(Reading time: 14 - 27 minutes)

ம்மா அப்பா அண்ட் ரூபி

எனக்கு ஒரு சின்ன எமெர்ஜென்சி. நான் கண்டிப்பாக போயே ஆகனும். எனக்காக அதுவரைக்கும் சமாளிங்க. நான் சீக்கிரம் வந்துருவேன்.

இப்படிக்கு

ரியா.

மஹாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பின்னால் வந்த விஜயனிடம் விஷயத்தை தெரிவித்தவர். தன் அடுத்த மகள் ரூபன்யாவை கெஞ்சி கொஞ்சி தயாராக சொன்னார். முடியாது என்று மறுத்த ரூபாவிற்கு கிடைத்தது கன்னம் பழுக்க ஒரே ஒரு அறை தான்.

“அக்காவும் தங்கச்சியும் என்ன விளையாடுறீங்களா. கொன்னுருவேன். எமெர்ஜென்சியாம் எமெர்ஜென்சி. இதை விட என்ன எமெர்ஜென்சி உன் அக்கா கண்டாளாம். நான் அடுத்து வரதுக்குள்ள நீ ரெடியாகி இருக்க. அவ வரேன்னு சொல்லிருக்கா இல்ல. வரட்டும். இல்லாட்டி நீ தான் தேவ்விற்கு மனைவி” என்று மிரட்டியவர் வெளியே சென்று விட்டார்.

மஹாவிற்கு புரிந்தது. ரிதன்யாவிற்கு கண்டிப்பாக போயே ஆகவேண்டும். அதனால் மட்டுமே சென்றுள்ளாள், இல்லையென்றால் சென்றிருக்கமாட்டாள். இதை ரூபன்யாவிடம் கூறினால் சட்டம் பேசுவாள். அதானாலேயே மிரட்டிவிட்டு வந்தார். விஜயனும் தனியாக தேவ்விடம் சென்று சொல்லி விட்டார். தேவ்விற்கும் ரிதன்யாவின் வேலை பற்றி தெரிந்ததால் ஏதும் யாரிடமும் கூறவில்லை. அவனும் அவளை தொடர்பு கொள்ள முயற்சித்தான். ரிதன்யாவோ கைப்பேசியை இங்கேயே விட்டுச்சென்ற காரணத்தால் தேவ் ரிதன்யாவை தொடர்பு கொள்ள இயலவில்லை. ஆனால் இந்த விஷயங்கள் அனைத்தும் ரூபன்யாவிற்கு யாரும் தெரியப்படுத்தவில்லை. அதனால் எங்கே ரிதன்யாவின் வாழ்க்கையை பறித்து விடுவோமோ என்ற குற்றவுணர்வுடனேயே இருந்தாள் ரூபன்யா.

சுற்றம் அனைத்தும் சென்றவுடன் சொற்ப சொந்தங்களே மண்டபத்தில் இருந்தனர் மணமக்கள் இருவரும் மேடையை விட்டு கீழே இருந்த நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். மஹா ரிதன்யாவிடம் சென்று அமர்ந்தார்.

“எங்கடி போன, அப்படி என்ன முக்கியமான வேலை, நீ வரலைன்னா என்ன ஆகிருக்கும்னு யோசிச்சு பார்த்தாயா, மனசு கொஞ்ச நேரத்துல பதற ஆரம்பிச்சுருச்சு” என்று பொரிய ஆரம்பித்தார்.

அவர் ரிதன்யாவின் அருகில் சென்று பேச்சை ஆரம்பித்தவுடன் ரூபன்யாவும் அருகில் வந்துவிட்டாள். ‘ஐயோ இந்த அம்மாக்கு பொறுமையே இல்ல’

“சாரிம்மா, நைட் 1 மணிக்கே கால் வந்துருச்சு, ரொம்பவே முக்கியமான கேஸ், ஹாண்டில் பண்ற விக்டர் டெல்லி போய்ட்டாரு’ என்று தாயிடம் மன்னிப்பு கேட்டாள். மஹாவோ “அப்படி என்னடி முக்கியமான கேஸ், உன் கல்யாணத்துல இருந்து போற மாதிரி” என்று கோபமுடன் கேட்க,

தாயின் கைகளை ஆதுரமாக பற்றிக்கொண்டு, “நேத்து மார்னிங் அட்மிட் ஆன ஒரு 3 வயசு குழந்தைக்கு திடீர்னு மூச்சுத்திணறல் வந்துருச்சும்மா, அதான் நர்ஸ் போன் பண்ணினாங்க. அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு, இப்படி என்னை வரவச்சதுக்கு. விக்டரும் இல்ல, பிரமோத் இப்பதான் கேஸ் எல்லாம் தனியா ஹாண்டில் பண்றான், யாரும் இல்லாட்டி என்ன தான் பண்ணுவாங்க” என்று ஒரு குழந்தைகள் நல மருத்துவராக பொறுமையுடன் ரிதன்யா விளக்க, “இப்ப அந்த குழந்தை எப்படி இருக்கு?” என்று தாயுள்ளம் பதறியது.

“ஓகே தான் ஆனா இன்னைக்கு பூராவும் அப்சர்வேஷன்ல இருக்கணும்” என்று முடித்தாள் ரிதன்யா. ஏதோ ஒரு வகையில் சமாதானமான மஹா எழுந்து சென்றார்.

“நல்லவேளை நீயும் நானும் உருவத்துல ஒரே மாதிரி இருக்குறதுனால தப்பிச்சோம், இல்லாட்டி என் நிலைமை அவ்வளவு தான், அம்மா என்னடானா வாயே திறக்காத இல்லாட்டி உன்னை கொன்னுருவேன்னு மிரட்டுறாங்க, உன் ஆளுக்கு என் நிலைமையை பார்த்து சிரிப்பு சிரிப்பா வருது, போதாகுறைக்கு என்னை மிரட்ட வேற செஞ்சாங்க, எனக்கு ஒரே பயமா போச்சு” என்று பெருமூச்சுடன் கண்சிமிட்டியபடி குறும்பாக கூறினாள் ரூபன்யா.

“ஆமா ஆமா அம்மணி ரொம்ப தான் பயந்தவங்க”, என்று ரூபன்யாவை கிண்டல் செய்த தேவ் “ஒரு அஸிஸ்டன்ட் கமிஷ்னரையே மாமியார் வீட்டுக்கு அனுப்புறேன்னு நக்கலா சொல்றா உன் தங்கச்சி, அவளா பயந்தவ” என்று ரிதன்யாவிடம் கூறினான். இரு சகோதரிகளும் அவனைப்பார்த்தனர். ரிதன்யா காதலுடன் ரூபன்யாவோ முறைப்புடன்.

“சாரி ரூபி, உன்கிட்ட சொல்லிட்டு போயிருக்கனும், ஒரு உயிரை காப்பாத்துற அவசரத்துல கிளம்பிட்டேன். உன்னை எழுப்பவும் மனசே வரல, அம்மா பார்த்துப்பாங்கனு தெரியும், டாடியும் ஓரளவு சமாளிப்பாங்க, நீ எப்படி சமாளிச்ச” என்று அவளின் தோளோடு கட்டிக்கொண்டு கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.