(Reading time: 14 - 28 minutes)

வீட்டில் எண்ணெய் வைத்து தலை முழுகி தனது அறையில் அமர்ந்திருந்தான் விஜய், கனத்த மௌனம், அந்த வீடு முழுவதும். மதுரிமா அந்த வீட்டின் மகிழ்ச்சியில் என்றும் தன்னை தொலைப்பவள் என்பதால் இன்றைய நிலை அவளையும் வதைத்தது... விஜயின் பெற்றோர் மற்றும் தங்கை பூஜாவிற்கு தகுந்தார் போன்று ஆறுதல் கூறி சாப்பிட வைத்து ஓய்வு எடுக்கும் படி கூறிவிட்டு விஜயின் அறைக்கு சென்றாள்.

சிந்தனைகளின் உச்சத்தில் இருந்த விஜயின் தோளில் கை வைத்து அவனை அழைக்க திடுக்கிட்டு திரும்பினான்.

“உனக்காக நான் இருக்கேன் குரு, நீ யாருகிட்டையும் வெளிப்படையா சொல்ல முடியாத அளவிற்கு நீ காயப்பட்டு இருக்கேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. என்னதுன்னு சொல்லு என்னால முடிஞ்ச உதவி பண்றேன். நீ இப்படி பண்ண கூடிய ஆள் இல்ல, அது நீ எந்த நிலைல இருந்திருந்தாலும் உன்னால... கொலை..... அது சத்தியமா முடியாது....”

நடந்தது எதுவும் தெரியாமலேயே அவனின் நிலையை அறிந்த மது, அவன் மனதின் இறுக்கத்தை தளர்த்தினாள்.

அதற்கு மேல் ஒன்றும் தேவை படவில்லை விஜய்க்கு... முதல் நாள் காலையில் தொடங்கி கீதாவின் வீட்டில் நடந்தது அனைத்தும் கொட்டி விட்டான்....

அவளும் பொறுமையுடன் கேட்டு விட்டு “ நீ பண்ணாத கொலை, ஆனா உனக்கு எதிரா சாட்சி, ம்ம்ம்ம் யோசிப்போம்... அந்த கொலை காரன் கண்டிப்பா சிக்குவான்... கவலை படதே.....”

அவனோ உணர்சிகளின் பிடியில் இருந்தான்... என்றுமே அவன் தான் மற்றவர்களுக்கு உதவுவான், அது எந்த விதத்தில் என்றாலும் சரி. ஆனால் அவன் தன் குழப்பம்,சோகம் என தன் உள்ளத்து உணர்வுகளை கொட்டும் ஒரே ஆள் மதுரிமா.... நட்பை தாண்டியும் அவனின் நலவிரும்பி...

மீண்டும் அன்று நடந்த வாக்குவாதத்தை கேட்டவள், யோசிக்க ஆரம்பித்தாள்...

ரண்டு நாட்களில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது, அது கீதா கத்தியில் குத்தப்பட்டும், அவளின் அம்மா மாரடைப்பிலும் இறந்துள்ளதாக தெரிவித்தது... மேலும் கத்தியின் குத்தின் ஆழம் கம்மியாக இருப்பதால் ஒரு இளைஞன் இந்த கொலைக்கு காரணமாக இருக்க முடியாது என்றும் இருந்தது. அதைவிட அதிர்ச்சியான தகவல் ஒன்றும் அதில் தெளிவு படுத்த பட்டிருந்தது....

கைரேகை ரிப்போர்ட்டில் கத்தியில், விஜய், கீதா கைரேகையோடு புதிதாக ஒரு கைரேகையும் இருந்தது....இது மற்றவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும் மதுரிமாவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. கோர்டில் முதல் ஹியரிங்லேயே விஜய் குற்றமற்றவன் என்பதை நிலைநிறுத்தி அவனை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தனர்.

வீட்டிற்கு வந்த விஜயின் குடும்பத்தாருக்கு மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஆனால் மது இது எதிலும் பங்குகொள்ளாமல் சிந்தனையின் பிடியில் இருந்ததால்

விஜய் அவளை நெருங்கி அழைக்க, “ குரு நாம கொலைகாரணை கண்டு பிடிக்கணும்....அதுக்கு சில வேல பண்ண வேண்டி இருக்கு,” என்றாள்

“எதுக்கு மது நாம இந்த ரிஸ்க் எடுக்கணும், அதுக்கு தான் போலீஸ் இருக்கே கண்டு பிடிக்கட்டும்” என்று சொல்ல....

“இல்ல குரு உன்ன இதுல சிக்க வச்ச அந்த கொலையாளிய என்னால விட முடியாது” என்று பேச்சை முடித்து விட்டாள்...

றுநாள் நள்ளிரவு வேளையில் கீதாவின் வீடிருக்கும் தெருவிற்குள் இரு உருவங்கள் நுழைந்தது. கீதாவின் அறைக்குள் நுழைந்த ஒரு உருவம் தன் கையில் வைத்திருந்த சிறு விளக்கின் உதவி கொண்டு அறையை அலசியது. மற்றொன்று பால்கனியில் நின்று வெளியே நோட்டம் விட்டு கொண்டிருந்தது...சட்டென்று இரண்டாவது உருவத்தின் கண்களில் வெளிச்சம்.....

 கோர்ட் வளாகம்

 கீதாவின் கொலை வழக்கின் கொலையாளி கைது செய்ய பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டார். விஜய்க்கு மகிழ்ச்சியோடு கூடிய பிரமிப்பு....என்ன ஒரு சுயநலம்?....அவனின் உள்ளம் கொதித்தாலும் நீதிதான் வென்று விட்டதே என்ற சமாதானம்....

மது பத்திரிக்கைக்காரர்களின் கேள்விகள் அனைத்திருக்கும் பதில் அளித்து விட்டு விஜய்யை நெருங்கி புன்சிரிப்போடு கைப்பற்றி காரில் ஏறினாள், வீடு நோக்கி....ஆயிரம் கேள்விகள் அங்கிருந்த அனைவர்க்கும் .... அவர்கள் எண்ணங்கள் யாவும் மதுவின் பதிலிலேயே இருந்தது.

“நான் இன்றே நடந்த அனைத்தையும் தெளிவு படுத்தி விடுகிறேன்...கீதாவின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்ல் இருந்த குறிப்புகள் யாதெனில், மூன்று மாதங்களுக்கு முன் கருக்கலைப்பு செய்ததினால் உடல் பலவீனம் அடைந்ததால், இரண்டு கத்தி குத்துகளிலேயே உயிர் பிரிந்து விட்டதாக இருந்தது..... முதலில் அவளின் அம்மாவின் மேல் தான் சந்தேகம் இருந்தது...பெண்ணை கொன்று விட்டு அதிர்ச்சியில் இவர்களும் இறந்து இருக்கலாம் என்று தான் நினைத்தேன்......அதற்க்கு சாட்சியம் தேடி தான் நானும் விஜயும் அவளின் வீட்டிற்கு சென்றது... அங்கு பால்கனியில் நின்று பார்க்கும் போதுதான் எதிர்வீட்டு சிசிடிவி கேமரா கீதா அறை நோக்கி இருப்பது என் கண்ணில் பட்டது.. போலிஸ் உதவி கொண்டு அதை பார்த்ததில் தான் உண்மையான கொலையாளியை கண்டுபிடித்தோம்......அங்கொரு கனத்த மௌனம் ஏனெனில் கீதாவின் அப்பா தான் கொலையாளி !!!!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.