(Reading time: 16 - 32 minutes)

 

"சிலநேரத்தில் நீ ரொம்ப மெச்சூர்டாக பேசுற, கீப் இட் அப் பாப்ஸ்"

அதே வசீகர சிரிப்பை உதிர்த்தாள் அவள்.

விடைபெரும் சின்ன பாப்பாவிடம் "பாப்ஸ் கவலைபடமா இரு நல்லதே நடக்கும் " என்றாள் அபிநயா.

"உனக்கும் தான் அக்கா "

கும்பாபிஷேகம் நாளும் வந்தது. காலை ஹோமம் முடிந்து அபிஷேகம் முடிந்து எல்லாரும் அமர்ந்திருக்க அபி சமயம் பார்த்து காத்துகொண்டிருந்தாள்.

சட்டென ஒரு பெண் அலறும் சத்தம் கேட்க எல்லாரும் அங்கே பார்க்க அவள் "ரொம்ப சந்தோஷம், நான் குளுர்ந்துட்டன் நல்லா வெட்சிருப்பன் உன் குடும்பத்தை, எனக்கு இங்க கல்யாணம் பார்க்க ஆசையா இருக்கு சீக்கிரம் என் சன்னிதானத்துல கல்யாணம் நடத்து, நான் இங்கே இருந்து விளைச்சலை பார்த்துக்கிறேன் நீ உன் ஊருக்கு கெளம்பு, இருக்கிற எடத்துல இருந்துக்கிட்டு என்னை நெனச்சி கும்பிடு போடு போதும்" என்றாள்.

மேலும் கண்ணயனை நோக்கி "கூடா சகவாசம் வேண்டாம்டா ஒனக்கு கூடவே நானிருக்கேன், என்னை கவனிக்கலை என்றால் நீ நீயாக இருக்க விட மாட்டேன்" என்றாள்

சின்னபாப்பாவை நோக்கி "ஏய் இங்க வா !! நல்லா இருப்பியாம் குடும்பம் குட்டியோட " என்றாள்.

அபியை அழைத்து "எல்லாருக்கும் ஒலகத்தில் கஷ்டம் வரும் அதை நம்பிக்கையோட எதிர்கொள்ளணும், மனம் போல மாங்கல்யம் அமையும், வருத்த படாதே " என்றாள்.

அபிக்கு கண்ணீர் வழிந்தது.கைகள் நடுங்கியது.

அவள் மயங்கி விழுந்த பின் எல்லாரும் பரபரப்பாக பேசி கொண்டிருக்க அபி மட்டும் "இந்த பொம்பளை எப்படி நான் பேச நினைத்ததை பேசினாள் " என்று நினைத்து கொண்டாள்.

விசேஷம் நல்லப்படியாக முடிய அபியும் அவள் அம்மாவும் அவர்கள் வீட்டிற்க்கு கிளம்பினர். கோவிலில் கும்பிட்டு விட்டு கிளம்பும் போது,

அபி "அம்மா அந்த லேடிக்கு சாமி வந்தது நம்புறீங்களா ம்மா "

சாந்தி "தெய்வம் மானெஷ ரூபேனாம் "

அபி "தமிழ்ல் பேசுங்க "

சாந்தி "எந்த கடவுளும் தங்க கிரிடம் போட்டுக்கிட்டு, கையில் கிளியோ, உடுக்கையோ வெச்சிக்கிட்டு சுத்த தமிழில் பேசிக்கிட்டு வராது, மனிஷனுக்கு மனிஷனா வந்து உதவும் "

"அப்போ நிஜமா என்ன" என்றாள் அவள்.

"நம்பினால் கடவுள், நம்பவில்லை என்றால் உனக்குள் ஒருத்தி " என்றார் அவள் அம்மா

"எனக்கு கடவுள் கண்ணில் படவே இல்லையே "

"உனக்கு பார்க்க தெரியலை "

அப்படியா என்று அவள் பின்னே திரும்பி பார்க்க அங்கே அவள் அம்மா இல்லை. சட்டென கோவிலை பார்த்தவள் அங்கே சின்னபாப்பா அவளை பார்த்து சிரித்துக்கொண்டே மறைந்தாள்.

பக்கவாட்டில் தூரத்தில் கையில் பையுடன் சின்னபாப்பாவும், அவள் அம்மாவும் நடந்து வந்துகொண்டிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.