(Reading time: 16 - 31 minutes)

னம் கொஞ்சம் வீம்பு செய்தாலும் மகளுக்காக இறங்கியவர் சாப்பிட அமர்ந்தார். அதே போல சிறிது நேரம் அமைதியாக செல்ல மீண்டும் ஆரம்பித்தது சிவம் தான். கதிரின் கைமேல் அழுத்தி “என்ன இருந்தாலும் நான் அப்படி பேசிருக்க கூடாது... ரொம்ப அவசரப்பட்டுட்டேன்.”

“அச்சோ அப்படி இல்லை அங்கிள்.. உங்க நிலைமையில் நீங்க கோவபட்டது சரிதான் நான் தான் பேசி புரியவச்சிருக்கணும்” என்று அவனும் ஆறுதலாக பேச, இளமதிக்கு தலை கால் புரியாத சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.

“அப்பா நான் கதிரை...” அவள் முடிக்கும் முன்பே அவள் கன்னத்தில் பளார் என்று விழுந்திருந்தது அதான் முன்பே செய்தி வந்தாயிற்றே, “என்ன தைரியத்தில் இந்த முடிவு எடுத்த... உனக்கு எது சரின்னு எங்களுக்கு தெரியாதா...”

அதிர்ச்சியோடு அழுகையும் சேர்ந்து பேசவிடாமல் செய்ய “ஆனால் நீங்க அப்படி என்னை வளர்கலையே என்னை சம்பந்தபடுத்திய எந்த விஷயத்துக்கு என்னை தானே முடிவு செய்ய சொன்னீங்க... படிப்பு, உடை, தோழமை, வேலை இப்படி எல்லாமே என் விருப்பம் போல வளர்த்துட்டு இப்போ வாழ்க்கையை பங்கு போடும் உறவுக்கு மட்டும் யாருனே தெரியாதவரை எப்படி ஒத்துக்க முடியும்.”

“எதித்து பேசாத... இதுக்கு தான் உன்னை வெளி ஊரில் படிக்க விட்டதா... மற்றதும் இதுவும் ஒன்னு கிடையாது.”

“அப்பா ஒருமுறை கதிரை பத்தி வீசாரிச்சு பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வாங்கப்பா...”

“எதையும் நான் விசாரிக்க விரும்பலை எனக்கு அது தேவையும் இல்லை” என்று கத்தி சண்டை போட்டுக்கொண்டிருந்தார் சிவம். மகள், கணவன் சண்டை பார்த்தே அதிர்ந்து போய் நின்ற பார்வதிக்கு மேலும் அதிர்ச்சியாய் கதிர் அந்த நேரத்தில் அங்கு வந்தது தான்.

பல வித பேச்சுக்கள் கட்டுபடுத்தாத வார்த்தைகள் என்று அனைத்தும் சிவம் பேச கதிரால் கோவத்தை கட்டுபடுத்துவது பெரும் பாடாக இருந்தது.

“இப்போ அவனை வெளிய போக சொல்லுறியா இல்லை நானே வெளிய துரத்தனுமா?”

“அப்பா தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்கப்பா...” என்று அவள் காலில் விலாத குறையாக தரையில் விழுந்து அவள் கெஞ்ச, அவளை தூக்க வந்த கதிருக்கு அரை வந்து சேர்ந்தது. இழுத்து பிடித்த கோவம் எல்லாம் பறந்துப்போக, இனி உன் தந்தையா இல்லை நானா என்பது போல் மூளை செயல்பட்டது கதிருக்கு, அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தும் அவள் நகராமல் நிற்க அவளையும் வெறுத்து அகன்று சென்றான் கதிர். காலை பனி வெயில் பட்டு மறைவது போல நிகழ் காலம் வந்தாள் மதி.

அனைவரும் இயல்பு நிலைமைக்கு திரும்பி பேசி சிரித்து கிளம்பவும் சிறுவர்கள் இருவரும் மெதுவாக பின்னுக்கு சென்றனர்.

