(Reading time: 31 - 61 minutes)

செய்தி சேனல் எல்லாம் நான் பார்க்க மாட்டேன்.. எனக்கு தெரியும் அவருக்கு ஒண்ணும் ஆகாது!

என் ஷ்யாம் என்கிட்ட வருவார்!” இப்படி தனக்கு ஃபோன் செய்த உறவினர்களுக்கு தைரியம் சொல்லி காத்திருந்தாள் ராகினி.

கொஞ்சம் பெரிய தீ விபத்து தான் போலும்! என்று மனதிற்குள் நினைத்தவள் அவன் நிச்சயம் வருவான் என்று நம்பினாள். அவனுக்கு ஒருமுறை கூட ஃபோன் போட்டு பேச முயற்சிக்கவில்லை.

“ அவன் வருவான்!” என்று சொல்லிக்கொண்டே வாசலில் அமர்ந்திருந்தாள். மறுநாள் விடிந்து கதிரவன் உதயமாகிடும் வேளை, தன் வீட்டு வாசலில் காரை நிறுத்தினான் ஷ்யாம்.

வாசலில் அமர்ந்திருந்த ராகினியை பார்த்தான் அவன். அவள் கண்களில் காதலைத் தவிர பயமேதும் இல்லை! அவன் எதிர்ப்பார்த்தது போலவே தைரியமாய் நின்றவளை பார்த்து ஓடி வந்தவன், காற்று கூட நுழையாதபடி அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“ ஐ லவ் யூ ஷ்யாம்!”

“என்னடா லவ் எல்லாம் சொல்லுற ரொம்ப பயந்துட்டியோ?

“ பயமா எனக்கா? நான் ஷ்யாமின் பொண்டாட்டியாக்கும்” என்று அவன் மூக்கை செல்லமாய் பிடித்திழுத்தாள் ராகினி.

“ வீட்டுக்குள்ள வரும் எண்ணம் இல்லையா ஷ்யாம்?”

“ம்ம்ஹ்ம்ம்.. மாட்டேன் போ! நீ  என் மகனுக்காக மட்டும்தான் பாட்டு பாடுவியா? எனக்கும் பாடினால்தான் வருவேன்” என்று நெடுநாள் மறைத்து வைத்த ஆசையை கூறினான் அவன்.

“அய்யே .. மிரு சின்ன பையன் .. சோ அவனுக்கு அந்த பாட்டு! நீங்க என்ன எனக்கு கண்ணமாவா?” அவள் நக்கலாய் கேட்டாள்.

“ ஆமா பின்ன? பாரதியாருக்கு அந்த கண்ணன் தான் கண்ணாம்மாவாம் தெரியுமா உனக்கு ? அதே மாதிரி தான் உனக்கு நான் ..!” என்று ஷ்யாம் உரிமையாய் கூறவும். அவன் நெற்றியில் முத்தமிட்டு, காதலுடன் உருகி பாடினாள் ராகினி.

“ கண்ணம்மா.. கண்ணம்மா அழகு பூஞ்சிலை..

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை!”. தாய்மையும் காதலும் நிறைந்த குரலில் ராகினி பாடிட அவளுக்குள் தேன்மழை பொழியத் தொடங்கியது! அந்த தித்திப்புடன் நாமும் விடைபெருவோம்!

ஹாய் ப்ரண்ட்ஸ்.. வழக்கம் போல ஷார்ட்டா கொடுக்கனும்னு முயற்சி பண்ணி நீளமாகவே கதை வந்துருச்சு.. ஹா ஹா அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. கைம்பெண்ணுக்கு மறுமணம், தந்தை மகனின் பாசம், தேசப்பற்று, சிரிப்பின் மகத்துவம், இப்படி சொல்ல வந்த விஷயத்தை ராகினி- ஷ்யாம் , மிருதன் மூலமாக தெளிவாக சொல்லிட்டேன்னு நம்பறேன்.. அடுத்து இன்னொரு கதையோடு உங்களை சந்திக்கிறேன்.. பாய் பாய்.

 

This is entry #09 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - புவனேஸ்வரி கலைசெல்வி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.