(Reading time: 9 - 17 minutes)

ண்ணே! நம்ம அத்தியூர்ல பழனின்னு ஒரு பையன் பத்தாவது படிக்கிறான். அந்த பையனுக்கு ஒரு கால் ஊனம். திடீர்னு போன வாரம் ஒரு ஆக்ஸிடெண்டுல அவங்க அப்பா இறந்துட்டாரு. அவனுக்கு ஒரு தம்பியும், தங்கச்சியும் இருக்காங்க. அவங்க அம்மா வயசானவங்க. வீட்டு வருமானம் பத்தல. அதனால அந்த பையன் ஸ்கூலுக்கு போறத விட்டுட்டு வேலைக்கு போய்ட்டு இருக்கான். அவங்க குடும்பத்துக்கு உதவி செஞ்சா, அந்த பையனும் ஸ்கூலுக்கு போவான், அவன் எதிர்காலமும் நல்லாருக்கும்” என்று சொல்ல,

சிலர் ‘ம்ம்ம் வெரிகுட் ஐடியா” என்றனர். ஆனால் பலர் ‘என்னது பழனியா? போயும் போயும் ஒரு இந்து குடும்பத்துக்கு எப்படி உதவ முடியும்?” என்று முனுமுனுத்தனர்.

‘டே ஜெபன்! அந்த பழனி பையனுக்காக நாம அனுதாப பட முடியுமே தவிர, பணத்தலாம் குடுத்து உதவ முடியாது. அவன் வேற மதம், நம்ம வேற மதம் , நம்ம சர்ச்ல உறுப்பினர் கூட கிடையாது. இப்படிப்பட்டவங்களுக்கு உதவி செஞ்சா அவ்வளவு தான் பெரிய பிரச்சினையாயிரும். ஊர் கமிட்டி, ஊர் தலைவர்கிட்டலாம் பதில் சொல்ல முடியாது” என்று ஒருவன் கோபமாக பேச,

பதிலுக்கு’ நோயாளி யாரோ அவனுக்கு தான் மருந்து குடுக்கனும்னு இயேசு சொல்லியிருக்காரு. அவரென்ன சாதி பாத்து, மதம் பாத்து, சர்ச்ல உறுப்பினரான்னு பாத்து தான் உதவி பண்ண சொல்லிருக்காரா சொல்லுங்க” என்று ஜெபன் ஆக்ரோ~மாக கேட்க,

அனைவரின் சத்தமும் அடங்கி ஒடுங்கி போனது. ஆலயமே அமைதியானது. தலைவர் பக்கத்திலிருந்த ஒருவன்,‘ஜெபன் கோபப்படாத,நீ சொல்லுறது நியாயம் தான். ஆனால் இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது புரிஞ்சுக்கோடா” என்று சொன்னான.; ஜெபன் பதிலேதும் பேசவில்லை. அனைவரும் இதைப் பற்றி ஆளாளுக்கு பக்கத்தில் இருப்பவர்களோடு பேச ஆரம்பித்தனர்.

உடனே தலைவர் கூட்டத்தை அமைதிப்படுத்தினார். அந்நேரம் கோவிலின் பக்க வாட்டிலிருந்த வாசல் வழியாக வெள்ளை வெளேர் உடையில் பாதர் வந்தார்.

‘ நம்ம பாதர் அவர்களை இளையோர் கூட்டத்திற்கு அன்போடு வரவேற்கிறேன்” என்று தலைவர் சொல்ல, அவர் லேசான புன்னகையோடு அவர்களுக்கு பக்கத்திலேயே தரையில் அமர்ந்தார்.

சரியான நேரத்தில் தான் பாதர் வந்திருக்கிறார். இவர் தான் பழனி குடும்பத்துக்கு உதவலாமா? வேண்டாமா என முடிவெடுக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது.

அந்நேரம் ரூபன் அண்ணன் எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கிவிட்டு வந்தார். ‘என்ன தம்பி , ரெண்டு லைட்டையும் கழட்டிட்டீங்களா?”

‘ம்ம்… கழட்டிட்டேன்னே”

‘சரி தம்பி ஒண்ணு பண்ணுங்கஇ நேரா எங்க வீட்டுக்குப் போய் டி.வி. பக்கத்துல டூல்ஸ் பாக்ஸ் இருக்கும் அத கேட்டு வாங்கிட்டு வாங்க” என்றார்.

னக்கு கோவிலை விட்டு செல்ல துளியளவும் மனசு வரவில்லை. அந்த நிதி பணம் பழனி குடும்பத்துக்கு கிடைக்குமா? கிடைக்காதான்று? முடிவு தெரியுற நேரத்துல போக சொல்லுறாறே என வருத்தமாக இருந்தது. இருந்தாலும் வேலைக்கு வந்திருக்கோம் என்பதை உணர்ந்து கிளம்பி போனேன். சீக்கிரமா அந்த டூல்ஸ் பாக்ஸை வாங்கிவிட்டு வந்து, என்ன தான் நடக்குதுன்னு பாக்கனும் என சைக்கிளை வேகமாக ஓட்டினேன்.