அவர்கள் மெதுவாக வருவதை உணர்ந்து சிவமும் பார்வதியும் காருக்கு சென்றுவிட, அவர்களுக்கு மீண்டும் தனிமை கிடைத்தது.

அவர்கள் சில நொடிகள் எதுவும் பேசவில்லை அனைத்தையும் அவர்கள் கண்கள் பேசியது. பல நாள் கனவு கைக்கு எட்டிய திருப்தி இருவருக்கும். இருவரும் கண்களை துடைத்துகொள்ள, “என்னடா இது தேவதாஸ் போல முதல்ல தாடியை எடு...”

“முடியாதுடி...” என்று வேண்டும் என்றே கூறி வம்பிழுத்தான்.

மெல்ல சிரிப்பை அளித்து, அவன் கண்களை பார்த்து கூறினாள்... “நாளைக்கு கால் வரும் கதிர் வந்திடு...” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு வெட்கத்தோடு கிளம்பினாள். கதிருக்கோ சம்மதம் வந்தாச்சு, மேற்படி பேச்சுக்களுக்கு அழைப்பு வருவதும் தெரிந்துவிட்டது பின் என்ன இன்ப மழை தான்.

வள் சொன்னது போலவே... அடுத்த நாள் அழைப்பு வந்தது ஆனால் விடியற்காலையே...

அவசர அவசரமாக வந்தவன் “என்ன ஆன்ட்டி hospital வர சொல்லிருக்கீங்க என்ன ஆச்சு மதி எங்க? அங்கிள் எங்க?” இவன் விசாரித்து கொண்டு இருக்கும் போதே அங்கே வந்த சிவம்  மதியின் அறைக்கு அழைத்து சென்றார். கண்கள் மூடி படுத்திருந்தவள், மெல்ல திறந்து கதிரை பார்த்தாள்.

“நான் சொல்லலை உனக்கு கால் வரும்னு” என்று சிரித்துக்கொண்டே கூறினாள் ஆனால் அவனால் தான் நிலைமையை புரிந்து கொள்ள முடியவில்லை.

“மதி எதுக்கு நீ ஹாஸ்பிடல்ல இருக்க... என்ன ஆச்சு?” பேசிக்கொண்டே அருகில் வந்தான்.

சொன்னதற்காக தாடியை அவன் எடுத்திருப்பதை பார்த்துவிட்டு “இப்போ தான்டா அழகாய் இருக்க...” என்று கிண்டல் செய்தாள்.

“மதி ப்ளீஸ் இங்க என்ன நடக்குதுன்னே எனக்கு புரியலை. தயவு செஞ்சு என்னனு யாரவது சொல்லுங்க...” என்று அவன் கெஞ்சவும், சிவம் கூறினார். அவன் சென்றதும் அவள் நொடிந்து போனது எப்பவும் பரிக்கொடுத்தது போல இருந்தது, வீட்டில் இருந்த ஒதுக்கம் அதை சிவம் விசாரிக்கும் பொழுது அவள் மயங்கியது என்று அனைத்தும்...

“அவள் என்கிட்ட கோவமாக பேசிட்டு இருக்கும் போதே அவளோட மூக்கில் இருந்து இரத்தம் வந்துச்சு, பார்த்து நாங்க பயந்து போக அப்படியே அவள் மயங்கியும் விழுந்திட்டாள்...”

“இங்க வந்து விசாரிச்சால் ஏதேதோ சொல்றாங்க... இவள்கிட்ட கேட்டாள் முன்பே தெரியும்னு சொல்றாள், இதெல்லாம் தெரிஞ்சதும் பார்வதிக்கு மைல்ட் அட்டாக் வந்திருச்சு... எல்லாம் ஒரே நாளுல தலைகீழ போயிருச்சு என்று கூறிக்கொண்டே அழதுவங்கிவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.