(Reading time: 11 - 22 minutes)

 

டாக்டர் கண்ணனின் தந்தைக்கு அழைத்து அவரிடம் முக்கிய விஷயம் பேச வேண்டும் என்று சொல்ல, அவரும் என்னவோ ஏதோ என்று தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்தார். மருத்துவரின் அறையை அடைந்தவுடன் அங்கிருந்த இறுக்கமான சூழல் அவர்களுக்கு பயத்தை அளிக்க மருத்துவரிடம் பதைபதைப்புடன் விஷயத்தைக் கேட்டனர்.  அவரும் கண்ணின் பிரச்சனையைக் கூற இருவரும் முதலில் அதிர்ச்சி அடைந்து பின்னர் தன் மகனுக்கு வந்த நோயை நினைத்து அழ ஆரம்பித்தனர்.   

“மனசைத் தேத்திக்கோங்க சார்.  கஷ்டம்தான்......”

“எப்படி டாக்டர் இப்படி ஒரு நோய் கண்ணனுக்கு இருக்குன்னு தெரிஞ்சு மனசைத் தேத்திக்க சொல்றீங்க.  சரி டாக்டர் இவனுக்கு எப்படி இப்படி ஒரு வியாதி வந்தது.  எங்க பையன் தப்புப் பண்ணி இருக்க மாட்டான்”, என்று கேட்க, டாக்டர் HIV பரவும் முறைகளை விளக்கினார், “ஆனால் ஒரு ஆருதல் விஷயம், கண்ணனுக்கு  வந்திருக்கறது HIV 2 டைப் வைரஸ். இதில் வீரியம் கம்மிதான்”

“அப்பா, என்னைக் கொன்னுடுங்கப்பா. இந்த மாதிரி ஒரு பையன் உங்களுக்கு வேண்டாம்.  எனக்கு இப்படின்னு தெரிஞ்சா, உங்களுக்கு எத்தனை அவமானம்”, என்று அவன் தந்தையைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான் கண்ணன்.

“முட்டாள் மாதிர் பேசாத கண்ணா.  நீ ஏதானும் தப்பு செஞ்சு அது மூலமாவே உனக்கு இந்த வியாதி வந்திருந்தாலும் உன்னை விட்டுப் போய் இருக்க மாட்டோம்.  நீ தப்பே செய்யாம உனக்கு இது வந்திருக்கும்போது உன்னை எப்படிடா விடுவோம்”

“சரியா சொன்னீங்க சார்.  கண்ணா இப்போதான் நீ திடமா இருக்கணும்.  சரி இப்போ விஷயத்துக்கு வருவோம். நீ நல்லா ஞாபகப் படுத்திப் பாரு.  கடந்த 6 மாசத்துல ப்ளட் ஏத்தறாமாதிரி சந்தர்ப்பமோ, இல்லை மத்தவங்களோட பொருள் ஏதானும் உபயோகப்படுத்தறா மாதிரி சந்தர்ப்பமோ இருந்து இருக்கா”, என்று கேட்க, கண்ணனும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறினான்.   

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நர்ஸ் டாக்டரிடம், “டாக்டர் நான் ரெண்டு நாள் முன்னாடி பேப்பர்ல ஒரு நியூஸ் பார்த்தேன்.  அதுல ரோட்ல நறுக்கி வச்சு இருந்த பழத்துல அந்த வியாபாரியோட ரத்தம் இருந்ததாவும், அது வழியா HIV கிருமி அதை சாபிட்டவருக்கு பரவிட்டதாவும் போட்டு இருந்தது.  நீங்க அந்த மாதிரி ஏதாவது கடைல சாப்பிட்டு இருக்கீங்களா?”

“அது.... என் ஆபீஸ் பக்கத்துல இருக்கற தள்ளு வண்டிகாரர்க்கிட்ட நிறைய வாட்டி வாங்கி சாப்பிட்டு இருக்கேன்.  டாக்டர் இப்போதான் எனக்கு ஞாபகம் வருது, ஒரு நாலு மாசம் முன்னாடி ஆபீஸ் விஷயமா ஹைதராபாத் போய் இருந்தப்போ உடம்பு சரி இல்லாம போச்சு, அப்போ பக்கத்துல இருந்த டாக்டர் கிட்ட போய் இருந்தேன்.  Fever ஜாஸ்த்தியா இருந்ததால injection போட்டாங்க.  அதுல ஏதானும் கிருமி இருந்து இருக்குமோ”

“ரெண்டுக்குமே சான்ஸ் இருக்கு கண்ணன்.  ஒழுங்கா ஸ்டரிலைஸ் பண்ணாத நீடில் உபயோகப்படுத்தி இருந்தாங்கன்னா அது மாதிரி பரவி இருக்கலாம்.  எந்த டாக்டர் கிட்ட போனாலும், அவங்க use பண்ற இன்ஜெக்ஷன் நீடில் புதுசா இருக்கான்னு எப்பவுமே பார்க்கறது நல்லது.  அப்படி அவங்க செய்யலைன்னா, புதுசா எடுத்து உபயோகப் படுத்த சொல்லுங்க.  அதுல தப்பே இல்லை.  ஏன்னா, நாளைக்கு எதுனா பிரச்சனைன்னா அவஸ்தைப் படப் போறது நாமதானே”

