(Reading time: 11 - 22 minutes)

நா ஏண்டா கிண்டல் பண்றேன்..நிஜமாதான் கேக்குறேன்..இது எனக்கு மட்டுமில்ல மாமா உங்க அப்பா அம்மா எல்லாருக்குமே இஷ்டமான ஒண்ணுதான்..உங்க மனசுல என்னயிருக்குநு தெரியாம பேச வேண்டாமேநு விட்டுட்டோம்..ஊர்ல யாரை பாத்தாலும் பசங்களுக்கு எப்போ கல்யாணம் பண்ணி வைக்க போறீங்கநு தான் கேக்குறாங்க 25 வருஷ நட்பு இப்போ சொந்தமா மாறணும்நு ஆசபட்றோம்..இதுல என்ன தப்பு??என் மஹிகுட்டி என்கூடவேயிருந்தா எனக்கும் ஜாலிதான??

அத்தை என்னென்னவோ சொல்லி என்ன குழப்பாதீங்க??நாங்க நல்ல ப்ரெண்ட்ஸ்தான்..

கல்யாணம் பண்ணா ப்ரெண்ட்ஸா இருக்க கூடாதுநு யாரு சொன்னா??சரி விடுடா ரொம்ப குழப்பிக்காத நீ பி.ஜி படிச்சு முடி அதுவரை உனக்கு டைம் இருக்கு அதுக்கப்பறம் உன் முடிவ சொல்லு எந்த கட்டாயமும் இல்ல..உங்க சந்தோஷம்தான்டா எங்களுக்கு முக்கியம்..

நானும் அப்போ அத பெருசா எடுத்துக்கல..பட் இந்த ஒண் அண்ட் அ ஹாவ் இயர்ஸ்..ஐ மிஸ்ட் யூ சோ மச் கௌதம்..அப்போ முடிவு பண்ணேன் வேற யாரையோ கல்யாணம் பண்ணி நம்ம ப்ரெண்ட்ஷிப்ப புரிய வச்சு இதெல்லாம் நடக்காத காரியம் அதான் போனா போகுதுநு உனக்கே வாழ்க்கை தரலாம்நு முடிவு பண்ணிட்டேன்..இதை எப்பவோ உன்கிட்ட சொல்லிருப்பேன்..ஆனா இதுவரை உனக்கு அப்படி ஒரு பீல் இருக்குறமாறி நீ காட்டிகிட்டதேயில்ல..அதான் பொறுமையா சொல்லலாம்நு விட்டுட்டேன்..இப்போ நீ தான் சொல்லனும்??என கன்னத்தில் கை வைத்து கேட்க??

ஏண்டி எவ்ளோ பெரிய விஷயத்தை அசால்ட்டா சொல்லிட்டு இருக்க??எனக்கு தலையே சுத்துது??

கௌதம் டேக் யுவர் ஓன் டைம்..அதுவரை நா உன்னோட சண்ட போட்டுட்டே இருக்குற உன் பெஸ்ட் ப்ரெண்ட் மஹாதான்..சரி வா வீட்டுக்கு போலாம்  பசிக்குது..

தன்பிறகு பலவாறாக யோசித்து கௌதம் மஹாவிடம் தன் முடிவை சொல்ல அதன்பிறகு மின்னல் வேகத்தில் நடந்தேறியது அவர்களின் திருமணம்..திருமணம் முடிந்த கையோடு சென்னையில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டு பெரியவர்கள் ஊர்திரும்ப இனிதே ஆரம்பமானது அவர்களின் இல்லறம்..அங்கேயே கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தாள் மஹா..

இவ்வாறாய் இரண்டு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் தாய்மையின் ஆரம்ப பருவத்தில் இருக்கிறாள்..

ஹலோ சார் என்ன கச்சேரி பண்ணாதநு சொல்லிட்டு நீ என்ன கனவு கண்டுட்டு இருக்க போலாமா??

சரி சரி போலாம்டீ ரொம்ப பண்ணாத வா…என்றவாறு காரை  கல்லூரியை நோக்கி கிளப்பினான்..

கல்லூரி வாசலில் இறங்கியவள்,சொன்ன மாறியே ஜுஸ் ஷாப் கூட்டிட்டு போற இல்ல??

மஹிகுட்டி கேட்டு நா நோ சொல்லிருக்கேனா..அந்த நினைப்புலயே இருக்காம கொஞ்சமாது பசங்களுக்கு ஒழுங்கா க்ளாஸ் எடு போ என்று கூறி சிரிக்க அவனுக்கு அழகுகாட்டி விட்டு சற்றுதள்ளி  வந்த தன் தோழியோடு இணைந்து நடந்தாள்..

என்ன மஹா இன்னைக்கு காலேஜ் வாசல்லயே ரொமாண்ஸ்ஸா??

ம்ம் மேடம் மட்டும் என்னவாம் பைக்லயிருந்து இறங்கும் போதே பாத்தேனே ஒரே ரொமேண்டிக் லுக்தான்..

