(Reading time: 18 - 35 minutes)

துவரை அவன் முடிக்க காத்திருந்தவள் வேகமாக “அய்யோ... நான் உங்களை மாறுங்கன்னு சொல்லலை. என்னை நானா ஏத்துக்கோங்கன்னு தான் சொல்ல வந்தேன்” என்றாள்.

“ம்.. தெரியும். ஆனா நீ சொன்ன மாதிரி நீயோ இல்லை என் குடும்பத்தினரோ அப்படி ஒரு நிலையில மாட்டிக்கிட்டு இருந்தா... நானும் கூட சாக்கடையில் நீந்தி சென்றுனாலும் காப்பாத்த முயன்றிருப்பேன். ஏன்னா உங்க உயிரா? மத்ததான்னு வந்தா எனக்கு உங்க உயிர் தான் முக்கியம்” என்று சாதாரணமாக  கூறினான்.

அவன் கூறியதை கேட்டவளுக்கு மனம் நெகிழ்ந்தது. சிலருக்கு எப்படி இரத்தத்தை பார்த்தால் அருவருப்பு வருமோ.. சிலருக்கு எப்படி காயத்தை பார்த்தால் அருவருப்பு வருமோ... அது போலத்தானே இவனுக்கும், அவனையும் மீறி நடப்பது. அவன் கூறியபடி யாரையும் இகழ்ச்சியாகவும், அவமானப்படுத்தியும் அவன் பார்ப்பது இல்லை. அது அவனையும் அறியாமல் நிகழ்வது. அப்படியிருக்கையில் தனக்காக முயன்று மாறுகிறேன் என்பவனை பார்த்து அவளுக்கு அன்பு சுரந்தது. ஓடிச்சென்று அணைத்துக்கொள்ள பரபரத்த மனதை அடக்க பாடுபட்டாள்.

அவளை பார்த்து கரங்களை நீட்டி அழைத்தவன் அவள் அருகில் வந்ததும் இரு கரங்களையும் பற்றிக்கொண்டு அவள் கண்களை பார்த்து “என் குறை, நிறைகளோடு என்னை நேசிப்பாயா” என்று உருக்கமாக கேட்டான்.

பதில் கூற மாட்டாமல் கண்கள் சுரக்க ஒப்புதலாக தலையசைத்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவளை தோளோடு பற்றி அணைத்திருந்தவனும் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

                                                    

மண் பெரிது

பொன் பெரிது

கல்வி பெரிது

கவுரவம்(ஜாதி) பெரிது

என்று மார்தட்டி கொள்கையிலே

.

.

மனிதா

உயிர் பெரிது

என ஊழிதாண்டவம்

ஆடிக்காட்டியது    

மழை

.

.

.

மனிதா

நேயம் பெரிது

நேசம் பெரிது

என

நெஞ்சுணர்ந்து நினையடா.

This is entry #56 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.