(Reading time: 25 - 49 minutes)

ஷார்வி அம்மாவும் இவளது அம்மாவும் ஒரே ஸ்கூலில் தான் டீச்சர்ஸ். இந்த நிர்விகன் ஜீவாவுவுக்கு க்ளாஸ் மேட் என்றால் அவனுக்கும் இவளை சின்ன வயதிலிருந்து தெரிந்திருக்கும் தானே? அதோடு அம்மாவுக்கு இவனைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும்.

பார்வையை மட்டும் திருப்பி அவனைப்பார்த்தாள்.

அவன் வெகு இயல்பாய் இவர்கள் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தான். தன் மனம் போகும் போக்கை கட்டுப் படுத்தி, மீண்டுமாய் ஆராய்ச்சியை அன்றைய எலியான ஜீவா மீதே திருப்பினாள். இவளது இன்டர்வியூவில் ஜீவா டிஸ்டிங்ஷன் ஸ்கோர் செய்திருந்தான்.

“அண்ணா நீங்க உங்க வீட்டு பெரியவங்க மூலமா ஷார்ன்ஸ் வீட்ல பொண்ணு கேளுங்க….அவளுக்கு அரேஞ்ச்ட் மேரேஜ்தான் பிடிக்கும்….பட் எங்கேஜ்மென்ட்க்கு பிறகாவது இல்ல மேரேஜுக்கு பிறகாவது உங்க லவ் ஸ்டோரிய அவட்ட சொல்லுங்க…சந்தோஷமா ஒத்துப்பா….பட் இப்ப அவட்ட சொல்லி அவ சம்மதம் வாங்கின்றதுல்லாம் வொர்க் அவ்ட் ஆகாத ப்ளான்…அதோட அது அவ பேரண்ட்ஸுக்கும் கஷ்டமா தோணும்….”

ஜீவா ஷார்விக்கு ஓகே எனப் பட்டால் எதை சொல்ல வேண்டும் என நினைத்திருந்தாளோ அதை ஜீவாவிடம் இவள் சொல்லி முடிக்கவும், அங்கே வந்து சேர்ந்தாள் ஷார்விகா. இவளைத் தேடித்தான்.

“என்னாச்சு வினி…உனக்கு அடிபட்டுறுக்குன்னு நிரு அண்ணா சொன்னாங்க…”

பரிதவிப்போடு வந்திருந்தாள் அவள்.

“ப்ச்…சின்னதுதான்…டி டி போட்டாச்சு…பயப்பட ஒன்னும் இல்லை….”

இயல்பாய் இவள் சொல்ல அடுத்த ‘படீர்’

வேற யாரு நம்ம ஷார்ன்ஸ்தான்.

பட் கரெக்டா ஜீவா அவர் கடமையை ஆற்றி  காட்ச் பிடிச்சுட்டார்.

அதன் பின் இவள் மறுத்தும் கேளாமல், நான்கு பேருமாக வினியை அவளது வீட்டில் ட்ராப் செய்ய வந்தனர்.

பொண்ணு பிடிக்கலைனு சொல்லிட்டுப் போன நிர்விகனைப் பார்த்தால் வீட்டில் எல்லோருக்கும் வருத்தமாக இருக்குமே. அதனால் தான் இவள் மறுத்ததே.

ஆனால் வீட்டில் எதிர்கொண்ட  அம்மாவோ “வாங்க மாப்ள” என வாய் நிறைய வரவேற்க நேத்து இவன் என்ன சதி செய்துட்டு போனான்? என அவனைப் பார்த்தாள். ஆனாலும் அம்மா முன்னால இப்ப என்ன கேட்டுட முடியும்?

ஆனால் அம்மா இவளை யார் முன்பும் கேட்க முடியுமே கேட்டார்

“இன்டர்வியூ எப்டி போச்சுது வினி?”