ரூபன் அண்ணன் வீட்டில் டூல்ஸ் பாக்ஸை வாங்கிக் கோண்டு சைக்கிளில் பறந்து தான் வந்தேன். அவ்வளவு வேகம். வேகத் தடைகளில் சைக்கிளின் முன் வீல் மோதி ஒரு அடிக்கு குதித்து இறங்கியது.

கோயிலை நெறுங்க நெறுங்க ‘கூட்டம் முடிஞ்சுறக் கூடாது கடவுளே” என்று சொல்லிக் கொண்டே வந்தேன். சைக்கிளை வெளியே நிறுத்திட்டு விட்டு கோவிலுக்குள் ஒடினேன்;. இதயம் ‘திக்திக்” என அடித்தது. சுற்றி முற்றிலும் பார்;த்தேன். ரூபன் அண்ணனை தவிர கோவிலுக்குள் யாருமேயில்லை. உடம்பெல்லாம் உதறியது. மனசு எதையோ இழந்தது போல துடித்தது. ‘ச்சே.. நாம வர்றதுக்குள்ள எல்லோரும் போய்ட்டாங்களே” என வருத்தமாக இருந்தது. கூட்டத்தை பற்றி ரூபன் அண்ணனிடம் கேட்டேன்;. ‘நான் வெளிய போன் பேச வந்துட்டேன், கவனிக்கலப்பா” என்றார். அதற்கு பின் நடந்தது எதுவும் ஞாபகம் இல்லை.

அந்த பாதர் என்ன முடிவு எடுத்திருப்பாரு? பழனிக்கு பணம் குடுத்திருப்பாங்களா? இந்த ரெண்டு கேள்வி மட்டும் தான் மனசெல்லாம் ஓடியது.

டுத்து இரண்டு வாரம் கழித்து, ஒரு நாள் மாலை நேரம் கல்லூரி முடிந்து பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன். ரோட்டின் எதிர்புறம் ஓரமாக ஓரு பைக் வந்து நின்றது. பார்;த்தால் அது மகிழாபுரம் பாதர். ‘அப்பாடா! அவரிடமே போய் பழனிக்கு உதவி செய்தீர்களா? இல்லையா? என கேட்டு விட வேண்டியதுதான”; என ரோட்டை கடக்க போனேன்.

ஆனால் அதற்குள் பாதர் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார். அவரை பார்க்க முடியவில்லை. அவரது பைக்கின் பின்புறம் ‘மதத்தை அல்ல, மனித நேயத்தையே விதைக்க வந்தேன்” என எழுதியிருந்ததை மட்டும் தான் பார்க்க முடிந்தது.

மீண்டும் பழனியின் ஞாபகம். அதே கேள்விகள் என்னை போட்டு வறுத்து எடுத்தது. பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்தேன். பஸ் ஹஸ்-கூல் ஸ்டாப்பில் நின்றது.

‘டே! புழனி !!!!!பஸ் வந்திருச்சு சீக்கீரமா வாடா” என்று ஒரு குரல்

வெளியே எட்டிப் பார்த்தேன். வெள்ளை சட்டை, நீல கலர் பேண்ட் ஸ்கூல் யூனிபார்மில் ஓரு காலை நொண்டிநொண்டி ஓடி வந்தான் பழனி. பஸ்ஸில் ஏறினான். நான் அவனையே கவனித்துக் கொண்டிருந்தேன்.

பஸ்ஸில் ஒருவர், ‘என்ன பழனி ஸ்கூலுக்கு போறத நிறுத்திட்டு, வேலைக்கு போய்ட்டு இருந்தியே என்னாச்சு?”

‘ஆமாண்ணே, வேலைக்கு தான் போய்ட்டு இருந்தேன். மகிழாபுரம் பாதர் தான் 20,000 ரூபா குடுத்து உதவி செய்தாங்க. அதான் ஸ்கூலுக்கு வாறேன்;’ என்றான்.

‘எனக்கு ஒரு பெரிய போர் முடிவுக்கு வந்தது போல இருந்தது. காற்றில் பறப்பது போல உணர்ந்தேன். மனசெல்லாம் அவ்வளவ சந்தோ~ம். பெரிய திருப்தி.அந்த பாதரால் ஒரு குடும்பத்தின் எதிர்காலமே பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.”

அந்த பாதர் பைக்கில் எழுதியது மட்டுமில்லாமல், தனது வாழ்ககையிலும் மனித நேயத்துடன் நடந்து விட்டார்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.