(Reading time: 6 - 12 minutes)

2017 போட்டி சிறுகதை 10 - நினைவுச் சுழல்! - ஆர்த்தி R

This is entry #10 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை – பள்ளி நாட்கள்

எழுத்தாளர் - ஆர்த்தி R

School days

டேய் விடுடா விடுடா என்ன!! எப்ப பாரு இந்த கருமத்தை குடிச்சிட்டு வந்து அடிப்பதே வேலையா போச்சு.......”

"ஏய் என்னடி ஆச்சு இந்த கருத்தம்மா இப்படிக் கத்தறான்னு” பக்கத்து வீட்டு ருக்மணி கேக்க “எல்லாம் அவ புருஷன் தான் எப்போதும் போல தண்ணிய போட்டுட்டு அடிக்கிறான் இவளுக்கு எப்பதான் விடியுமோன்னா” வனித்தா.

”இப்பல்லாம் பகல்லயே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க என்னதான் பண்றது நம்ம பொழப்பே இப்படி ஆய்டுச்சு வா போய் வேலைய பாக்கலாம்ன்னு” சொன்னா ருக்மணி. இதெல்லாம் இங்க வழக்கம்தான்னு ரெண்டுபேரும் போய்ட்டாங்க.

இதுதாங்க இந்த தெருவோட நிலைமை இங்க இருக்கிற ஆண்கள் எல்லாம் குடிக்க போய்டுவாங்க பொம்பளங்க எல்லாம் வேலைக்கு போய் சம்பதிப்பாங்க........குடியோட வெறில கருத்தம்மாவோட புருஷன் அவ கழுத்த நெறிக்க போக அப்ப...

மேடம் கட் கட்-னு சொல்ல ஷார்ட் சூப்பரா வந்துருக்கு மேடம்னா அவளோட அசிஸ்டென்ட் காவ்யா.மேடம் “உங்கள பேட்டி எடுக்க சாம்பியன்ஸ் சேனலேந்து வந்துருகாங்கன்னா”

இதோ வரேன் ...

வெல்கம் மேடம் நாம பேட்டிக்கு போகலாமா?

யா போலாமே...

ஹலோ viewers இப்ப நாம பாக்க போறது வளர்ந்து வர டைரக்டர் ருத்ராவோட பேட்டிய தான்....சொல்லுங்க மேடம் எப்படி சமுதாயத்தில இருக்கிற பிரச்சனைகளை கதைக் கருவா எடுத்துகிட்டு shortflim பண்ற ஐடியா உங்களுக்கு எப்படி வந்தது ? இவ்ளோ சின்ன வயசுல எப்படி சாத்தியமாச்சுனு சொல்லுங்க மேடம்….

எனக்கு சினிமா மேல எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கு......ஏன்னா மக்கள் மனசுல சீக்கிரமா தாக்கத்த ஏற்படுத்தற ஆயுதம் சினிமாவும் , சோசியல் மீடியாவும் தான்......அதான் நாம சொல்லவேன்டியதை எவ்ளோதான் பிரச்சாரம் பண்ணாலும் இப்படி விஷுவலா பதிய வெக்கிறது ஈசினு தோணிச்சு...அதுக்கான முதல் ஸ்டெப்பாதான் fbல குரூப் கிரியேட் பண்ணி சின்ன சின்ன விளம்பரங்களா போட ஆரம்பிச்சோம்...என்ன மாதிரியே விருப்பம் இருக்கிற எட்டு பேர் கொண்ட குழுவை உருவாக்கினோம்....அந்த விளம்பரங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது....

அப்பதான் எங்க க்ரூப்ல இருந்த ரவி நாம இதையேன் குறும்படமாக பண்ண கூடாதுன்னு கேட்டார்..அது எங்களுக்கு திருப்புமுனையா இருந்தது....அதுக்கான ஸ்பான்சர்சும் கிடைக்க எங்களோட முதல் குறும்படம் “தற்கொலை” வெளிவந்தது. யுடியூப்ல நல்ல ரெஸ்பான்ஸ் கிடச்சுது.....அப்றமா நாங்க வேற வேற பிரச்சனைகளைப் பத்தி எடுக்க ஆரம்பிச்சோம்....

