(Reading time: 33 - 65 minutes)

க நிவந்தின் இன்றைய கோபத்திற்கு காரணம் இந்த சித்தி விஷயம் தானோ...பழசை மறந்து விட்டாயா என்று அண்ணனும் தங்கையும் மாறி மாறி சொன்னார்களே... அவனுக்கு சித்தி மீது நல்லெண்ணமோ...?

சித்தியின் மொபைலில் இருந்து அழைத்தாள் அவனது எண்ணை.

இணைப்பை ஏற்றான் நிவந்த். “சொல்லுங்க அத்தை....எப்டி இருக்கீங்க...?” 

“இது அத்தை இல்ல, அத்தை பொண்ணு பேசுறேன்....நைட் நீங்க இங்க சாப்ட வருவீங்க அப்டியே தன் மகளை கூட்டிட்டு போவீங்கன்னு உங்க அத்தை நம்பிட்டு சந்தோஷமா சமையல் செய்துட்டு இருக்காங்க... சமையல் செய்றது அவங்கதான் நீங்க நம்பி சாப்டலாம்....”

“சரி வரேன்.....” என்றவன் சிறு இடைவெளிவிட்டு “நீ சாப்டியா?” என்றான். அவ்வளவுதான் அழுகை பொத்துகொண்டு வந்தது அஞ்சனிக்கு.

“சாரி...நிவந்த்...ஐ மிஸ்ட் யூ வெரி பேட்லி...உங்க மேல எனக்கு பயங்கர கோபம்....உங்கள பார்க்காம இதுக்கு மேலயும் முடியாது....ப்ளீஸ் வந்துடுங்க....”

மனதில் வந்த அத்தனை நினைவுகளையும் சொன்னாள் மனைவி.

டுத்த அரைமணி நேரத்தில் சித்தி ஃப்ளாட்டின் காலிங் பெல் அழைக்க, ஓடிச்சென்று கதவைத் திறந்தாள் அஞ்சனி. அவன்தான்.

நினைத்து, புரிந்து, உணர்ந்தெல்லாம் செய்யவில்லை. அவனை இறுக்கி அணைத்திருந்தாள். அவனது அணைப்பும் இறுக்கமாய் இருந்தது. இவள் நெற்றியில் முதல் முத்தம் விதைத்தவன், அவளை தன்னோடு சேர்த்து தூக்கியபடி வீட்டிற்குள் இரண்டடி வைத்தான் மெல்ல முனுமுனுத்தபடி. “என் பொண்டாட்டியை ஊருக்கே ஓசி சினிமாவா காண்பிக்க நான் ரெடியா இல்ல...” 

அவன் சொன்ன பின்புதான் சித்தி நவிரா எல்லோரும் ஞாபகம் வர சட்டென அவனிடமிருந்து விலக முயன்றாள்.

“ஹேய்...அதான் உள்ள வந்துட்டமே...” அவன் இவளை விடுவதாய் இல்லை.

“ஷ்....சித்தி சித்தப்பா எல்லோரும் இருக்காங்க....”

“அவங்கெல்லாம் உலகம் தெரிஞ்சவங்க ....வரமாட்டாங்க....” இவள் மென் திமிறல்கள் அவனிடம் தோற்றன.

“நவி குட்டி....?அவ பார்த்தா அசிங்கமா போய்டும்....விடுங்க...” சிணுங்கினாள்.

“வர்றதா இருந்தா அவ இதுக்குள்ள வந்திருக்க மாட்டாளா...?”

வழக்கமாக நவிரா வீட்டில் இருந்தால் ஓடி வந்து கதவு திறப்பது அவளாகத்தான் இருக்கும். இன்று என்னவாயிற்று?

“உங்க சித்தி பிடிச்சு வச்சிருப்பாங்க...” இவள் காதருகில் கலைந்திருந்த முடியை ஒற்றைவிரலால் ஒதுக்கிவிட்டான்.

“ஹை...அத்தானுக்கு நானே ஜூஸ் போட்டு கொண்டு வந்தேனே...” .என்றபடி நவிரா வரும்வரை தன்னவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள் அஞ்சனி.

இவளிடம் சொன்னேனே என்ற பொருளில் கண்சிமிட்டியவன்

“வாங்க வாங்க லிட்டில் ஏஞ்சல்....” என்றபடி ஜூசை எடுத்துக்கொண்டவன் “தேங்க்ஸ் அத்தை” என்றபடி சமயலறையை நோக்கி போனான்.

“வாங்க வாங்க மாப்ள சார்...எதோ எங்களாலான உதவி...” என்றபடி சித்தி சமையலறையிலிருந்து வெளிப்பட்டார்.

ஆக நிவந்தின் ஆட்களை எடைபோடும் திறன் முழுக்கவும் சரியே.

அதன்பின் மிக இயல்பாய் சித்தி சித்தப்பாவுடன் அரட்டை அடித்துக்கொண்டு, அவர்களிடம் இவளை கேலி செய்துகொண்டு, நவிராவுடன் போட்டி போட்டு சாப்பிட்டு அவளை சாப்பிட வைத்துகொண்டு, இவளறிந்த நிவந்தாய் அவன்.

விடைபெறும் போது நவிரா மட்டுமல்ல, இவளும் சித்தியும் கூட அழுதார்கள்.

சித்திவீடு கண்மறையவும் காரில் வைத்தே கேட்டாள் அஞ்சனி...

“சாரி....நிவந்த்...சித்தி விஷயத்துல நான் தப்பு செய்துருக்கேன்னு தெரிஞ்சிட்டு...ஆனா உங்களுக்கு இதெல்லாம் எப்படி...?