இன்டர்வியூவுக்கு போகாமல் மழையில் மாட்டி டி டி போட்ட கதையின் அம்மா அக்சப்டபிள் வெர்ஷனை அனைவரும் சொல்ல

அடுத்த படீரை எதிர் பார்த்தால் அப்படி எதுவும் நடக்காமல் அவர்

 “எல்லோரும் பேசிட்டு இருங்க காஃபி எடுத்துட்டு வாரேன்” என இயல்பாக திரும்ப

வினிக்கு தாங்கவே முடியலை….எப்டி இது அம்மாவுக்கு ஆச்சர்யாமாவே இல்ல?

“அம்மா உங்களுக்கு ஆச்சர்யமாவே இல்லையாமா? “ இவள் இஞ்செக்ஷனைப் பத்தி தான் கேட்டது.

“உனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு அம்மாவுக்கு தெரியாதா…?” என்று அவர் நிர்விகனை பார்வையால் குறிப்பிட்டுவிட்டு உள்ளே போனார்.

அத்தனை பேர் முன்னிலையிலும்  இறுக கட்டிப் பிடித்து அழுந்த ஒரு முத்தம் வைத்தாள் அம்மா கன்னத்தில்.

ன்று இரவு அவளை அவன் மொபைலில் அழைத்தான்.

“நேத்து எங்க வீட்ல என்ன சொல்லிட்டுப் போனீங்க?”

“வேற என்ன , பொண்ண ரொம்ப பிடிச்சிருக்குன்னு உண்மைய சொன்னேன். தட்டு மாத்தி நிச்சயம் செய்து வச்சாங்கா பெரியவங்க...அதாவது வி ஆர் அஃபிஷியலி எங்கேஜ்ட்…”

“ஆங்…அப்றம் ஏன் ஷார்ன்ஸ்ல இருந்து எல்லோரும் சோக கீதம் வாசிச்சாங்க?”

“உன் முழு சம்மதம் இல்லாம உனக்கு வெட்டிங் ஃபிக்‌ஸ் ஆகிருப்ப அவங்க வேற என்ன செய்வாங்களாம்…? நீ எப்டி ரியாக்ட் செய்வியோன்னு ஒரு டென்ஷன் இருகும்ல….அதோட உன்ட்ட எதையும் கிளற வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன்…”

“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லனு தெளிவா சொல்லியும் இப்டி செய்துறுக்கீங்க என்ன? எவ்ளவு தூரம் என் மனச மதிக்றீங்கன்னு தெரியுது” போலியாய் கோபித்தாள்.

“நம்ம மேரேஜ் மேட்டர என்ட்ட விடு பார்த்துகிறேன்னு நான் சொன்னேன்…நீ சரின்னு சொன்ன…நான் அத பார்த்துகிட்டேன் அவ்ளவு தான்…”

“நீங்க படு பயங்கர conspirator”

“உன்ன விடவா வினிப் பொண்ணு?”

“நான் என்ன செய்தேன்?”

“உன் ஃப்ரெண்ட் ஷார்வியை எப்டி trap பண்ணனும்னு ஜீவாக்கு ப்ளான் கொடுத்றுக்கியே அது பேரு என்னவாம்?

“ஆன்…அது  ஃப்ரெண்ட்ஷிப்…”

“இது லவ்”

“…………………….” இவளுக்கு ஏதோ புரிகிறது.

“ வினிப் பொண்ணு என்ன ஆச்சு ?”

“…………………..”

“ஹேய் நீ ஷார்விக்கு செய்தத அவ உனக்கு செய்தா…..…”

“………………….”

“இதுக்குல்லாம் கோப்படுவியா?”

“அவ என்ன சொன்னா?”

