(Reading time: 4 - 8 minutes)

என்னவனே என் காதல் பூ நீ தானடா!!! - சந்தியா

ன் டைரியில் மொட்டுவிட்டது என் காதல்!!

1965 அக்டோபர் மூன்றாம் தேதி

இன்று தான் உன்னை சந்தித்த முதல் நாள் நீயே ஓரு குழந்தையாய் மாறி ஓரு குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தாய் ஆசிரமத்தில். உன் முகமுழுவதும் தாய்மையின் உணர்வை பிரதிபளித்துக் கொண்டிருந்தது .இதற்கு முன் உன்னை பலமுறை சந்தித்து உள்ளேன் என் கல்லுரி வாசலில் உன் தங்கைக்காக காத்துக்கொண்டிருப்பாய். அப்போது தோன்றா உணர்வு இப்போது தான் தோன்றியது. ஏன்? எதற்கு ?என்றால் காரணம் தர மறுக்கின்றது ஒரு பக்கம். ஒருவேளை அந்த குழந்தையாய் நான் என்னை எண்ணியதால் வந்ததா? இல்லை அன்னை இல்லாத நான் உன்னிடம் கண்ட தாய்மையின் காரணமாக வந்ததா? என்று குழம்பியது இன்னோரு பக்கம் என் மனம் . ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது என் மனதுக்கு அது உன்னிடம் நான் என்னை இழந்துவிட்டேன் என்று. அந்த நொடி பாரதியின் கவிதை தான் எனக்கு நினைவு வந்தது

Ennavane"யவனே ஓருவன் என்னகம் தொட்டுவிட்டான்" என்ற வரிகள் தான்.

உன்னை என்னவனாக பார்த்த முதல் நாள் இன்று. அதனால் தான் உன்னை நான் சந்தித்த முதல் நாள் என்றேனடா என்னவனே!

மலர்ந்து விட்டது என் காதல் மலர்!!

ன்றுடன் இரண்டு வருடங்களாகுகின்றன உன்னை காதலித்து . இனி ஒரு நோடிக்கூட உன்னை விட்டு விலகியிருக்க முடியாது . அன்றிலிருந்து அந்த ஆசிரமத்துக்கு உன்னை பார்க்க நாள்தவறாமல் வந்துக் கொண்டிருக்கிறேன் . நீ என்னை பார்க்கும் கள்ளப்பார்வைக்காகவே தவம் இருக்கலாம் என்று தோன்றுமடா என்னவனே அந்த பார்வைக்காக, "உன் வெண்பற்கள் தெரிய உன் இதழ் உதிர்க்கும் புன்னகைக்காகவே நான் பெண்ணாக பிறந்தேனோ என்ற சந்தேகம் எனக்குள் வந்து என் இரவை எல்லாம் தூங்க இரவாக்கியதடா என்னவனே!"

"இதோ உன்னிடம் என் காதலை சொல்ல முடிவேடுத்து விட்டேனடா என்னவனே"

உன் கண்ணின் காதல் அம்புகளின் தாக்கம் தாளாமல் என் இமையை திரைசிலையாக்கிக் கொண்டேனடா என்னவனே !

"வார்த்தைகளிடம் உதவி கேட்டேன்ஆனால் என்னிடம் வார்த்தை விளையாடிக் கொண்டிருக்கின்றது". அதனால் உன்னிடத்தில் நான் நா .......உங் .......க........ள என 'உயிரேழுத்தையும் மெய்யோழுத்தையும்' தேடிக்கொண்டிருக்க

"ம்ம்ம் சொல்லு நீ என்ன" என்று என்னை குறும்பாக பார்த்தான்.__என்னவன்.

"நா....உங்......க......ளை.....கா.........த........லிக்......றேன்" சொல்லிவிட்டேன் எனது காதலை அவனிடத்தில் மனம் முழுவதும் ஒரு நிம்மதி பரவியது.

ஐந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டன. அவனிடத்தில் எந்த ஒரு பதிலுமில்லை. கண்கள் நீரைகொட்டியது. "என்னை என்னவன் விரும்பவில்லையா???

