாள்.

உடலில் தள்ளாட்டம், தொண்டை கிழிய கத்துவது, திக்கி திக்கி பேசுவது, பெரிதாக சிரிப்பது, அரை கண் மூடிய படியே இருக்கும், மரியாதை கொடுக்காமல் பேசுவது,முதல் தடவை பார்க்கும் எந்த மனிதனும் பயப்படும் படி இருக்கும்.

யாருமில்லை என்று உறுதி செய்துக்கொண்டு அபியும் ஆடி பார்த்தாள். சட்டென அவளே சிரித்துக்கொண்டாள். "நம்பளையும் நடிக்க வெக்கிராங்காலே "என்று சொல்லிக்கொண்டு.

"என்னக்கா பண்றே "

"ஒண்ணுமில்ல பாப்ஸ் டான்ஸ் ஆடி பார்த்தேன் "

"அக்கா நீ ட்ரெஸ் எடுத்துக்கலை கும்பாபிஷேகதிற்கு "

"இல்லை பாப்ஸ் எங்க அம்மா சாரி எடுத்துட்டு வர்றாங்க "

"அக்கா உங்க சொந்தகாரங்க எல்லாரும் இங்கே ஒன்னு கூட போறாங்களாமே "

"ஆமாம் பாப்ஸ், பெரியவங்க மட்டும் தான் சின்னவங்கெல்லாம் இந்த நாட்டிலே இல்லை"

சின்னபாப்பா "அக்கா இப்போ எப்படி இருக்க ?, உன் போனை ஆன் செய்து பாரேன் "

அபி "செய்யணும் பாப்ஸ்,எங்க அம்மாவோட நானும் கிளம்புறேன் "

சின்னபாப்பா "உங்க அத்தைக்கு நீங்க இருந்தது உதவியாக இருந்ததே "

அபி "வயசான காலத்துல எங்க அத்தைக்கு வந்த சோதனை பாரேன், காட்டில் மேட்டில் அலைஞ்சிகிட்டு இருக்காங்க "

சின்னபாப்பா "அது அவங்க அவங்க வினை, எதற்குமே காரணம் உண்டுக்கா "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.