“டாக்டர் இப்போ இவனுக்கு வந்திருக்கறது செகண்ட் டைப் வைரஸ் அப்படின்னு சொல்றீங்க.  அதுக்கு மருந்து இருக்கா டாக்டர்,  அவன் பூரணமா இதுல இருந்து குணமாக வாய்ப்பு இருக்கா டாக்டர்”

“நாம ஏன் AIDSஐ உயிர்க் கொல்லி நோய் அப்படின்னு சொல்றோம் தெரியுமா? அது நம்ம உடம்பு உள்ள பூந்து நம்ம உடம்புல இருக்கற நல்ல செல்களை அழித்து கொஞ்ச கொஞ்சமா நமக்கு நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் வெள்ளை அணுக்களை அழிச்சிடும். அதுவா புதுசா நம்ம உடம்புல எந்த நோயையும் உருவாக்காது.  ஆனா எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து போராடற  சக்தியை நம்ம உடம்புலேர்ந்து அழிச்சிடும்.  அதனாலதான் மரணம் வருதே தவிர, HIV வைரஸ்னால கிடையாது”

“இப்போ கண்ணன் எந்த ஸ்டேஜ்ல இருக்கான் டாக்டர்”

“அவனுக்கு இன்னும் கொஞ்சம் டெஸ்ட் எடுக்கணும் சார்,  அந்த ரிசல்ட் வந்தப்பறம்தான் என்னால சரியா சொல்ல முடியும்.  கண்ணா நீ இதுவரை உன் உடம்பை நல்ல விதமா பார்த்துக்கிட்டது போதாது.  இனிமேதான் ரொம்ப கவனமா எந்த விஷயமும் உன் உடம்பை பாதிக்காத அளவு பார்த்துக்கணும்’

“இனிமே என்ன பார்க்கறது டாக்டர்.  இத்தனை நாள் எந்த ஒரு கேட்ட பழக்கமும் இல்லாம, யோகா, உடற்பயிற்சி அப்படின்னு ரொம்ப கட்டுக்கோப்பா இருந்தேன்.  அப்படியும் எனக்கு இது வந்துடுச்சே.  இதுக்கு நான் கெட்டவனாவே இருந்து இருக்கலாம் போல”

“விரக்தில பேசாத கண்ணா.  நீ கல்யாணம் பண்றது மட்டும்தான் கஷ்டம்.  இந்த வயசுக்கு அதை ஏத்துக்கறது கஷ்டம்தான்.  ஆனால் அதை மீறி நீ வந்துதான் ஆகணும்.  உங்க அம்மா, அப்பாக்காகவாவது நீ உன்னை திடப் படுத்திக்கணும்”

“ஆமாடா கண்ணா,  நீ இத்தனை நாள் எங்களுக்கு ஒரு நல்ல மகனா இருந்து சந்தோஷத்தை மட்டும்தான் கொடுத்து இருக்க.  இனியும் நீ அதே மாதிரித்தான் இருக்கணும்”

“இனிமே என்னால உங்களுக்கு என்ன பிரயோஜனம்ப்பா.  என்னைப் பார்த்து பார்த்து நீங்களும் தினம், தினம் கஷ்டப்படணும்”

“கண்ணா இப்போ நகரங்கள்ல AIDS பத்தி விழிப்புணர்வு இருக்கு அப்படினாலும், கிராமப் புறங்கள்ல அந்த அளவு கிடையாது.  நீ ஏன் ஏதானும் அமைப்போட சேர்ந்து அவங்களுக்கு அதைப் பத்தி எடுத்து சொல்லக்கூடாது.  உன் வாழ்க்கையே ஒரு உதாரணமா சொல்லலாம்”

“ஆமாடா கண்ணா, நீ இத்தனை நாள் எத்தனையோ சோஷியல் செர்விஸ் பண்ணி இருக்க.  அது எல்லாத்தையும் விட இதுதான் உயர்ந்ததா இருக்கும்”

“சரி டாக்டர். எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.  இந்த அதிர்ச்சிலேர்ந்து மொதல்ல நான் வெளில வரேன்.  அப்பறம் கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரியே பண்றேன்”

“That’s the sprit கண்ணன்.  சரி இன்னைக்கு வேண்டாம்.  ஏற்கனவே மனசு கஷ்டத்துல இருக்கீங்க, இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வந்து நான் எழுதித் தர மத்த டெஸ்ட் எல்லாம் எடுத்துடுங்க.  அந்த ரிசல்ட் வச்சு நாம என்னப் பண்றதுன்னு யோசிக்கலாம்.  நீ உன் மன அழுத்தத்துல இருந்து முழுசா வெளில வர என்னோட வாழ்த்துக்கள் கண்ணன்”

வாழ்வே முடிந்தது என்று இருக்கும் கண்ணன், தன்னாலும் இருக்கும் நாள் வரை இந்த சமூகத்துக்கு ஏதோ நல்லது பண்ண முடியும் என்ற நம்பிக்கையுடனும், ஓரளவு தெளிந்த மனதுடனும்  டாக்டரிடம் கூறிக்கொண்டு தன் குடும்பத்துடன் விடை பெற்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.