இப்படிதாங்க எங்களோட “தனித்துவம்” ஆரம்பிச்சுது..சூப்பர் மேடம் உங்க டீமையும் அறிமுகபடுத்தி வைங்க .....யா கண்டிப்பா இவங்க தான் என்னோட டீம்.அதோ இவர் தான் இந்த ஐடியாவ எங்களுக்கு சொன்ன ரவி....

viewers நாம இப்ப வரைக்கும் இந்த டீம் எப்படி உருவாச்சுனு பாத்தோம் அடுத்ததா இவங்களோட ரோல்மாடல் யாருன்னு கேக்கலாம்......

எங்க டீம்ல இருக்கிற எட்டு பேர்ல 5 பேர் ஒன்னா படிச்சோம் ஸ்கூல....எங்க ஸ்கூல் கொஞ்சம் வித்தியாசமானது.......வியாபாரமா மாறிட்ட பள்ளிகூடங்கள் மத்தில இவங்க பணத்துக்கு மதிப்பு கொடுக்காதவங்க....எல்லாருக்கும் பள்ளிக்கூடம்னா அவங்க பிரண்ட்ஸ் ஞாபகம் வருவாங்க...ஆனா அவங்களுக்கு முன்னாடி எங்களுக்கு எல்லாம் ஞாபகம் வர்றது எங்க அறிவியல் ஆசிரியை கற்பகம் மிஸ் தான்.......எங்க பள்ளில படிச்ச யாராலயும் அவங்கள மறக்க முடியாது.....(எல்லாரும் பிளாஷ்பேக் கேக்க ரெடி ஆயிடுங்க).......

அப்ப நாங்க எல்லாம் பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தோம்....அறிவியல் வகுப்பு வந்தாலே எல்லாரும் ரொம்ப குஷி ஆயிடுவோம்...ஆமாங்க கதை கேக்கற்துனா எல்லாருக்கும் விருப்பமாதானே இருக்கும்......அவங்க எப்போதுமே ஒரு கதையோட தான் வகுப்பை ஆரம்பிப்பாங்க...அந்த கதையோட முடிவுல எப்போதும் நமக்கு வாழ்கைக்கு தேவையான கருத்து இருக்கும்.....வெறும் கருத்த மட்டும் சொல்லாம கதையோட சொல்றதுனாலா அது எங்க மனசுல நல்லா பதிஞ்சு போய்டும்......

அன்னிக்கி எங்களுக்கு இறுதி வகுப்பு... ”ஹலோ பிரண்ட்ஸ் என்ன எல்லாரும் பப்ளிக் எக்ஸாம்க்கு தீவிரமா படிச்சிட்டு இருக்கிங்களா??நீங்க படிக்கறது ஒரு புறம் இருக்கட்டும்..இப்ப நீங்க உங்க உடல் நிலையை நல்லபடியா கவனிசுக்கனும்..நா உங்களுக்கு சொல்ற கடைசி அறிவுரை இதுதான்...ஏன்னா உங்கள்ள பல பேர் அடுத்த கட்ட படிப்புக்கு வேற இடத்துக்கு போகலாம்....

வாழ்க்கைல நீங்க பல கட்டத்துக்கு போகலாம்...எப்போதும் எல்லாமே ஈசியா கிடைச்சுடாது அதுக்காக பல போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்..அதுக்கு உங்களுக்கு எப்போதும் பொறுமை ,விடாமுயற்சி மற்றும் முக்கியமா மனச அலைப்பாய விடாத தன்மை வேணும்...அப்பறம் நீங்க செய்ற விஷயம் எதாவது ஒரு விதத்திலயாது சமூகத்துக்கு நல்லது செய்ற மாதிரி இருக்கனும்....நீங்க எல்லாம் வாழ்க்கைல எப்ப உயர்ந்த கட்டத்துக்கு போறிங்களோ அப்பதான் நாங்க வெற்றி பெற்றதா அர்த்தம்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.