“முதன்முதல்ல  பார்க்கவுமே உன்னை எனக்கு பிடிச்சிருந்தாலும், பணத்துக்காக என்னை சுத்ற மின்மினிபூச்சிட்ட நான் மாட்டிகிட கூடாதுங்கிற எச்சரிக்கை உணர்வுல உன்னை ரொம்பவும் அப்சர்வ் செய்துட்டுதான் என் விருப்பத்தை என் அப்பாட்ட சொன்னேன்... அப்பாவுக்கும் எனக்கு ஆரம்பத்திலிருந்த அதே எச்சரிக்கை உணர்வு... உன்னை பத்தி விசாரிச்சு இருக்காங்க....அப்ப உங்க சித்தப்பா வீட்டைபத்தி ரொம்ப நல்ல படியா கேள்விபடவும்    கல்யாணத்துக்கு சரின்னு சம்மதிச்சாங்க....ஆனாலும் எங்க வீட்ல இருந்து பொண்ணு கேட்டா உங்க சித்தப்பா வீட்ல மறுக்கதான் செய்வாங்கன்னு எனக்கு ஒரு ஃபீல்... அதான் அப்பாவை கூப்பிடாம நான் மட்டும் வந்து உங்க வீட்ல பொண்ணு கேட்டேன்...நான் எதிர் பார்த்த மாதிரியே பொருளாதார பொருத்தம் இல்லைனு அவங்க மறுத்தாங்க.... கல்யாணத்துக்கு பிறகு எதாவது ப்ரச்சனைனா ஏன்னு கேட்க முடியாத உயரத்துல இருக்கிற வரன் வேண்டாமேன்னு தவிர்த்தாங்க...அதோட என் அப்பாவை தேடி வந்து என் மனசை மாத்த சொல்லி கேட்டுகிட்டாங்க.

அப்ப அவங்க அதுவும் குறிப்பா உங்க சித்தி பேசினதுல எங்கப்பா நம்ம வீட்டு மருமகள் இந்த இடத்துல இருந்துதான் வரனும்னு முடிவே செய்துடாங்களாம்....

அப்புறம்தான் நான் உன்ட்ட வந்து சந்தோஷமா ப்ரபோஸ் செய்தேன்.... ஆனா மேரேஜ் அன்னைக்கு நைட் ரிஷப்ஷன் மேடையில நீ உங்க சித்தப்பா சித்திட்ட ஏன் நவிராட்ட கூட நல்லா மூவ் பண்ணலை... அவங்க இனி உனக்கு தேவை இல்லங்கிறமாதி ஒரு பாடி லாங்குவேஜ்... நான் பயங்கரமா அப்செட் ஆகிட்டேன்....இத்தன வருஷம் எந்த சுயலாபமும் இல்லாம எந்த கட்டாயமும் இல்லாம உன்னை வளத்தவங்களையே உன்னால இவ்ளவு ஈசியா தூக்கி எறிய முடியுதுன்னா, உனக்கு நேரடியா எதுவும் செய்யாத என் அப்பா, தங்கைய நீ எப்படி நடத்துவ..? இப்ப உணர்ச்சி வேகத்துல என்ட்ட நல்லா இருந்தாலும்... இந்த உணர்ச்சிகள் வடிந்த காலத்தில் நானும் உனக்கு வேண்டாதவனா ஆகிடுவேனேன்னு ரொம்பவும் கஷ்டமாயிட்டு...

அதான் நேரே வீட்டுக்கு போகலாம்...பேசி சரியானபிறகு ஹனிமூன் போகலாம்னு வீட்டுக்கு போனேன்... ஆனா அன்னைக்கு நாம வீட்டுக்கு போறதுன்னு ப்ளான் இல்லைங்கிறதால உன் ரூம் அதாவது  உன் திங்ஸ் வைக்றதுக்கான ரூம் ரெடியாகம இருந்துது,  அதுல போய் கதவை பூட்டிகிட்டு நீ  தூங்கிட்ட....நம்ம ரூமுக்கு வரவே இல்லை....

அப்பதான் எனக்கு ஒருவிஷயம் புரிஞ்சிது....எத்தனைதான் உரிமை குடுத்தாலும்...உன்னை பொறுத்தவரை எல்லா இடமும் அடுத்த இடம்...வேர் எவர் யு ஆர்...யு ஆல்வேஸ் ஃபீல் அஸ் அன் அவுட்சைடர்...அப்ப அடுத்தவங்க உரிமையா பழகினா உனக்கு அது உன்னை இன்சல்ட் பண்ற மாதிரி தோணும்..

அப்பதான் மரணம் வரை நீயும் நானும் ஒன்னுன்னு சொல்லி கல்யாணம் செய்து கூட்டி வந்திருக்கேன்...நான் வான்னு கூப்பிடலைங்கிறதுக்காக நீ நம்ம ரூமுக்கே வரலை...இன்ஃபஅக்ட் அதை நம்ம ரூம்னு நீ யோசிக்க கூட இல்லை..அம் ஐ கரெக்ட்....?

“ம்...”.

உங்க சித்திவீட்ல உனக்கு எது ப்ரச்சனையாகி இருக்கும்னு புரிஞ்சிது....அதான்  என்னை பிடிச்சுகிட்டு அவங்களை உதறிட்டு வர்றவ, நான் உன்னை பிடிச்சுகிடாட்டி அப்பவாவது அது உன் இடம்னு தோணும்...உண்மை புரியும்னு பட்டுது... அதோட தன் பிறந்த வீட்டை நேசிக்காத பொண்ணால புகுந்த வீட்ட மட்டும் எப்படி நேசிக்க முடியும்னு எனக்கு தோணும்...? அதான் அனித்ராகூட சேர்ந்து ஒரு குட்டி ட்ராமா....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.