இனி நான் என் செய்யேன்??? என்று நீரை வெளியிட்டபடியே என் கண்கள் அவனை நோக்க அவன் பார்வை என் கண்களை நோக்கிய நிமிடம் என்னவன் கைகளுக்குள் நான்". இந்த நிமிடமே இறந்துவிட மாட்டேனா நான்? எங்கே நமக்குள் சிறுஇடைவெளி விட்டாலும் உன்னை விட்டு பிரிந்துவிடுவேனே என்று உன்னுள் என்னை முழுவதுமாய் புதைத்துக் கொண்டேனடா என்னவனே!

என் காதருகே "என்னை மணந்துக் கோள்வாயா?" என்று நீ கிசுகிசுப்பாக கேட்ட நோடி உன் மூச்சுக்காற்று என் காதுமடலை உரச உடல் எங்கும் சிலிர்த்து. நான் காண்பது கனவாயில்லை நனவா ? என்னவனை விட்டு விளகி அவன் கண்களுக்குள் என் கண்கள் கலக்க என் இதயம் கேள்வி கேட்டது இது உண்மையா ?? இல்லை என் பிரம்மையா?? என் கையோடு என்னவன் கைகோர்க்க கண்கள் இரண்டும் சிக்கிக்கொள்ள சொன்னான் என் முன்னே" உன்னை என் உயிராக நேசிக்கிறேனடி" என்றாயடா .இதுபோதும் நான் உயிர் வாழ என்னவனே!

லர்ந்து உதிர்ந்தது என் காதல்!!

இன்றுகாலையிலே உன் அழைப்பை கண்டதும் மனம் பறவையாய் மாறி பறந்தது. பின்னர் சுதாரித்துக் கொண்டு என் கைவிரல் உன்அழைப்பை ஏற்றேன். உன் குரல் கேட்ட மறுநிமிடம் என்னுள் உதிர்ந்த வார்த்தை இதுதானடா,

என்னவன் __"உன்னை விட்டு பிரியப்போகிறேன்"

என் மனம்__"என் உயிர் என்னை விட்டு பிரியப்போகிறதா??"

என்னவன்__"உன்னை எனக்கு பிடிக்கவில்லை"

என் மனம்__ "இந்த நொடி எனக்கு என்னையே பிடிக்கவில்லையே!

என்னவன்__"உன்னோடு வாழ விருப்பம் இல்லை"

என் மனம்__ "உன்னுடன் நான் வாழந்தே முடித்துவிட்டேனடா என் மனதில் என்னவனே!"

துன்டிக்கப்பட்டது உன் அழைப்புமட்டுமல்ல என் காதலும் தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாயடா,, உன் அழைப்பின் முடிவில் என்னவனே!

திர்ந்த என் காதல் பூ மீண்டும் மலராது!!

இன்றுடன் ஐம்பது வருடமாகிறது என் மனதால் உன்னோடு வாழ்ந்து. நோற்று உன் மனைவியோடு உன்னை பார்த்தேன் ஐம்பது என்ன ஐந்தாயிரம் வருடமானாலும் அவள்மீது எனக்கு பொறாமைதான் உண்டாகும். உன்னருகில் நானில்லாமல் அவள் இருக்கிறாள் என்று . நீ இன்னோரு பெண்ணுக்கு கணவனாகி விட்டாய் என்று தெரிந்தும் இந்த பாழாய்ப் போன மனது ஏற்க மறுகின்றதடா என்னவனே!. இன்றும் நான் உயிரோடு இருக்கின்றேன் என்றால் அதற்கு காரணம் நீ தானடா!. எங்கே என் உயிர் பிரிந்தால் உன் நினைவு என்னை விட்டுபோய்விடுமோ என்றே நான் இன்னும் உயிர் வாழ்கிறேனடா!.

நீ என்னை விட்டு சென்ற பின்பு ஒருவன் வந்தான். "உன்னை உயிராக விரும்புகிறேன் என்னை மணப்பாயா" என்றான்.

"உதிர்ந்த என் காதல் பூ மீண்டும் மலராது"

என்றேனடா அவனிடம்.

என்றும் உன் நினைவிலே வாழ்வேனடா என்னவனே!

ஒன்று மட்டும் என் உயர் பிரியுமுன்பு சொல்லிவிடு "நீ என்னை பிரிய காரணம் என்ன என்று'' இதுவரை எனக்கு விடைக் கிடைக்கவில்லையடா அதற்கு என்னவனே!____ என்றும் உன் நினைவுடன் உன்னவள்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.