(Reading time: 14 - 28 minutes)

ந்த நாள்

விஜய் கீதாவை நெருங்கி கத்தியை இறக்கியவேளை அவளின் பயந்த அலறல் அவனுக்குள் இருந்த நல்ல மனிதனை தட்டி எடுக்க

“ச்சீ உன்ன தொடுறது கூட பாவம்... உன்ன கொன்னு மேலும் என்னை இழிவு படுத்திக்க நான் விரும்பல.... நீ எவனையோ கல்யாணம் பண்ணி எப்படியோ போ ... இனி என் வழியில குறுக்க வர கூடாது” என்று உறுமி விட்டு வந்த வழியே சென்று விட்டான் ...

இவளின் அலறல் கேட்டு வெளியே வந்த இவளின் தந்தை அசோகன் அறையை நெருங்கிய வேலையில் தான், விஜய் கடைசி வார்த்தையை உதிர்த்து விட்டு சென்றான். அசோகனுக்கு மிகுந்த கோவம்

“நீ எல்லாம் என்ன பொண்ணு, குலநாசினி! நீயா ஒரு அயோக்கியன் கூட சுத்தி பிள்ளையாகி உன் வாழ்க்கைய சீரழிச்சுக்கிட்ட.....அவன் கிட்ட இருந்து உன்ன காப்பாத்தி நல்ல பையன் கையில ஒப்படைக்கற நேரத்துல எல்லாத்தையும் கெடுத்து வச்சு இருக்க.....ச்சீ.....”

“நான் சொல்லுற கேக்காத உங்க பேச்சை நானும் கேக்க போறது இல்ல.... நவீனை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்....நீங்க இதுவரைக்கும் அம்மா கிட்ட இத பத்தி பேசலைன்னு தெரியும்.... இப்போ அவங்க கிட்டயே சொல்லுறேன் உங்கலால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க, அது மட்டும் இல்ல நான் கெட்டு போனவன்னு ஊர் உலகத்துக்கெல்லாம் சொல்லி உங்க மானத்த வாங்குறேன் அப்ப எப்படியும் நீங்களாவே என்ன நவீனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடிவீங்கள்ள?” என்று தவறான காதல், கண்ணை மட்டும் இன்றி, மூளையையும் மறைக்க “அம்மா !!! அம்மா!!!!” என்று கூவினாள்.

ஆத்திரத்தின் பிடியில் இருந்த அசோகன் என்ன செய்வது என்று அறியாமல் விஜய் போட்டு விட்டு போன கத்தியை கொண்டு அவளை குத்திவிட்டார் .... அடுத்த குத்துக்களில் கீதாவின் உயிர் பிரிந்து விட்டது.. தான் செல்லம் கொடுத்து கெடுத்த மகளை தானே கொன்று விட்டார்.... நிலைமை கை மீறி விட்டதை உணர்ந்து, சில நிமிட யோசனைக்கு பின் தன் கௌரவத்தை காத்து கொள்ள பழியை விஜயின் மேல் போட்டு விட வேண்டியது தான் என்று முடிவு செய்து ஒன்றும் அறியாதவர் போல் மற்றொரு வழியாக தனது அறைக்கு சென்று விட்டார்...பதட்டத்தில் தன் மனைவி அறையில் இல்லாததை அறிய வில்லை....

அசோகன் சத்தம் கேட்டு வெளியே வந்த போதே, விழித்திருந்த ஜானகி கீதாவின் அறையை நெருங்க நடந்த வாக்குவாதத்தை கேட்டவர், கீதாவின் குருர மரணத்தை கண்டவர், அதுவும் தன் கணவரே தன் மகளை கொன்றதை கண்டவர் மாரடைப்பால் உயிர் இழந்திருந்தார்.....

அனைத்தையும் உரு போட்ட அனைவரின் முகங்களும் வெவ்வேறு உணர்ச்சியின் பிடியில் இருந்தது....

2 வருடத்திருக்கு பிறகு....

 தஞ்சாவூர் அருகே அழகிய கிராமம் ....

“குரு காலைல சீக்கிரமே சாப்பிட வந்துடுங்க....”

“சரி, எனக்காக காத்துட்டு நீ சாப்டாம இருக்காத, என் பொண்ணு பாவம் வயித்துக்குள்ளே பசியோடு இருப்பா... என் செல்ல பாப்பா நீயும் சாப்பிடு சரியா” என்று கூறி விட்டு விஜய் வயலுக்கு சென்றான்...

ஆம் விஜய் தனது வேலையை விட்டு விட்டான், பணத்தை சார்ந்து, அந்தஸ்தை சார்ந்து, கௌரவத்தை சார்ந்து நடந்த இரு மரணமும், அவனை இந்த முடிவை எடுக்க வைத்தது. பணத்தினால் கிடைக்கும் மகிழ்ச்சி(யற்ற) வாழ்வின் பின் போவதை விட செழிப்பான, உணர்வுபூவமான இன்பமான வாழ்வே சிறந்தது என்று.

ஆகவே தஞ்சையில் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்து வருகிறான், மதுவிற்கு தன் மேல் இருந்த காதலையும், தனக்கு அவள் மேல் இருந்த புரியா நேசத்தையும் உணர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து, காதலின் அச்சாரமாக அவளின் மணிவயிற்றில் குட்டி தேவதையை விதைத்து, இன்னும் நான்கு மாதத்தில் வரவேற்க காத்திருக்கின்றான் . நாமும் அவர்களோடு காத்திருப்போமாக.

This is entry #54 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.