“வினிக்கு  கல்யாணம் செய்ய பயம்..…அதனால அவள அப்ரோச் பண்றது சரி வராது…..அவ அப்பா கொஞ்சம் அலயன்ஸ்லாம் பார்த்து இவ  எல்லாத்தையும் வேண்டாம்னு சொல்லி ஒரு டென்ஷன் மூட்ல இருக்கு அவ வீடு அந்த, இந்த டைம்ல போய் உங்க டீச்சர்ட்ட பொண்ணு கேளுங்க….உங்க மேல அவங்களுக்கு நல்ல ஒப்பினியன் இருக்றதால, வினி அப்பா  சரின்னு சொல்லிட்டு…இது தான் மாப்ளன்னு அவட்ட சொல்லிடுவாங்க…அவங்கப்பா சொல்ற எதையும் வினி மீற மாட்டா…அவளுக்கு அப்பான்னா ரொம்ப இஷ்டம். அதுக்கு பிறகு நீங்க அவட்ட நடந்துகிறதுல உங்கள புரிஞ்சிப்பானு சொன்னா”

“சரி நீ எப்டி ஒரே நாள்ள மனமாற்றம்? நேத்து கல்யாணம் வேண்டாம்னு சொன்ன….இன்னைக்கு எனக்காக ஓடாம ஒரே இடத்துல நின்னு இஞ்செக்க்ஷன்லாம் போட்டுகிட்ட?”

“அதுக்லாம் ரீசன் தெரியாது…..நேத்தே கொஞ்சம் பிடிச்சுது….இன்னைக்கு முழுசா பிடிச்சுட்டு அவ்ளவுதான்….”

“அப்டி என்னல்லாம் பிடிச்சுது…? எது இருக்கதுலே அதிகமா பிடிச்சுது?” அவனுக்கு அவள் வாயால் தன் மேலுள்ள காதலைக் கேட்க ஆசை.

“ம்….எது இருக்கதுலே அதிகமா பிடிசுதுன்னா….”

“சொல்லு வினிக்குட்டி”

“ உங்க நேம்….ஏன்னா நம்ம ரெண்டு பேரு இன்ஷியல்ஸ்ஸ சேர்த்துப் பாருங்க…N…V… எனக்கு நான் வெஜ்னா ரொம்ப இஷ்டம்…..”

அவன் அங்கு தலையில் அடித்துக் கொள்வது இங்கு வினித்தாவிற்கு மன கண்ணில் தெளிவாக தெரிந்தது.

வாய் பொத்தி சத்தமின்றி சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்.

பிறகென்ன இரண்டு கல்யாணமும் ஒரே நாள்…

“ஜீவாண்ணா கண்டிப்பா ஷீ திக்கா போட்டுக்கோங்க…அதோட அவள விட்டு கொஞ்சம் தள்ளியே நில்லுங்க ஃபங்ஷன்ல….அதுவும் அவள எதாவது டீஸ் பண்றப்ப கட்டாயம் கீப் ஒன் ஃபீட் டிஸ்டன்ஸ்…..ஷார்ன்ஸ் எதையும் அழுத்திச் சொல்லனும்னா காலை மிதிச்சுத்தான் சொல்லுவா…இன்னைக்கு அவ போட போறது பயங்கரமான பாய்ண்டட் ஹீல்ஸ்.”  திருமண விழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்த ஜீவாவிற்கு வினி ஃபோனில் அறிவுரை வழங்கிக் கொண்டிருக்க

“அண்ணா மறந்திடாதீங்க இந்த வினி தினம் நைட் அன் டைம்ல ஜாமூன் இல்லனா பால்கோவானு ஸ்வீட் கேட்பா…அப்டி சாப்ட குடுக்கலையோ அவ்ளவுதான்……அதோட நியாபகம் இருக்குல்லண்ணா அவளுக்கு நாளைக்கு பெர்த் டெ, நைட் 12க்கு விஷ் பண்ணலண்ணா ரொம்ப ஃபீல் பண்ணுவா…… ” ஷார்ன்ஸ் நிர்விகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள்.

சொல்லியனுப்பாத இந்த தூது எப்பொழுதும் தொடரும்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.