அட நீ வேற..காலைலேயே சண்டை..அத காணும் இத காணும்நு எல்லாத்துக்கும் ஒரு வாக்குவாதம்..லவ் மேரேஜ் பண்ணி என்ன ப்ரோயோஜனம்..கல்யாணத்துக்கு முன்னாடி உனக்காக என்ன வேணா பண்ணுவேன்னு சொல்ற வாய்தான் கல்யாணத்துக்கப்பறம் இதகூட உன்னால அட்ஜெஸ்ட் பண்ணிக்க முடியாதாநு நம்மள பாத்தே கேக்குது..கல்யாணம்நு ஆய்டாலே எல்லா ஆம்பளைங்களும் மாறிட்றாங்கப்பா..லைவ்வே போர் அடிச்சு போச்சு..அதுல உன் ஆளு மட்டும் எக்செப்ஷன்..சின்ன வயசுலயே தெரியும்ங்கிறதால உனக்கு பிடிச்சா மாறி நடந்துப்பாரு..

வாய்விட்டே சிரித்தவளை காராமாய் பார்த்தாள் சிநேகிதி..

சரி சரி டென்ஷன் ஆகாத…அக்சுவலா நீ சொன்ன பாய்ண்ட் எல்லாமே கரெக்ட்தான்..ஆனா நீ சொல்ற ப்ரச்சனையெல்லாமே எப்போ வரும்னா லவ்வர்ங்கிற போஸ்ட்லயிருந்து புருஷன் பொண்டாட்டிநு ப்ரொமோஷன் கிடைக்குறதுல தான்..நா உன் புருஷன் நா சொல்றததான் நீ செய்யனும்னு அவங்களும்..நீ சொல்லி நா என்ன கேக்குறதுநு நாமளும் யோசிக்கும் போது கண்டிப்பா அங்க ஈகோதான்டி வின் பண்ணும்..அதே நேரம் ஹஸ்பெண்ட் வைஃப்பையும் வைஃப் ஹஸ்பண்ட்டையும் சக மனுஷனா ப்ரெண்டா ஏத்துக்கும் போது ஒருத்தரால இன்னொருத்தரோட ப்லிங்க்ஸ்ஸ புரிஞ்சுக்க முடியும்..யோசிச்சு பாரு உன் ப்ரெண்ட் உன்கிட்ட ஒரு வேலை செய்ய சொல்லி கேட்டா உடனே உன் வாய்ல என்ன வார்த்த வரும் ஹே உனக்காக இதகூட பண்ணமாட்டேனானு சொல்லுவ..ஏன்னா அங்க ஈகோங்கிற பேச்சுக்கே இடம்மில்ல..

நாம கஷ்டநஷ்டத்த யாருகிட்ட ஷேர் பண்ணிப்போம் நம்ம க்ளோஸ் ப்ரெண்ட்கிட்ட நம்ம ஹஸ்பெண்டே அந்த ப்ரெண்ட் ஆய்ட்டா ப்ரச்சனை சால்வ்ட்..என் ஆளு மட்டும் எக்செப்ஷன்னு சொன்னீயே அதுக்கு ரீசன் அவன் என் ஹஸ்பெண்ட் அதையும் தாண்டி மொதல்ல என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்..என்றவாறு கல்லூரி நோக்கி நடந்தாள் அந்த அன்பு கணவனின் அழகிய தோழி..

இன்று அரங்கேறும் அனைத்து விவாகரத்துக்களின் மூலகாரணமே இந்த புரிதலின்மைதான்..அரைமணி நேரத்தில் பீட்ஸா வரும் காலத்தில் இருந்து கொண்டு அதே வேகத்தில் 3 மாதத்தில் காதல் 6 மாதத்தில் கல்யாணம் ஒரே வருடத்தில் விவாகரத்து என அதி வேகமாய் வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர்..நண்பர்கள் காதலர்களாய் மாறுவது புதிதுமில்லை அதில் தவறுமில்லை..ஆனால் அறியாத வயதில் காதல் புரியாத வயதில் திருமணம் என்று நேர்ந்தால் அவர்கள் நண்பர்களாகவும் இருக்கமுடியாது காதலர்களாகவும் இருக்க முடியாது..

எந்த ஒரு இல்லறத்தில் கணவன் மனைவியின் முதல் தோழனாகவும் மனைவி கணவனின் முதல் தோழியாகவும் மாறுகிறார்களோ அந்த இல்லறம் திண்ண திண்ண தெவிட்டாத அமுதாய் விளங்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும்  இருக்கப்போவதில்லை..

கணவனோ மனைவியோ

யாருக்காகவும் யாரும் மாறதேவையில்லை

ஏனெனில் உயிராய் நினைப்பவரின்

பழக்கவழக்கங்கள் தானாய் மாறிவிடும்

உன்னுடையதாய் …”

 

This is entry #07 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - என் கணவன் என் தோழன்

எழுத்தாளர் - ஸ்ரீ

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.